search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaigai Dam Park"

    • பூங்காவுக்கு வந்த வாலிபர்கள் மற்றும் காதலர்களை திரும்பிச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
    • காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பினர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இதன் அருகே அமைந்துள்ள பூங்கா சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. மேலும் உள்ளூர் மக்களுக்கும் இது சிறந்த பொழுதுபோக்கு இடமாக உள்ளது.

    இங்கு வாரம் தோறும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். இது தவிர விடுமுறை நாட்களில் அதிக அளவு நபர்கள் வருகை தருவதுண்டு.

    இன்று காதலர் தினம் என்பதால் காதல் ஜோடிகள் வைகை அணை பூங்காவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நுழைவு வாயில் முன்பு அதிக அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    அவர்கள் பூங்காவுக்கு வந்த வாலிபர்கள் மற்றும் காதலர்களை திரும்பிச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். பொது இடங்களில் காதல் ஜோடிகளைப் பார்த்தால் அவர்களுக்கு மஞ்சள் கயிறு கொடுத்து திருமணம் செய்து வைக்கப்போவதாக பல்வேறு அமைப்புகள் தயார் நிலையில் இருந்தன.

    மேலும் காதல் ஜோடிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், அவர்கள் அறிவித்திருந்தனர். இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கையாக பூங்காவுக்கு வந்தவர்களை தொடர்ந்து போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் சந்தோஷமாக பொழுதை கழிக்க வந்த காதல் ஜோடிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதே போல தேனி மாவட்டத்தின் மற்றொரு சுற்றுலா தலமாக குரங்கணி பகுதி உள்ளது. அங்கும் காதல் ஜோடிகள் குவியத் தொடங்கியதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக காதலர்கள் சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பிற இடங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதனிடையே காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பினர். இதனால் வைகை அணை பூங்கா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    வைகை அணை பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களில் வைகை அணை முக்கிய இடமாக உள்ளது. இங்குள்ள பூங்கா பகுதியில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இருப்பதால் தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆனால் பூங்கா பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்தும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடந்து வந்தது. புல்தரைகள், கண்கவர் பொம்மைகள், செயற்கை நீரூற்றுகள், வண்ண விளக்குகள், படகு குழாம் மேம்படுத்தும் பணிகள் நடந்து வந்தன. முதல் கட்டமாக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் படகு குழாம் கட்டும் பணி நிறைவடைந்தது.

    இதனையடுத்து 5 பெடல் படகுகள் இயக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி 3 ஆண்டுகளுக்கு பிறகு படகு சவாரி செயல்பாட்டுக்கு வந்தது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் படகு குழாமில் 2 பேர் செல்லும் 3 பெடல் படகுகளும், 4 பேர் செல்லும் 2 பெடல் படகுகளும் உள்ளன. 4 பேர் அமர்ந்து செல்ல ½ மணி நேரத்துக்கு கட்டணமாக ரூ.170-ம், 2- பேர் அமர்ந்து செல்ல ½ மணி நேரத்துக்கு ரூ.90-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. படகு சவாரி செய்யும்போது பாதுகாப்புக்காக லைப் ஜாக்கெட் வழங்கப்பட உள்ளது.

    பாதுகாப்பு பணிக்கு இன்னும் ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. தற்காலிக பணியாளர்களை கொண்டே பராமரித்து வருகிறோம். தற்போது வாரத்திற்கு 2 நாட்கள் (சனி, ஞாயிறு) இயக்க முடிவு செய்துள்ளோம். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் முழு நேரம் இயக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.

    வைகை அணைப் பூங்காவில் காதல் ஜோடிகளை போலீசார் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை. இதன் இருகரைகளிலும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. வைகை அணைக்கு தேனி மட்டுமல்லாது தமிழகத்தின் பிறபகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆனால் பூங்காக்களில் கள்ளக்காதல் ஜோடிகள் சில்மி‌ஷத்தில் ஈடுபடுவது குடும்பத்துடன் வருபவர்களை முகம்சுழிக்க வைக்கிறது. இதுகுறித்து போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் ஆண்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பாலகுரு, சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு வைகை அணை பூங்காவில் இருகரைகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதர்களுக்கு இடையே அத்துமீறிய காதல்ஜோடிகளை போலீசார் விரட்டியடித்தனர்.

    இதில் பிடிபட்ட 17 வயதுக்கும் குறைந்த சிறுவர்-சிறுமிகளை போலீசார் கவுன்சிலிங் கொடுத்து படிக்கவேண்டும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் கள்ளக்காதல் ஜோடிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், போலீசாரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இருந்தபோதும் வைகைஅணைப்பூங்காவில் நிரந்தரமாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும். அத்துமீறுபவர்களை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×