என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udhayanidhi Stalin"

    • இளைஞர்களிடையே E-SPORTS பிரபலம் அடைந்து வருகிறது.
    • சென்னையில் இந்தாண்டு E-SPORTS உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படும்.

    தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

    அதன்படி சென்னையில் இந்தாண்டு E-SPORTS உலக சாம்பியன் போட்டி நடத்தப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    அதில், இளைஞர்களிடையே E-SPORTS பிரபலம் அடைந்து வருவதால், சென்னையில் இந்தாண்டு E-SPORTS உலக சாம்பியன் போட்டி நடத்தப்படும்.

    2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டில் E-SPORTS சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள உலக சாம்பியன் போட்டி, இந்தியாவின் முக்கியமான E-SPORTS நிகழ்வாக அமையும் என கூறினார்.

    • தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு மட்டும் அல்ல, எந்த திணிப்பும் கொண்டுவர முடியாது.
    • ஊர்தோறும் திட்டங்களை கொண்டு சேர்ப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    * முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி எனது காரில் ஏறியபோது நான் ரூட் மாறமாட்டேன் என்றார். ஆனால் டெல்லியில் மாறிவிட்டார்.

    * டெல்லியில் 3 கார்கள் மாறித்தான் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார்.

    * பாசிஸ்டுகள் எத்தனை ரூட்டுகள் போட்டு அடக்க நினைத்தாலும் பட்ஜெட்டில் ஒரே ஒரு ரூ போட்டு அலற செய்தவர் முதலமைச்சர்.

    * எதிர்க்கட்சி தலைவரானாலும் அவருடன் கூட்டணி வைக்க துடிப்பவர்களும் ஆக்கப்பூர்வ அரசியல் செய்க.

    * தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு மட்டும் அல்ல, எந்த திணிப்பும் கொண்டுவர முடியாது.

    * ஊர்தோறும் திட்டங்களை கொண்டு சேர்ப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    * இந்திய ஜனநாயகத்தின் போர்க்குரல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    * நான் பதில் சொல்லும் போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் அவையில் இருப்பதில்லை என்றார். 

    • சென்னை புறநகரில் மட்டும் 1.36 லட்சம் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
    • விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    * காலை உணவு திட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் பங்களிப்பு உள்ளது.

    * இந்த ஆண்டு சுயஉதவி குழுவினருக்கு ரூ.37,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    * சென்னை புறநகரில் மட்டும் 1.36 லட்சம் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

    * வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 3.O விரைவில் தொடங்கப்பட்டு விடுபட்ட ஒன்றியங்களும் சேர்க்கப்படும்.

    * கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.21 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    * கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு வழங்கப்படும்.

    * விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது என்றார். 

    • சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார்.
    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று உடல்நலக்குறைவுடன் பேரவைக்கு வந்திருந்தார்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார். இதேபோல துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துறையான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை-சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மானிய கோரிக்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

    அப்போது உதயநிதி ஸ்டாலின் சட்டசபைக்கு வராதது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று உடல்நலக்குறைவுடன் பேரவைக்கு வந்திருந்தார். இன்று கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க அறிவுரை வழங்கியுள்ளனர். எனவே, நான் மானியக் கோரிக்கையை முன் வைக்க கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

    • துணை முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    கோவை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை கோவை வருகிறார்.

    இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக நாளை காலை 11 மணிக்கு கோவைக்கு வருகை தருகிறார்.

    கோவை விமான நிலையத்தில் அவருக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் அ.ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் தலைமையில் பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    அதனை தொடர்ந்து அவர் கார் மூலமாக வடகோவையில் உள்ள தமிழ்நாடு வனக்கல்லூரிக்கு செல்கிறார்.

    அங்கு நடைபெறும் வனப்படை நவீனமயமாக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் அவர், வனக்காவலர்களுக்கு ஆயுதங்கள் வழங்குகிறார்.

    பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறுமுகை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டையில் ரூ.19.50 கோடி மதிப்பில் 20 ஹெக்டேர் பரப்பளவில் அதிநவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள வன உயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தையும் திறந்து வைக்க உள்ளார்.

    அதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாக விளையாட்டு மைதானத்தில் ரூ.9.67 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி தளத்துடன் அமைய உள்ள ஆக்கி மைதானத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    அத்துடன் கோவை மாவட்டத்தில் ரூ.38.08 கோடி மதிப்பில் 69 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, ரூ.61.15 கோடி மதிப்பில் 140 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு நடைபெறும் விழாவில் பங்கேற்று 40 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், வன உயிரின காப்பாளர், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொள்ளும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    ஆக்கி மைதானத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையொட்டி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மைதானத்தை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    விழாவில் கோவை மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இதற்காக விழா நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கும் பணி மற்றும் பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் போடும் பணியும் நடந்து வருகிறது. அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

    துணை முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    • பல தசாப்தங்களாக, இங்குள்ள மாநிலங்கள் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
    • தமிழ்நாட்டில் நாங்கள் கொள்கைகளை அறிமுகப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வரும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பல தசாப்தங்களாக, இங்குள்ள மாநிலங்கள் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் நாங்கள் கொள்கைகளை அறிமுகப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். அதன் மூலம் நிலையான மக்கள்தொகை வளர்ச்சியை அடைந்தோம்.

    * வேறு சில மாநிலங்கள் விரைவான மக்கள்தொகை வளர்ச்சியை தொடர்ந்து அனுபவித்தாலும், தமிழ்நாடு பொறுப்புடன் செயல்பட்டது. இதன் விளைவாக, பல மாநிலங்களை விட மிக முன்னதாகவே மக்கள்தொகை மாற்று விகிதத்தை அடைந்தோம். ஆனால் இந்த சாதனைக்கு வெகுமதி பெறுவதற்குப் பதிலாக, தற்போது அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளோம் என்றார். 



    • மருத்துவர்களைத் தொடர்புகொண்டு ஏ.ஆர்.ரகுமானின் உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்!
    • இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சார் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன் என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நிலையில், நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

    இந்த நிலையில், ஏ.ஆர். ரகுமான் உடல் நலன் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்!

    அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி! என்று கூறியுள்ளார்.


    இதனிடையே, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சார் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன் என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். 



    • மொழிப்பிரச்சனையை திசை திருப்ப அவர்கள் தான் அமலாக்கத்துறை சோதனையை ஏவுகின்றனர்.
    • மொழிப்பிரச்சனை, கல்விநிதி குறித்து பல மாதங்களாக பேசி வருகிறோம்.

    சென்னையில் தமிழ்நாடு புதுமை தொழில் முனைவோர் திட்டத்தின் (Sustain TN) இணைய முகப்பினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * நாகரிகமற்றவர்கள் என சொல்பவர்கள் தான் அநாகரிகமாக பேசுகின்றனர்.

    * மொழிப்பிரச்சனையை திசை திருப்ப அவர்கள் தான் அமலாக்கத்துறை சோதனையை ஏவுகின்றனர்.

    * மொழிப்பிரச்சனை, கல்விநிதி குறித்து பல மாதங்களாக பேசி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலைஞர் இருக்கிற காலத்தில் இருந்தே எங்கள் வீட்டில் தொடர்ந்து காதல் திருமணம்.
    • மணமக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

    சென்னை:

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மக்கள் முதல்வரின் மனித நேய விழா என்ற பெயரில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தினமும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று 72 ஜோடி திருமணத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து 50 வகையான சீர்வரிசைகளை மணமக்களுக்கு வழங்கினார்.

    இந்த விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு வரவேற்று பேசினார். மணமக்களை வாழ்த்தி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    சேகர்பாபுவுக்கு 2 முகங்கள் உண்டு. ஏனென்றால் அத்தனை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். எல்லா இடத்திலேயும் இருக்கிறீர்கள். எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக போட்டியாக இருக்கிறீர்கள். முழு நேர அரசியல்வாதி. அவர் நடத்துகிற நிகழ்ச்சிக்கு பக்கத்திலே யாருமே நிற்க முடியாது. யாருமே தெரிய மாட்டார்கள். இதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அது மேடையிலே இருக்கிற அத்தனை பேருக்கும் தெரியும். அவருக்கும் தெரியும். அமைச்சர் சேகர்பாபு ஆயிரக்கணக்கான திருமணங்களை செய்து வைத்து உள்ளார். 3 வருடத்தில் மட்டும் 1700 திருமணங்களை அவரது துறை சார்பாக நடத்தி வைத்துள்ளார். அந்த வகையில் இன்று 72 ஜோடி திருமணங்களை நடத்தி வைத்து உள்ளார்.

    சீர்திருத்த முறையில், சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறோம். இதில் கலப்பு திருமணங்கள் மட்டுமின்றி, காதல் திருமணங்கள் இருக்கும் என நம்புகிறேன்.

    இந்த காலத்தில் கலப்பு திருமணம் நடப்பது பெரிய விசயம். அதில் காதல் திருமணம் என்பது இன்னும்... எனக்கும் காதல் திருமணம்தான். ஆனால் எங்கள் வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை.

    கலைஞர் இருக்கிற காலத்தில் இருந்தே எங்கள் வீட்டில் தொடர்ந்து காதல் திருமணம். கிட்டத்தட்ட இரண்டு தலைமுறையாக. எங்கள் வீட்டில் போய் யாராவது காதல் திருமணம் இல்லை, பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் என்றால் எங்கள் தாத்தா ஒரு மாதிரியாக பார்ப்பார். அந்த அளவுக்கு எங்கள் வீட்டில் காதல் திருமணம். பலருக்கும் பல அனுபவங்கள் இருக்கிறது.

    நமது அரசு அமைந்த பிறகு முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான கையெழுத்துதான். விடியல் பயணம் திட்டம். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம். கிட்டத்தட்ட 4 வருடங்களில் மட்டும் 625 கோடி முறை பயணங்கள் மேற்கொண்டு உள்ளனர். இதுதான் இந்த திட்டத்தோட வெற்றி. ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ.800-ல் இருந்து 850 வரை சேமிக்கிறார்கள்.

    நம் தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டம், செயல்படுத்த முடியாத திட்டம் இப்போது கிட்டத்தட்ட 25 மாதமாக செயல்படுத்தும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கிக் கொண்டு இருக்கிறோம். இப்படி பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செய்து கொண்டு இருக்கிறார்.

    நம் தலைவர் 2019-ம் ஆண்டு முதல் சந்தித்த அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 11 தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வெற்றியை தந்து உள்ளனர். மீண்டும் சட்டமன்ற தேர்தல் 2026-ல் வரப்போகுது. தலைவர் அதில் அத்தனை பேருக்கும் இலக்கு கொடுத்து உள்ளார். 243-ல் ஜெயித்து காட்ட வேண்டும் என்று சொல்லி உள்ளார். அது நீங்கள் இருக்கிற நம்பிக்கையில் தான்.

    எனவே மணமக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். நிறைய பெற்றுக் கொள்ளாதீர்கள். அதிலும் மத்திய அரசு பார்த்து கொண்டிருக்கிறது.

    அதாவது ஒன்றிய அரசு குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி ஜனத்தொகை அதிகமாக இருக்கிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லியது. அதை வெற்றிகரமாக செய்து கொடுத்தது தமிழக அரசு. அதற்காக இப்போது நாம் தண்டிக்கப்படுகிறோம்.

    இப்போது தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வரப் போகிறார்கள். இங்கு பாராளுமன்ற எம்.பி.க்கள் எண்ணிக்கை 39. இந்த மறுசீரமைப்பு வந்தால் 8 தொகுதி குறைந்து 31 தொகுதியாகி விடும்.

    தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7 கோடி. ஆனால் குடும்பக் கட்டுப்பாட்டை சரியாக செய்யாத, சரியாக விழிப்புணர்வை ஏற்படுத்தாத வட மாநிலங்கள் இதனால் பயன் அடைய போகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உதயநிதி ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொள்கிறார்.
    • கள்ளக்குறச்சியில் தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    பொது வாழ்க்கையில் மட்டுமல்ல குடும்ப வாழ்க்கையிலும் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். போல் இருக்க கூடாது என்ற ரீதியில் உதயநிதி ஸ்டாலின் பேசியது கலகலப்பை ஏற்படுத்தியது. உதயநிதி ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொள்கிறார்.

    அந்த வகையில் கள்ளக்குறச்சியில் தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது மணமக்களை வாழ்த்தி உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, "மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியதோடு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். போல் இருந்து விடாதீர்கள்" என்று உதாரணம் காட்டியது மண்டபத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

    • மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படம் ‘கலகத் தலைவன்’.
    • இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    கலகத் தலைவன்

    இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'கலகத் தலைவன்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.


    கலகத் தலைவன் போஸ்டர்

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கலகத் தலைவன்' திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டரை இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


    • மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படம் 'கலகத் தலைவன்'.
    • இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

     

    கலகத் தலைவன்

    கலகத் தலைவன்

    இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'கலகத் தலைவன்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. 'கலகத் தலைவன்' திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

     

    கலகத் தலைவன்

    கலகத் தலைவன்

    இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஹே புயலே பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை பாடர்கள் ஸ்ரேயா கோஷல் மற்றும் சத்யபிரகாஷ் பாடியுள்ளனர். இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    ×