search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "veerappa moily"

    • வரலாற்றில் முதல் முறையாக இந்தியா கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது.
    • 2024-ல் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வரும்.

    முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., தலைவருமான வீரப்ப மொய்லி கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி வலுப்பெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக இந்தியா கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது.

    மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை தவிர, இந்த முறை அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

    இம்முறை கூட்டணியில் சேர மாட்டேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் பின்னர் இணைவார் என எதிர்பார்க்கலாம்.

    பாஜக-என்.டி.ஏ-வுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட இந்த வகையான உறுதியான உறுதிப்பாடு இருந்தால், 2024-ல் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • குஜராத் தோல்வியில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்க வேண்டியுள்ளது.
    • திறமையான தலைவர்களை அடையாளம் காணவில்லை.

    பெங்களூரு :

    முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரப்பமொய்லி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கட்சிக்கு முன்பு வெற்றியை தேடி தந்தவர்களை கட்டாயம் மதிக்க வேண்டும். இமாசலபிரதேசத்தில் மறைந்த முன்னாள் முதல்-மந்திரி வீரபத்ரசிங்கின் மனைவிக்கு கட்சியின் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த முயற்சி அங்கு வெற்றி பெற்றுள்ளது. அங்கு 40 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.

    சோதனையான காலக்கட்டங்களில் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தியவர்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும். குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மூத்த தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்களை புறக்கணித்ததால் கட்சி தோல்வி அடைந்துள்ளது. குஜராத் தோல்வியில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்க வேண்டியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், மாநிலங்களின் மேலிட பொறுப்பாளர்கள் மற்றும் மாநில தலைவர்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்த கூடாது.

    கட்சிக்கு நேர்மையாக, விசுவாசமாக உழைத்தவர்களுக்கு உரிய பதவி வழங்க வேண்டும். 2017-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலில் 77 இடங்களில் வெற்றி பெற்று நல்ல ஆதரவை காங்கிரஸ் பெற்றது. ஆனால் அதன் பிறகு உள்ளூர் தலைவர்களுக்கு உரிய பதவி வழங்கவில்லை. திறமையான தலைவர்களை அடையாளம் காணவில்லை.

    இவ்வாறு வீரப்பமொய்லி கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 200 இடங்களில் வெற்றி பெறும் என்று வீரப்ப மொய்லி கூறியுள்ளார். #veerappamoily #rahulgandhi #bjp #congress
    முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லி செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில்,  2019 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 200 இடங்களில் வெற்றி பெறும். 

    எதிர்க்கட்சிகளில் நாங்கள் முன்னிலை வகிப்போம். மாநில வாரியாக பாராளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்து பகுப்பாய்வு செய்து பாருங்கள். பாரதீய ஜனதா கூட்டணி அரசு வீழ்ந்து விடும் என்ற முடிவுக்கு நிச்சயம் நீங்கள் வருவீர்கள் எனக் கூறியுள்ளார்.

    பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி களம் இறக்குமா? என்ற கேள்விக்கு, காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தில் பெரிய கட்சி, குறிப்பாக எதிர்க்கட்சிகளில் பெரிய கட்சி. நிச்சயமாக எதிர்க்கட்சி முன்னணிக்கு நாங்கள் தலைமை வகிப்போம். அதற்கான வாய்ப்பு சாதகமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் பிற எதிர்க்கட்சிகள் தங்களுடன் கூட்டணிக்கு வரும் எனவும் நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.  #veerappamoily #rahulgandhi #bjp #congress

    ரபேல் விவகாரத்தில் மோடியின் மோசடியை அம்பலப்படுத்துவோம் என்று பாராளுமன்ற நிதிக்குழு தலைவர் வீரப்பமொய்லி கூறியுள்ளார். #RafaleCase

    சென்னை:

    ரபேல் விவகாரத்தில் நடந்துள்ள குளறுபடிகள் பற்றி, நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று மாநில தலைநகரங்களில் முக்கிய தலைவர்கள் விளக்கம் அளித்தனர்.

    சென்னையில் பாராளுமன்ற நிதிக்குழு தலைவர் வீரப்பமொய்லி இன்று சத்தியமூர்த்திபவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் முன்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டது. நான் பிரதமரானால் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்.

    ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும். வேலையில்லா திண்டாட்டம் இருக்காது என்றெல்லாம் வாக்குறுதி அளித்தார். ஆனால் எதையும் நிறைவேற்றவிலை. மக்கள் ஏமாந்ததுதான் மிச்சம்.

     


    அதன் காரணமாகத்தான் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் மீண்டும் காங்கிரசை மக்கள் பதவியில் அமர்த்தி இருக்கிறார்கள். அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலிலும் ராகுல் தலைமையில் காங்கிரசை ஆட்சியில் அமர்த்துவதற்கான சிக்னல்தான் இது.

    ரபேல் போர் விமானம் வாங்குவதில் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. தவறான தகவல்களை சுப்ரீம் கோர்ட்டுக்கு அளித்து தீர்ப்பு பெற்றிருக்கிறார்கள்.

    இந்த விவகாரத்தில் மோடி செய்துள்ள மோசடிகள், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் அம்பலமாகும். கூட்டுக்குழு விசாரணை நடத்தாமல் விடமாட்டோம். இதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.

    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் கூறி வருகிறார்கள். ஆனால் விசாரணைக்குப் பிறகு மன்னிப்பு கேட்கப் போவது யார் என்பது வெளிச்சத்துக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக வீரப்பமொய்லியை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் சிரஞ்சீவி, தணிகாசலம், ராயபுரம் மனோகர், ஜி.கே.தாஸ் ஆகியோர் வரவேற்றனர். #RafaleCase

    ராகுல் காந்தி, அனைத்து தலைமைத்துவ தகுதி தேர்வுகளிலும் வெற்றி பெற்று மிகப்பெரும் தலைவராக உருவெடுத்து இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி கூறியுள்ளார். #AssemblyPollResults #RahulGandhi #VeerappaMoily
    ஐதராபாத்:

    சட்டசபை தேர்தல் நடந்த 5 மாநிலங்களில் சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. இது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி கூறுகையில், ‘பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தவறான நிர்வாகத்தை மக்கள் நீண்டகாலமாக பொறுத்து வந்தனர். ஆனால் சோனியா மற்றும் ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் பா.ஜனதாவினர் தாக்கி பேசியதை மக்களால் பொறுக்க முடியவில்லை. பிரதமர் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியையே இந்த வெற்றி காட்டுகிறது’ என்று தெரிவித்தார்.



    இந்த வெற்றி காங்கிரசின் வெற்றி மட்டுமின்றி அதன் தலைமைக்கும் கிடைத்த வெற்றியாகும் எனக்கூறிய வீரப்ப மொய்லி, இதன் மூலம் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தி நாட்டின் தலைவராக அதாவது பிரதமராக உருவெடுப்பார் எனவும் கூறினார். ராகுல் காந்தி, அனைத்து தலைமைத்துவ தகுதி தேர்வுகளிலும் வெற்றி பெற்று மிகப்பெரும் தலைவராக உருவெடுத்து இருப்பதாகவும் குறிப்பிட்டார். #AssemblyPollResults #RahulGandhi #VeerappaMoily
    ×