search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvallikeni Parthasarathy Temple"

    • ஐந்து மூலவர் ஸ்தலம் அல்லது பஞ்ச மூர்த்தி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.
    • மூலவர் திருமேனியே கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது.

    "இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும்

    இன்பன், நற்புவி தனக்கு இறைவன்

    தன்துணை ஆயர் பாவை நப்பின்னை

    தனக்கிறை, மற்றையோர்க் கெல்லாம்

    வன்துணை, பஞ்ச பாண்டவர்க்காகி

    வாயுரை தூது சென்று இயங்கும்

    என்துணை எந்தை தந்தை தம்மானை''

    திருவல்லிக்கேணி கண்டேனே என்று திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட, திருத்தலம் சென்னையில் புகழ் பெற்ற தலம்.

    என்ன சிறப்பு என்றால், பிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திர வரதர் மற்றும் யோக நரசிம்மர் தனித் தனி சந்நதிகளில் அருள்பாலிக்கின்றனர். அதனால் இத்தலம் ஐந்து மூலவர் ஸ்தலம் அல்லது பஞ்ச மூர்த்தி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.

    ரங்கநாதர் சந்நதியில் சுவாமியின் திருமுடிக்கு அருகில் வராகரும், திருவடிக்கு அருகில் நரசிம்மரும் உள்ளனர். இங்குள்ள மூலவர் திருமேனியே கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது.

    நின்றான் கோலத்துக்கு வேங்கடகிருஷ்ணர், அமர்ந்தான் கோலத்துக்கு தெள்ளியசிங்கர் என்றழைக்கப்படும் நரசிம்மர், கிடந்தான் கோலத்துக்கு மன்னாதர் என்றழைக்கப்படும் ரங்கநாதர். இந்த மூன்று நிலைகளுமே வீரம், யோகம், போகம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அருள்வதாக அமைந்துள்ளன.

    அதனால் ஒவ்வொரு மூலவருக்கும் தனித் தனி உற்சவங்கள் நடக்கும். இன்று முதல், ஸ்ரீ ரங்கநாதருக்கு 3 நாட்கள் வசந்த உற்சவம்.

    • சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • அங்குரார்ப்பணம் சேனை முதன்மையாள் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் வருகிற 23-ந்தேதி முதல் மே மாதம் 2-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.

    10 நாட்கள் இவ்விழாவை நடத்த கோவில் அறங்காவலர் குழு ஏற்பாடு செய்து உள்ளது. 22-ந்தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை துலா லக்னம் அங்குரார்ப்பணம் சேனை முதன்மையாள் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 23-ந்தேதி காலை 8 மணி முதல் 8.45 மணிக்குள் சுவாமிக்கு ரிஷப லக்னத்தில் துவஜா ரோகனம் நடக்கிறது.

    அதிகாலை 5.30 மணிக்கு தர்மாதி பீடம் இரவு 7.45 மணிக்கு புன்னைமர வாகன ஊர்வலம் நிகழ்ச்சி நடக்கிறது. 24-ந் தேதி காலை 6.15 மணிக்கு சேஷ வாகனம்- பரமபதநாதன் திருக்கோலம் இரவு 7.45 மணிக்கு சிம்ம வாகன ஊர்வலம் நடக்கிறது.

    25-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு சாமி கருட சேவை-கோபுர வாசல் தரிசனமும் பகல் 12 மணிக்கு ஏகாந்த சேவையும் இரவு 7.45 மணிக்கு அம்ச வாகன ஊர்வலம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26-ந் தேதி காலை 6.15 மணிக்கு சூரிய பிரவை வாகனம், இரவு 8 மணிக்கு சந்திர பிரவை வாகனம்.

    27-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கு ஊர்வலம், இரவு 8.15 மணிக்கு அனுமந்த வாகனம் 28-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சூர்ணாபிஷேகம், காலை 6.15 மணிக்கு ஆனந்த விமானம் இரவு 8 மணிக்கு யானை வாகன ஊர்வலம் நிகழ்ச்சி நடக்கிறது.

    29-ந் தேதி அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணிக்கு கும்ப லக்னத்தில் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் காலை 7 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் இரவு 9 மணிக்கு தோட்டத்திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    30-ந் தேதி காலை 6.15 மணிக்கு பல்லக்கு வெண்ணெய் தாழி, கண்ணன் திருக்கோலம், இரவு 8.15 மணிக்கு குதிரை வாகன ஊர்வலம் நடக்கிறது.

    மே 1-ந் தேதி காலை 6.15 மணிக்கு ஆளும் பல்லக்கு- தீர்த்தவாரி, இரவு 7.45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு 10-ம் நாள் மே 2-ம் தேதி சப்தவர்ணம்- சிறிய திருத்தேர் ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    3-ந் தேதி முதல் 10-ந்தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது. இது தவிர தினமும் மாலை 5.30 மணிக்கு பக்தி உலாத்தல் நடக்கிறது. மே 1-ந்தேதி சாமி புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளின் அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்தசாரதி கோவிலின் துணை ஆணையர் நித்யா செய்து வருகிறார்.

    ×