என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » trump putin meeting
நீங்கள் தேடியது "Trump Putin meeting"
ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த பின்லாந்து வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டு அதிபர் சவுலி நீனிஸ்டோவை சந்தித்து உணவருந்தினார். #TrumpPutinmeeting #HelsinkiMeeting
ஹெல்சின்கி:
அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்புக்கு பின்னர், உலகம் உற்றுநோக்கும் மற்றொரு நிகழ்வாக டிரம்ப் - புதின் சந்திப்பு எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா - ரஷியா இடையே இன்னும் பல விஷயங்களில் பனிப்போர் நீடித்து வரும் நிலையில், டிரம்ப் - புதின் சந்திப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் இன்னும் சிறிது நேரத்தில் இரு தலைவர்களும் சந்தித்து பேச இருக்கின்றனர். இதற்கான, ஹெல்சின்கி வந்துள்ள டிரம்ப், பின்லாந்து அதிபர் சவுலி நீனிஸ்டோவை இன்று சந்தித்தார். அதிபர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின் போது சவுலியுடன் டிரம்ப் ஒன்றாக காலை உணவு அருந்தினார்.
ஒன்றுபட்ட சோவியத் யூனியன் - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடந்த இடமான பின்லாந்தில் தற்போது ரஷியா - அமெரிக்கா சந்திப்பு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் டிரம்ப் - புதின் சந்திப்பு நடக்க உள்ளதாகவும் இந்த சந்திப்பு அடுத்த மாதம் (ஜூலை) 16-ந்தேதி நடப்பதாக இருதரப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
வாஷிங்டன் :
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பதவியேற்ற பின் இதுவரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை. ஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தது மட்டுமின்றி, தொலைபேசி வாயிலாகவும் பேசி இருக்கின்றனர். இந்த நிலையில் இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகளை வெள்ளை மாளிகையும், கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்டு வந்தன. இதில் 3-வது நாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஐரோப்பிய நாடான பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் இந்த பேச்சுவார்த்தையை நடத்துவது என தற்போது முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சந்திப்பு அடுத்த மாதம் (ஜூலை) 16-ந்தேதி நடப்பதாக இருதரப்பும் அதிகாரப்பூர்வமாக நேற்று முன்தினம் அறிவித்தன. இந்த தேதியையும், இடத்தையும் உறுதி செய்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் தெரிவித்தார்.
முதலில் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், பின்னர் தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கும் அவர்கள், கூட்டு பிரகடனம் ஒன்றையும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

×

X