search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Undercover Investigation"

    • 50-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்களில் போலீசார் சோதனை நடத்தி வீடியோ பதிவுகளை கைப்பற்றியுள்ளனர்.
    • மசாஜ்கள் எல்லாம் பாலியல் ரீதியாகவே நடத்தப்பட்டு இளைஞர்களிடம் பணம் பறிக்கும் வித்தையாகவே மாறி இருக்கிறது

    சென்னை:

    சென்னையில் மசாஜ் சென்டர்களில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் சம்ப வங்கள் நடைபெற்று வருகிறது.

    இதனை கட்டுப்படுத்து வதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக மசாஜ் சென்டர்களில் ரகசியமாக ஆய்வு செய்யும் போலீசார் அது சட்ட விரோதமாக நடைபெறுவதாக தெரிய வந்தால் அதற்கு சீல் வைத்து வருகிறார்கள்.

    அந்த வகையில் சென்னையில் மசாஜ் சென்டர்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். கோயம்பேடு, திருமங்கலம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்களில் போலீசார் சோதனை நடத்தி வீடியோ பதிவுகளை கைப்பற்றியுள்ளனர்.


    அதில் சினிமா துணை நடிகைகள், குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த வீடியோக்களில் இடம் பெற்றுள்ள துணை நடிகைகள் பகுதி நேரமாக மசாஜ் சென்டர்களில் மசாஜ் செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள் ஆகி யோரும் மசாஜ் சென்டர்களில் பணியாற்றி வாலிபர்களுக்கு எண்ணை தேய்த்து விட்டு மசாஜ் செய்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    வாலிபர்களை மசாஜ் செய்ய அழைத்து குறுஞ்செய்திகளை வாட்ஸ் அப் வழியாகவும் இவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அதில் "அழகான பெண்கள் உங்களுக்கு மசாஜ் செய்ய காத்திருக்கிறார்கள். விரைந்து வரவும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "சலுகை விலையில் நிறைவான மசாஜ்" என்கிற பெய ரிலும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்கள்.

    இப்படி இளைஞர்களை மயக்கும் வகையில் மசாஜ் செய்யும் துணை நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் இறுதிக் கட்டத்தில் எல்லை மீறி நடந்து வாலிபர்களை மேலும் மயக்கமாக்கி கூடுதல் பணத்தை கறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு "பினிசிங் டச்" என்று பெயர் வைத்துள்ளனர்.

    தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் "கை மசாஜ்" முடியும் நேரத்தில் "உதட்டு மசாஜ்" ஆகவும் மாறி விடுகிறது. இதற்கு தனி கட்டணம் என்று கூறி கூடுதல் பணத்தையும் கறந்து விடுகிறார்கள். இப்படி மசாஜ் சென்டர்களில் ஆபாச லீலைகள் அரங்கேறுவதாக எழும் புகாரின் பேரிலும் போலீ சார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.


    தற்போது கோடை காலம் என்பதால் மசாஜ் சென்டர்களில் உடல் சூட்டை தணிக்கும் வகையிலான மசாஜ் செய்யப்படுவதாகவும் தகவல்கள் பகிரப்பட்டு வாடிக்கையாளர்கள் வசப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

    தயிர் மசாஜ், பழ மசாஜ் என்றும் அதற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். இது போன்ற மசாஜ்கள் எல்லாம் பாலியல் ரீதியாகவே நடத்தப்பட்டு இளைஞர்களிடம் பணம் பறிக்கும் வித்தையாகவே மாறி இருக்கிறது என்கிற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது.

    இதையடுத்தே மசாஜ் சென்டர்கள் மீதான போலீசாரின் பார்வை வேறு விதமாக மாறி அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    ×