search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "united nations investigate"

    ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து ஐநா சபை விசாரணை நடத்த ஆணையிட்டுள்ளது. #YemenAirStrikes
    சனா:

    ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.

    சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.

    இதற்கிடையே, ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுதி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தில் சென்ற 12 குழந்தைகள் இறந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த பேருந்தில் பயணம் செய்த 29 குழந்தைகளும் அந்த தாக்குதலில் பலியாகினர். 

    இந்நிலையில், ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் பேருந்தில் சென்ற 29 அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து ஐநா சபை விசாரணை நடத்த  ஆணையிட்டுள்ளது.

    இதேபோல், சவுதி கூட்டுப்படை நடத்திய விமான தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவும் விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #YemenAirStrikes
    ×