search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "variety pickly"

    எலுமிச்சை, மாங்காய், பூண்டு, இஞ்சி ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. அசைவ பிரியர்களுக்கு பிடித்த மீனை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மீன் - 1/2 கிலோ ( முள் இல்லாத மீன்)
    மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 3 அல்லது 4 மேஜைக்கரண்டி
    வெந்தயப்பொடி - 1 மேஜைக்கரண்டி
    பூண்டு - 1
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    வினிகர் - 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு
    கடுகு - 1 மேஜைக்கரண்டி
    கறிவேப்பில்லை - சிறிது
    நல்லெண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை  :

    இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை நன்றாக கழுவி ஈரத்தன்மை போனதும் அதன் மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.

    மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.   

    பின்னர் அதனுடன் மிளகாய் பொடி, வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

    5 நிமிடம் ஆனதும் அதில் அரை கப் வினிகர் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

    இந்த கலவை நன்கு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.

    சுவையான மீன் ஊறுகாய் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாங்காய் ஊறுகாயை பல்வேறு முறைகளில் தயாரிக்கலாம். இன்று குஜராத்தி முறையில் இனிப்பு சேர்த்து ஊறுகாய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாங்காய்த் துருவல் - 2 கப்,
    சர்க்கரை - ஒன்றரை கப்,
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
    பட்டைத்தூள், லவங்கத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள், உப்பு - தலா ஒரு டீஸ்பூன்.



    செய்முறை :

    மாங்காய்த் துருவலுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும். (மாங்காயில் சிறிதளவு தண்ணீர் விட்டிருக்கும்).

    அதனுடன் சர்க்கரை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், பட்டைத்தூள், லவங்கத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி மெல்லிய துணியால் மூடி வெயிலில் வைக்கவும் (ஏழு நாள்கள் வெயிலில் வைக்கவும்). காலையும் மாலையும் ஊறுகாயை நன்றாகக் கிளறிவிடவும்.

    சர்க்கரைப்பாகு இரண்டு கம்பிப் பதம் வந்தவுடன் வெயிலில் வைப்பதை நிறுத்திவிடவும்.

    சூப்பரான ஸ்வீட் மாங்காய் ஊறுகாய் ரெடி.

    மற்றொரு முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் வைத்து இரண்டு கம்பிப் பதம் பாகு வரும் வரை கிளறி இறக்கவும். இந்த ஊறுகாயைச் சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தக்காளி - கால் கிலோ
    பூண்டு - 6 பல்
    காய்ந்த மிளகாய் - 6
    வெந்தயப் பொடி - ஒரு டீஸ்பூன்
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    நல்லெண்ணெய், - தேவையான அளவு
    புளி - சிறிதளவு
    பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை

    வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளுங்கள்.

    மிளகாய் ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்து நீர் விடாமல் அரைத்து, பூண்டு, புளி, தக்காளியைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக சுருண்டு வதங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது வெந்தயப் பொடியைத் தூவி இறக்கிவையுங்கள்.

    இந்தத் தக்காளி ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×