search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Umapathi Ramaiah"

    • தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் தம்பி ராமையா.
    • ராஜாகிளி படமானது 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் தம்பி ராமையா. ஏற்கனவே சமுத்திரகனி தம்பி ராமையா, ஆகியோர் இணைந்து சாட்டை, அப்பா, வினோதய சித்தம் போன்ற படங்களில் நடித்திருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ராஜாகிளி என்ற புதிய படத்தில் இணிந்து நடித்துள்ளனர்.

    'மாநாடு', 'கங்காரு', 'மிகமிக அவசரம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் கதையின் நாயகனாக சமுத்திரக்கனியும், கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கிய வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், பழ.கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவின்.ஜி, இயக்குனர் மூர்த்தி, 'கும்கி' அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், 'கும்கி' தரணி, தீபா, பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இயக்கியுள்ளார்.

    இப்படத்திற்கு கதை , வசனம், திரைக்கதை, பாடல்வரிகள் மற்றும் இசையமைப்பாளராக தம்பி ராமையா பணியாற்றியுள்ளார். மேலும் படத்திற்கு கேதர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். நேற்று (ஜூன் 19) தம்பி ராமையாவின் பிறந்தநாளை முன்னிட்டு பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ராஜாகிளி படமானது 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    சேரன் இயக்கத்தில் உமாபதி ராமையா - காவ்யா சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `திருமணம்' படத்தின் முன்னோட்டம். #Thirumanam #Cheran #Umapathi
    பிரெனிஸ் இன்டர்நேஷனல் சார்பில் பிரேம்நாத் சிதம்பரம், வெள்ளை சேது தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `திருமணம்'.

    இந்த படத்தை இயக்கி நடித்திருக்கிறார் சேரன். இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இன்னொரு நாயகனாகவும், நாயகியாக காவ்யா சுரேசும் நடித்துள்ளனர். தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், மனோபாலா, பால சரவணன், சுகன்யா, சீமா ஜி. நாயர், அனுபமா குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - ராஜேஷ் யாதவ், இசை - சித்தார்த் விபின், படத்தொகுப்பு - பொன்னுவேல் தாமோதரன், பாடல்கள் - சேரன், லலித் ஆனந், யுகபாரதி, நடனம் - சஜ்னா நஜம், ஆடை வடிவமைப்பு - கவிதா சச்சி, தயாரிப்பு - பிரேம்நாத் சிதம்பரம், வெள்ளை சேது, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சேரன்.



    சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு படம் இயக்கியிருக்கும் சேரன் படம் பற்றி பேசும் போது,

    திருமணம் படத்தை 4 வருடங்களுக்கு பிறகு இயக்கி இருக்கிறேன். இந்த இடைவெளியில் நிறைய அனுபவங்களை பெற்று விட்டேன். இந்த அனுபவங்கள் என்னை 10 வருடங்களுக்கு வழிநடத்தும் என்று நம்புகிறேன். ஒரு நடுத்தர குடும்பத்தில் பெண் பார்க்கும் படலத்தில் தொடங்கி திருமணம் நடப்பது வரையிலான சம்பவங்களே படத்தின் கதை. இவ்வாறு கூறினார்.

    படம் வருகிற மார்ச் 1-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Thirumanam #Cheran #Umapathi #KavyaSuresh #Sukanya #ThirumanamFrom1stMarch

    திருமணம் டிரைலர்:

    “நாகரிகம் அழிந்ததைப்போல் காலப்போக்கில் திருமணமே இல்லாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்று கவிஞர் வைரமுத்து கூறினார். #Thirumanam #Cheran #Umapathi #KavyaSuresh
    ‘பொற்காலம்,’ ‘தவமாய் தவமிருந்து’ உள்பட பல தரமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர், சேரன். சில வருட இடைவெளிக்குப்பின் அவர் இயக்கியிருக்கும் படம், ‘திருமணம்.’ இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.

    விழா முகப்பை திருமண மண்டபத்தின் நுழைவுவாயில் போல் வாழை மரம் மற்றும் தோரணங்கள் கட்டி அலங்கரித்து இருந்தார்கள். முகப்பில் இருந்து நுழைவு வாயில் வரையிலான நடைபாதையை தென்னங்கீற்றுகளால் அழகுபடுத்தி இருந்தார்கள். விழா அரங்கத்திற்குள் நுழைந்ததும் பாரம்பரியமான தவில்-நாதஸ்வர கச்சேரி பரவசப்படுத்தியது. படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களும் பட்டு வேட்டி-சட்டை, பட்டு சேலை அணிந்திருந்தார்கள். விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் திருமண வீட்டுக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது.

    விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    “இயக்குனர் சேரன் நுட்பமான பார்வை உடையவர். கதையை எழுதுகிறவர் அல்ல, செதுக்குகிறவர். சேரனுக்கு நான் எழுதிய பாட்டுக்கே ஒரு வரலாறு உண்டு. ஒரு முறை சிங்கப்பூர் விமான நிலையத்தின் வெளிவட்ட சாலையில் நானும், என் நண்பரும் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தோம். எங்களை கடந்து சென்ற ஒரு பெரியவர், “நீங்கள்தானே வைரமுத்து” என்று கேட்டார். ‘ஆம் என்றேன்’. நீங்கள் எழுதிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, ‘தஞ்சாவூரு மண்ணெடுத்து’ என்றார். ‘ஏன்?’ என்று கேட்டேன்.



    “நான் தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழன். என் பூர்வீகம் எனக்கு தெரியாது. இந்த பாட்டுக்குள் தமிழ்நாட்டின் பல ஊர்களில் மண்ணெடுத்திருக்கிறீர்கள். பாட்டை கேட்கிறபோதெல்லாம் இந்த ஊர்களில் ஒன்று என் பூர்வீகமாய் இருக்குமோ என்று அடிக்கடி விரும்பி கேட்கிறேன்” என்றார். அப்படிச் சொன்னவர் வேறு யாருமல்ல. சிங்கப்பூரின் அன்றைய ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் தான். அவர் மறைந்தபோது, அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளும் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.

    அப்போது, சிங்கப்பூரின் சீன அமைச்சர் ஒலிபெருக்கியின் முன்னால் வந்தார். “இப்போது, மறைந்த ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதனுக்கு மிகவும் பிடித்த பாட்டு ஒலிபரப்பப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்படும்” என்றார். உடனே அந்த மேடையில், “தஞ்சாவூரு மண்ணெடுத்து” பாடல் ஒலிபரப்பானது. இப்படி ஒரு வரலாற்று சிறப்பு சேரன் உருவாக்கிய ‘பொற்காலம்’ படத்தில், தேவா இசையில் நான் எழுதிய பாடலுக்கு கிடைத்தது. இந்த ஒரு தடம் போதும். சேரன் இயக்குனராக வந்து சாதித்ததற்கு...

    ‘திருமணம் - சில திருத்தங்களுடன்’ என்ற படத்தை இப்போது அவர் இயக்கியிருக்கிறார். மனிதகுல வரலாற்றில் திருமணம் என்ற நிறுவனம் மிகவும் புதியது. மனிதகுலம் தனது வசதிக்கு கட்டமைத்துக் கொண்ட பிற்கால நாகரிகம்தான் திருமணம். இந்த நாகரிகம் மாறாது என்று சொல்லமுடியாது. இது மாற்றங்களோடு தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்கலாம்; காலப்போக்கில் மறைந்தே போகலாம். பல ஆயிரம் ஆண்டு கொண்ட நாகரிகங்கள் அழிந்ததைப்போல், சில ஆயிரம் ஆண்டுகள் கொண்ட திருமணமும் இல்லாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது.



    “திருமணம் என்பது முற்றுகையிடப்பட்ட கோட்டை; வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்லத் துடிக்கிறார்கள்; உள்ளே இருப்பவர்கள் வெளியே வர தவிக்கிறார்கள்” என்று ஒரு பழமொழி உண்டு. இந்தத் திரைப்படம் திருமணத்தை திருத்த பார்க்கிறதா? அல்லது திருமணத்தையே நிறுத்த பார்க்கிறதா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.”

    இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

    டைரக்டர்கள் பாரதிராஜா, மகேந்திரன், கே.எஸ்.ரவிகுமார், மாரி செல்வராஜ், கார்த்திக் தங்கவேல், செழியன், அருண்ராஜா காமராஜ், கோபி நைனார், நடிகைகள் மீனா, பூர்ணிமா பாக்யராஜ், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.  #Thirumanam #Cheran #Umapathi #KavyaSuresh

    ×