search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uttarakhand Tunnel"

    • எலி வளை சுரங்கத்தொழிலாளர்களும் போற்றுதலுக்குரியவர்கள்.
    • மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு எனது மகிழ்வைப் பகிர்ந்துகொள்கிறேன்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உத்தரகாசியில் சுரங்கத்தொழிலாளர்கள் நாற்பத்தொரு பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது.

    கடுமையான சவால்கள், பின்னடைவுகள் ஏற்பட்டபோதும் சளைக்காமல் தீரத்துடன் போராடி உயிர்களைக் காத்த மீட்புக் குழுவினரும், அவர்களுக்கு உதவிய எலி வளை சுரங்கத்தொழிலாளர்களும் போற்றுதலுக்குரியவர்கள். சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட தொழிலாளர்களும் மனத்திடத்தோடு காத்திருந்தது பாராட்டத்தக்கது.

    17 நாட்கள் தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் உயிர்களைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டு. மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு எனது மகிழ்வைப் பகிர்ந்துகொள்கிறேன் என கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவு அடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • இதையடுத்து, தொழிலாளர்களின் உறவினர்கள் சுரங்கத்தில் குவிந்துள்ளனர்.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசியில் கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

    சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் 41 பேரில் 15 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். உத்தர பிரதேசம் (8), பீகார் (5), ஒடிசா (5), மேற்கு வங்காளம் (3), உத்தரகாண்ட் (2), அசாம் (2), இமாசல பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.

    நுண் சுரங்கப்பாதைக்கு கிடைமட்ட துளையிடல், செங்குத்து மீட்பு சுரங்கப்பாதைக்கான கட்டுமானம் போன்ற பணிகளை மேற்கொண்டு தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவு அடைந்துள்ளது. தொழிலாளர்களை மீட்க தயார் நிலையில், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து, தொழிலாளர்களின் உறவினர்கள் சுரங்கத்தில் குவிந்துள்ளனர்.


    • உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் இன்று 11-வது நாளாக மீட்புப் பணி நடந்து வருகிறது.
    • 900 மீட்டர் குழிக்குள் 800 மீட்டர் குழாய் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் இன்று 11-வது நாளாக மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் 41 பேரில் 15 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். உத்தர பிரதேசம் (8), பீகார் (5), ஒடிசா (5), மேற்கு வங்காளம் (3), உத்தரகாண்ட் (2), அசாம் (2), இமாசல பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.

    இதற்கிடையே, நுண் சுரங்கப்பாதைக்கு கிடைமட்ட துளையிடல், செங்குத்து மீட்பு சுரங்கப்பாதைக்கான கட்டுமானம் போன்ற பணிகளை மேற்கொண்டு தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கிடைமட்ட துளையிடம் மூலமாக 39 மீட்டர் குழாய் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இது 45-50 மீட்டர் செலுத்தும்வரை தொழிலாளர்களை மீட்கும் நேரத்தை சரியாக கணிக்க முடியாது என மீட்புக்குழு தெரிவித்தது. இன்று அல்லது நாளைக்குள் 41 தொழிலாளர்களையும் மீட்பதற்கான பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மீட்புப் பணிகள் குறித்து அதிகாரி பாஸ்கர் குல்பே கூறியதாவது:

    சுரங்கத்தில் சிக்கியவர்கள் நலமுடன் உள்ளனர். சுரங்கத்தின் மற்றொரு பக்கம் துளையிட்டு வருகிறோம். இன்றிரவு அல்லது அதிகபட்சம் நாளை அதிகாலை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்.

    900 மீட்டர் குழிக்குள் 800 மீட்டர் குழாய் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. 67 மீட்டர் நீளத்தில் 39 மீட்டருக்கு தோண்டும் பணி முடிந்துள்ளது.

    18 மீட்டர் மட்டுமே இன்னும் தோண்ட உள்ளதால் இன்றிரவுக்குள் மீட்புப்பணி நிறைவடையும் என நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

    தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக வெளியே வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.

    பிரதமர் மோடி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் குறித்து முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமியிடம் விசாரித்து அறிந்தார்.

    • நிபுணர்கள் தரும் தகவல்களின் பேரிலும் மீட்பு பணிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
    • சுரங்கப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் பாறையின் தன்மை மிகவும் அடர்த்தியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதி உள்ளது. அங்கு சுமார் 4 ஆயிரத்து 500 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த சுரங்கப்பாதையில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டதால் சுரங்கப்பாதை முழுமையாக மூடிக் கொண்டது.

    சுரங்கப் பாதைக்குள் அந்த சமயத்தில் 40 தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தனர். வெளியேற முடியாத நிலையில் அவர்கள் இன்று (வியாழக்கிழமை) 5-வது நாளாக தவிப்புள்ளாகி உள்ளனர். அவர்களுக்கு சிறிய குழாய்கள் மூலம் ஆக்சிஜன் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

    சுரங்கத்தில் மண் சரிந்துள்ள பகுதி சுமார் 30 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. எனவே அந்த பகுதியில் துளையிட்டு உள்ளே செல்வதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழு, இந்தோ-திபெத் எல்லை காவல் படை, அதிவிரைவு படை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 200 பேர் தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவில் ராட்சத குழாய்கள் மூலம் 40 தொழிலாளர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 900 மி.மீட்டர் குறுக்களவு கொண்ட குழாய்கள் வரவழைக்கப்பட்டன. அந்த குழாய்களை சுரங்கப் பாதைக்குள் செலுத்துவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை துளையிடப்பட்டது.

    இந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக 40 தொழிலாளர்களை மீட்கும் பணியில் எதிர்பாராத இடையூறு உருவானது. ராட்சத குழாய்களை சுரங்கப் பாதைக்குள் துளையிட்டு செலுத்தும் பணியை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து சுரங்கம் தோண்டும் மிகப்பெரிய எந்திரத்தை கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை மூலம் நேற்று மாலை ராட்சத எந்திரம் கொண்டு வரப்பட்டது. 25 டன் எடை கொண்ட அந்த எந்திரம் மணிக்கு 5 முதல் 6 மீட்டர் தூரத்துக்கு துளையிடும் ஆற்றலை கொண்டது.

    இந்த எந்திரம் மூலம் சுரங்கப்பாதையை அடைத்துக் கொண்டிருக்கும் நிலச்சரிவு பகுதியில் உள்ள பாறைகளை துளையிடும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. 10 மணி நேரத்துக்குள் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு பாறைகளை குடைந்து துளையிட்டு சுரங்கப்பாதைக்குள் சென்று விட முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் இன்றே 40 தொழிலாளர்களையும் மீட்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே மண் சரிந்துள்ள சுரங்கப் பாதை அருகே மற்றொரு சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது. அதன்மூலமாகவும் 40 தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சுரங்கப்பாதை மீட்பு பணிகளில் சர்வதேச அளவில் நிபுணத்துவம் பெற்ற தாய்லாந்து மற்றும் நார்வே நாட்டு நிபுணர்களிடமும் ஆன்லைன் மூலம் கருத்துக்கள் கேட்கப்பட்டு உதவிகள் பெறப்பட்டுள்ளன. அந்த நிபுணர்கள் தரும் தகவல்களின் பேரிலும் மீட்பு பணிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

    சுரங்கப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் பாறையின் தன்மை மிகவும் அடர்த்தியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுவும் மீட்பு குழுவினருக்கு கடும் சவாலாக இருக்கிறது.

    ×