என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Triplicane Parthasarathy Temple"
- ஜூலை 3-ந்தேதி தேர்த் திருவிழா நடக்கிறது.
- 5-ந்தேதி ஆளும் பல்லக்கு, தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில், யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
ஆண்டுதோறும் பார்த்த சாரதி சுவாமிக்கு சித்திரை மாதமும் மற்றும் நரசிம்ம ருக்கு ஆனி மாதமும் பிர மோற்சவம் நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டிற்கான நரசிம்மர் பிரம்மோற்சவம் வரும் நாளை (27-ந் தேதி) துவங்குகிறது.
அன்றைய தினம் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் துவஜாரோகணம் எனும் கொடியேற்ற விழா நடக்கிறது.
விழாவின் இரண்டாம் நாளான 28-ந் தேதி இரவு, சிம்ம வாகனத்தில் உற்சவர் தெள்ளியசிங்கர் அருள்பாலிக்கிறார். 29-ந் தேதி கருடசேவை உற்சவம் நடக்கிறது. அன்று காலை 5.30 மணிக்கு கோபுர வாசல் தரிசனமும், இரவு அம்ச வாகன புறப்பாடும் நடக்கிறது.
பிரம்மோற்சவத்தின், 5-ம் நாள் விழாவான ஜூலை 1-ந் தேதி காலை பல்லக்கில் நாச்சியார் திருக்கோலமும், மாலை யோக நரசிம்மன் திருக்கோல புறப்பாடும், இரவு அனுமந்த வாகன புறப்பாடும் நடக்கிறது.
விழாவின் பிரதான நாளான, ஜூலை 3-ந் தேதி தேர்த் திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் உற்சவர் தேரில் எழுந்தருளுகிறார்.
காலை 7.15 மணிக்கு பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. வரும், ஜூலை, 5-ந் தேதி ஆளும் பல்லக்கு, தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. அன்று இரவு அவரோஹணம் எனும் கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
- இன்று இரவு அனுமந்த வாகனம் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
- 12-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 13-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. தர்மாதி பீடம், புன்னைமர வாகனம், சேஷ வாகனம்- பரமபதநாதன் திருக்கோலம், சிம்ம வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 6-ந்தேதி கருட சேவை- கோபுரவாசல் தரிசனம், ஏகாந்த சேவை, அம்சவாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.
விழாவில் இன்று (திங்கட்கிழமை) காலை 5.30 மணிக்கு பல்லக்கு நாச்சியார் திருக்கோலம் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8.30 மணிக்கு அனுமந்த வாகனம் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) காலை தேரோட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு பெருமாள் தேரில் எழுந்தருளல், காலை 7 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. தொடர்ந்து வருகிற 12-ந்தேதி காலை 6.15 மணிக்கு ஆளும் பல்லக்கு- தீர்த்தவாரியும், அன்று இரவு 7.45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.
- பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
- அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷங்கள் எழுப்பினார்கள்.
சென்னை:
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இங்கு நின்ற கோலத்தில் வீர நிலையில் மீசையுடன் வெங்கட கிருஷ்ணராகவும் யோக நிலையில் யோக நரசிம்மராகவும், யோகசயன நிலையில் ஸ்ரீரங்கநாதராகவும் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலிக்கிறார்.
இந்த ஆண்டும் இங்கு வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக கடந்த 23-ந்தேதி திருமொழித் திருநாள் எனப்படும் பகல் பத்து விழா தொடங்கி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாய்மொழி திருநாள் எனப்படும் ராப்பத்து விழாவும் நடைபெற உள்ளது. இந்த திருவிழாக்கள் ஜனவரி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக பார்த்தசாரதி பெருமாள் வந்து நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷங்கள் எழுப்பினார்கள்.
அதன்பிறகு அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பொது தரிசனம் நடக்கிறது.
- மாடவீதிகளை சுற்றி வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.
- பக்தர்களுக்கு லட்டு மற்றும் கற்கண்டு பிரசாதமாக வழங்கப்படும்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வைகுண்ட ஏகாதசி விழா தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பார்த்தசாரதி கோவிலுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் விழாவை சிறப்பாக நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 4 இணை கமிஷனர்கள், 5 உதவி கமிஷனர்கள், வைணவ கோவில்கள் அல்லாத பிற கோவில்களின் செயல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வெள்ளிக்கிழமை (இன்று) முதல் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எளிய முறையில் விரைவாக தரிசனம் செய்திட வசதியாக ஒழுங்குப்படுத்தும் பணிகளை மேற்கொள்வார்கள்.
பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்ய வரிசைமுறை நீட்டிக்கவும், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதிகள், மருத்துவ முகாம்களும், அவசர ஊர்திகளும் ஏற்படுத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியின் மூலம் சுழற்சி முறையில் 150 தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தி தூய்மை பணிகள் மேற்கொள்ளவும், 1,500 போலீசாரை கொண்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும், 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி முககவசம் அணியவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும் மக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். மாடவீதிகளை சுற்றி வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி இல்லை. என்.கே.டி. பள்ளி மற்றும் வெலிங்டன் பள்ளி வளாகங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி நாளன்று பக்தர்களுக்கு லட்டு மற்றும் கற்கண்டு பிரசாதமாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருவிழாக்கள் ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெற உள்ளன.
- ஜனவரி 2-ந்தேதி இரவு 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம் நடக்கிறது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இங்கு நின்ற கோலத்தில் வீர நிலையில் மீசையுடன் வெங்கட கிருஷ்ணராகவும் யோக நிலையில் யோக நரசிம்மராகவும், யோகசயன நிலையில் ஸ்ரீரங்கநாதராகவும் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலிக்கிறார்.
இந்த ஆண்டும் இங்கு வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக கடந்த 23-ந்தேதி திருமொழித் திருநாள் எனப்படும் பகல் பத்து விழா தொடங்கி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாய்மொழி திருநாள் எனப்படும் ராப்பத்து விழாவும் நடைபெற உள்ளது.
இந்த திருவிழாக்கள் ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெற உள்ளன.இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாக வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி 2-ந்தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 2.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை மூலவர் தரிசனம் நடைபெறும். இதையொட்டி அதிகாலை 4.15 மணிக்கு உள் பிரகார புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.
அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வார்கள். அதன் பிறகு அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் நடக்கிறது.
இரவு 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம் நடக்கிறது. 11.30 மணக்கு பார்த்த சாரதி சுவாமி உற்சவர், நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடு நடைபெறுகிறது.
- தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- தேர் நிலைக்கு வந்ததும் பக்தர்கள் தேரின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மர் ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3-ம் நாள் கருடசேவை உற்சவம் விமரிசையாக நடந்தது.
5-ம் நாள் விழாவில் பல்லக்கு நாச்சியார் திருச்சேவை புறப்பாடு நடந்தது. அதைத் தொடர்ந்து யோக நரசிம்மர் திருக்கோலத்தில் உற்சவர் புறப்பாடு நடந்தது.
விழாவின் 7-ம் நாளான இன்று முக்கிய விழாவாக தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 மாட வீதிகளை சுற்றி வலம் வந்தது. தேருக்கு முன்பு இசை வாத்தியம் முழங்க பக்தி பாடல்களை பாடியபடி பக்தர்கள் வந்தனர்.
தேர் நிலைக்கு வந்ததும் பக்தர்கள் தேரின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றபடி தேரில் ஏறி சாமி தரிசனம் செய்தனர்.
தேர் வலம் வந்த மாட வீதி முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானங்கள் மற்றும் குளிர்பானங்களை பொதுமக்கள் வழங்கினார்கள். மாட வீதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளின் முன்பும் கோலம் போடப்பட்டு இருந்தது.
- இன்று மாலை அங்குரார்ப்பணம் என்னும் முளையிடுதல் விழா நடக்கிறது.
- தேர்த்திருவிழா வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது.
சென்னை :
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பார்த்தசாரதி சுவாமிக்கு சித்திரை மாதமும், நரசிம்மருக்கு ஆனி மாதமும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நரசிம்ம பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் நாளை (7-ந்தேதி) தொடங்குகிறது.
இதையொட்டி இன்று மாலை அங்குரார்ப்பணம் என்னும் முளையிடுதல் விழா நடக்கிறது. நாளை காலை 7.30 மணிமுதல் 8.30 மணிக்குள் கொடி ஏற்றப்படுகிறது.
2-ம் நாள் விழாவான வருகிற 8-ந்தேதி இரவு சிம்ம வாகனத்தில் உற்சவர் தெள்ளிய சிங்கர் அருள்பாலிக்கிறார். 9-ந்தேதி கருட சேவையும், கோபுர வாசல் தரிசனமும் நடக்கிறது. 11-ந்தேதி இரவு அனுமந்த வாகன புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.
முக்கிய விழாவான தேர்த்திருவிழா வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். அன்று இரவு தோட்டத்திரு மஞ்சனம் நடக்கிறது. வருகிற 15-ந்தேதி உற்சவம் நடக்கிறது. 17-ந்தேதி முதல் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவுபெறும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்