என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » uk pair poisoned
நீங்கள் தேடியது "UK Pair Poisoned"
பிரிட்டனில் ரஷ்ய உளவாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதுபோன்று, கணவன்-மனைவி மீது நோவிசோக் நச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #UKPairPoisoned #NovichokAttack
லண்டன்:
பிரிட்டனில் வாழ்ந்து வந்த ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரி செர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியாவுக்கு ரசாயன விஷம் வைத்து கொல்ல முயன்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவே பொறுப்பு என ஐரோப்பிய யூனியன் குற்றம்சாட்டி உள்ளது.
இதுபோன்ற அறிகுறிகளுடன் வேறு யாரையும் இதுவரை பார்த்ததில்லை என்று காவல்துறை கூறியுள்ளது. இந்த தம்பதியர் இலக்கு வைத்து தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதற்கு எவ்வித பின்னணியும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஸ்கிரிபாலும், அவரது மகள் யுலியாவும் தாக்குதலுக்குள்ளான அதே பிரிவிடம் இருந்து, இந்த நரம்பு மண்டலத்தை தாக்குகின்ற நச்சுப்பொருளும் வந்ததா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று பெருநகர காவல்துறை உதவி ஆணையாளர் நெயில் பாசு தெரிவித்திருக்கிறார். இதற்கான சாத்தியக்கூறு பற்றி தெளிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அவர்களின் நச்சு கலக்கப்பட்ட எந்தவொரு பொருளும் கண்டறியப்படவில்லை. இந்த தம்பதியர் நச்சுத்தாக்குதலுக்கு உள்ளானதை முடிவு செய்ய அவர்களின் நடத்தை பற்றி விரிவான சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நச்சு தாக்குதல் தொடர்பாக வில்ட்ஷயர் போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #UKPairPoisoned #NovichokAttack

இந்நிலையில், பிரிட்டனில் மீண்டும் அதே போன்ற விஷ தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் வில்ட்ஷயர் கவுண்டியில் உள்ள சாலிஸ்பரி நகரில் கடந்த சனிக்கிழமையன்று தம்பதியர் சார்லி ரோவ்லெவும், டான் ஸ்டர்ஜஸூம் அவர்களின் வீட்டில் சுயநினைவிழந்த நிலையில் கவலைக்கிடமான முறையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் மீட்கப்பட்டு சாலிஸ்பரி மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. நரம்பு மண்டலத்தை பாதிக்கின்ற நோவிசோக் நச்சு வேதிப்பொருள் அவர்களின் உடலில் கலந்துள்ளது.
இதுபோன்ற அறிகுறிகளுடன் வேறு யாரையும் இதுவரை பார்த்ததில்லை என்று காவல்துறை கூறியுள்ளது. இந்த தம்பதியர் இலக்கு வைத்து தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதற்கு எவ்வித பின்னணியும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஸ்கிரிபாலும், அவரது மகள் யுலியாவும் தாக்குதலுக்குள்ளான அதே பிரிவிடம் இருந்து, இந்த நரம்பு மண்டலத்தை தாக்குகின்ற நச்சுப்பொருளும் வந்ததா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று பெருநகர காவல்துறை உதவி ஆணையாளர் நெயில் பாசு தெரிவித்திருக்கிறார். இதற்கான சாத்தியக்கூறு பற்றி தெளிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அவர்களின் நச்சு கலக்கப்பட்ட எந்தவொரு பொருளும் கண்டறியப்படவில்லை. இந்த தம்பதியர் நச்சுத்தாக்குதலுக்கு உள்ளானதை முடிவு செய்ய அவர்களின் நடத்தை பற்றி விரிவான சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நச்சு தாக்குதல் தொடர்பாக வில்ட்ஷயர் போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #UKPairPoisoned #NovichokAttack
×

X