என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "vyasarpadi"
பெரம்பூர்:
சென்னை வியாசர்பாடி காந்தி நகரைச் சேர்ந்தவர் குப்புசாமி. குடுகுடும்ப்பைகாரர். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் வெங்கடேசன். ஆட்டோ டிரைவர்.
குப்புசாமிக்கும், வெங்கடேசனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது குப்புசாமி வீட்டில் இருந்த கத்தியை எடுத்துக் கொண்டு வந்து வெங்கடேசனை குத்த முயன்றார். வெங்கடேசன் அவரிடம் இருந்து கத்தியை பறித்து குப்புசாமியை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த குடுகுடுப்பைக்காரர் குப்புசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பூர்:
ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்க தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தல் பறக்கும்படையினரும், போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று இரவு வியாசர்பாடி முல்லைநகர் பஸ் நிலையம் அருகே எம்.கே.பி. நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் வாகனங்களில் சோதனை செய்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தினார்கள். அதில் ரூ.36 லட்சம் இருந்தது.
இதுபோல் மற்றொரு காரில் ரூ.20 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மினி வேனில் இருந்த பணம் மின்சார வாரியாத்துக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டது.
காரில் இருந்த பணம் டாஸ்மாக் கடையில் இருந்து வங்கிக்கு கொண்டு போகக்குடியது என்று அதில் இருந்த ஊழியர்கள் கூறினார்கள். என்றாலும் முறையான ஆவணம் இல்லாததால் 2 வாகனங்களில் இருந்த ரூ.56 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். தகுந்த ஆவணங்களை காட்டி பணத்தை திரும்ப பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெற்குன்றம் மூகாம்பிகை நகரில் இன்று காலை 10 மணி அளவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஏழுமலை கோயம்பேடு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை மடக்கி சோதனை நடத்தினர். ஒரு பையில் ரூ.11லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிப்,வாசிம் அக்ரம் ஆகிய இருவரிடமும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களிடம் பணத்திற்கான ஆவணம் இல்லாததால் ரூ.11 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை வளசரவாக்கத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஒப்படைத்தனர். #Loksabhaelections2019
பெரம்பூர்:
சென்னை வியாசர்பாடி சர்மா நகர் எருக்கஞ்சேரி சாலையில் நகை நடத்தி வருபவர் மாங்கிலால்.
இவரது நகை கடைக்கு இன்று பகலில் முதியவர் உள்பட 3 பேர் நகை வாங்க வந்தனர். கடை ஊழியர்களிடம் நகைகளை எடுத்து காட்டும் கூறினர். அவர்கள் காட்டினார்கள்.
அப்போது ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அவர்களது நடவடிக்கைகள் அமைந்ததால் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் உஷார் அடைந்த நகை கடை ஊழியர்கள் 3 பேரையும் பிடித்தனர்.
இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கடந்த வாரம் நடந்த நகை கொள்ளையில் இந்த 3 பேரும் ஈடுபட்டது வீடியோ மூலம் தெரிய வந்தது.
இதையடுத்து பிடிபட்ட 3 பேரையும் போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்து இருந்தனர். இதற்கிடையில் 3 பேரில் 2 பேர் நகை கடை ஊழியர்களை தாக்கி விட்டு தப்பி ஓடினர். முதியவர் மட்டும் சிக்கினார். அவர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்.
இந்த கும்பல் கொளத்தூர் மற்றும் வியாசர்பாடி பகுதியில் உள்ள நகை கடைகளில் நகை வாங்குவது போல கைவரிசை காட்டி கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது.
பெரம்பூர்:
வியாசர்பாடி, காந்திபுரத்தை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மகன் சஞ்சய் (வயது9). கல்யாணபுரம் மாநகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன், அதே பகுதியில் படிக்கும் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ஜீவா, 9-ம் வகுப்பு மாணவர் சரண்ராஜ் ஆகியோருடன் நேற்று காலை பள்ளி மைதானத்திற்கு விளையாட சென்றான். பின்னர் 3 பேரும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவர்கள் மாயமாகி உள்ளனர்.
இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பெரம்பூர்:
சென்னை வியாசர்பாடி 3-வது பள்ளத் தெருவை சேர்ந்தவர் டில்லி. இவரது மனைவி கெஜலட்சுமி (77). நேற்று மாலை மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். அப்போது 3 பெண்கள் கெஜலட்சுமியை அணுகி பூஜை பொருட்கள் வாங்கித் தருவதாக கூறினர்.
நீங்கள் அலைய வேண்டாம். நாங்கள் வாங்கி தருகிறோம் என்று கூறி பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளனர். பின்னர் அவரை ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். வீட்டிற்கு சென்று பார்த்த போது கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை காணவில்லை.
கெஜலட்சுமியிடம் இருந்து எப்படி நகையை அபேஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை. நைசாக பேசி கழற்றினார்களா? மாந்திரீகம் ஏதும் செய்து நகையை பறித்தார்களா என்பதை கெஜலட்சுமியால் சொல்ல முடியவில்லை.
இதேபோல வியாசர்பாடி மெகன்சிபுரத்தை சேர்ந்த செல்லம்மாள் என்பவர் பிளாட்பாரத்தில் பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். அவர் வியாபாரம் செய்து வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் அரை பவுன் நகையை காணவில்லை என்று கூறியுள்ளார். 3 பெண்கள் தன்னிடம் வந்து நைசாக பேசியதாக அவர் கூறியுள்ளார்.
வியாசர்படி போலீசில் 2 பெண்களும் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் மார்க்கெட் பகுதயில் ரகசியமாக கண்காணிக்கின்றனர். ஆட்டோவில் வந்து கைவரிசை காட்டி செல்லும் 3 பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்:
சென்னை வியாசர்பாடியில் அம்பேத்கர் கலைக் கல்லூரி உள்ளது. பொங்கல் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் கல்லூரி திறக்கப்பட்டது. மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர்.
தற்போது பஸ்தினம் கொண்டாட ஐகோர்ட்டு தடை விதித்துள்ளதால் மாணவர்கள் பஸ்சை மறித்து பொங்கல் தினம் என்ற பெயரில் பஸ் தினம் கொண்டாட முடிவு செய்தனர். இதற்காக கல்லூரியை விட்டு வெளியே வந்து எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் திரண்டனர்.
அப்போது தங்கசாலையில் இருந்து செங்குன்றம் செல்லும் மாநகர பஸ் வந்தது. அந்த பஸ்சை மாணவர்கள் வழி மறித்தனர். பின்னர் டிரைவரை கீழே இறக்கி விட்டனர். பஸ்சின் முன்புறம் மாலை அணிவித்தனர். அதன்பிறகு மாணவர்கள் பஸ்சின் மேற்கூரை மீது ஏறி டிரைவரை பஸ்சை எடுக்குமாறு கூறினார்கள். டிரைவர் பஸ்சை ஒட்டிய போது மாணவர்கள் பஸ்சின் மேற்கூரையில் பயணம் செய்தனர்.
மாணவர்கள் பஸ்தினம் கொண்டாடுவது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எம்.கே.பி.நகர் போலீஸ் உதவி கமிஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர் காளிராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஓடும் பஸ்சை தடுத்து நிறுத்தினார்கள்.
மாணவர்களை பஸ்சில் இருந்து கீழே இறக்கினார்கள். அப்போது மாணவர்கள் நாங்கள் பஸ் தினம் கொண்டாடவில்லை. பொங்கல் தினம் கொண்டாடுகிறோம் என்றனர்.
அதை போலீசார்ஏற்றுக் கொள்ளவில்லை. பஸ்சை மறித்து பஸ் தினம் கொண்டாடக் கூடாது என்று மாணவர்களை எச்சரித்தனர். பின்னர் அவர்களை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தடையை மீறி பஸ்தினம் கொண்டாடியது தொடர்பாக எம்.கே.பி.நகர் போலீசார் விசாரணை நடத்தினாரக்ள். பஸ் தினம் கொண்டாடியது தொடர்பாக அம்பேத்கார் கலைக்கல்லூரியில் படிக்கும் செங்குன்றத்தை சேர்ந்த இர்பான்பாஷா, அப்துல் அக்கீம், மணலியை சேர்ந்த பிரவீன், ஆவடியை சேர்ந்த மோகனகுமார், வியாசர்பாடியை சேர்ந்த நவீன் ஆகிய 5 மாணவர்களை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
5 மாணவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மற்ற மாணவர்கள் அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடாமல் இருக்க அம்பேத்கர் கல்லூரியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலையில் மாணவ-மாணவிகள் கல்லூரியை விட்டு வெளியேறினார்கள்.
சென்னை வியாசர்பாடி காலனியை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மகள் காமேஸ்வரி (வயது 19). இவர், கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
காமேஸ்வரி, தன்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்த வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற சுந்தர் (19) என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.
பள்ளியில் படிக்கும்போது தொடங்கிய இந்த காதல், காமேஸ்வரி கல்லூரிக்கு சென்ற பிறகும் தொடர்ந்தது. இதையறிந்த அவரது பெற்றோர், காமேஸ்வரியை கல்லூரி அனுப்பாமல் பாதியில் நிறுத்திவிட்டு, வேலைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
ஆனாலும் இருவரும் காதலை தொடர்ந்து வந்தனர். இதை அறிந்த காமேஸ்வரியின் பெற்றோர் சுந்தரை கண்டித்தனர். நேற்று காதலர்கள் இருவரும் சந்தித்து பேசினர். பின்னர் சென்னை கடற்கரைக்கு செல்வதற்காக வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்து நின்றனர்.
அப்போது இருவருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த காமேஸ்வரி, திடீரென அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி வந்த மின்சார ரெயில் முன் பாய்ந்தார். இதில் காதலன் கண் எதிரேயே அவர் தலை துண்டாகி பரிதாபமாக இறந்தார். இதை கண்ட ரெயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த பெரம்பூர் ரெயில்வே போலீசார், தற்கொலை செய்து கொண்ட காமேஸ்வரியின் உடல் மற்றும் துண்டாகி கிடந்த தலை ஆகியவற்றை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது காதலன் சுந்தரிடம் விசாரித்து வருகின்றனர். காதலனுடன் ஏற்பட்ட வாய்த்தகராறில் மனமுடைந்து காமேஸ்வரி, தானாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா?. அல்லது அவரை சுந்தர் கோபத்தில் ரெயிலில் தள்ளி விட்டு கொலை செய்தாரா? என்ற கோணத்தில் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் கையில் கத்தி வைத்து கொண்டு பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த வாலிபர்கள் சிலர் அவரை மடக்கி பிடித்து, எம்.கே.பி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையிலான போலீசார் கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 30) என்கிற வெள்ளை பிரகாஷ் என்பதும், இவர் மீது கொடுங்கையூர், வியாசர்பாடி, எம்.கே.பி நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
சென்னை:
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெற்றிவேல், ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு டி.டி.வி.தினகரன் அணியில் சேர்ந்தார்.
அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும், முதல்வர் பற்றி விமர்சித்த காரணத்துக்காகவும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதில் வெற்றிவேலும் ஒருவர். இதனைத் தொடர்ந்து வியாசர்பாடி சர்மாநகரில் உள்ள அவரது அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாநகராட்சி அதிகாரிகள் வெற்றிவேலின் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். அதன் பின்னர் தொடர்ந்து அலுவலகம் பூட்டியே கிடக்கிறது.
இந்த நிலையில் வெற்றிவேல் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்த மர்மநபர்கள் மாடி வழியாக உள்ளே புகுந்தனர்.
மாடியில் உள்ள கதவின் பூட்டை உடைத்து அலுவலகத்தில் நுழைந்த கொள்ளையர்கள் அங்கு அமர்ந்து மது அருந்தினர். பின்னர் அலுவலகத்தில் போடப்பட்டிருந்த நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்களை சூறையாடினர். மேஜையை இழுத்துப்போட்டு அதில் அமர்ந்து மது குடித்து கும்மாளமிட்டனர்.
பின்னர் அங்கிருந்த 12 மின்விசிறிகள், 2 கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பல பொருட்களை திருடிச் சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி எம்.கே.பி.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறும்போது, கொள்ளை சம்பவம் ஒரு வாரத்துக்குள் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். கொள்ளையர்கள் யார்? என்பதை போலீசார் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்றார். #MLAsDisqualificationCase #Vetrivel
வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்று வாரியம் குடியிருப்புகள் உள்ளன. 3 மாடி கொண்ட இந்த வீடுகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பழுதடைந்த குடிசை மாற்று வீடுகளை இடித்து விட்டு புதிதாக 13 மாடிகள் கொண்ட குடிசை மாற்று வாரியம் குடியிருப்புகள் கட்டுவதற்காகவும், அதனால் வீடுகளை காலி செய்யும்படி அங்கு வசிப்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
திடீரென்று வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் வீடுகளை காலி செய்ய கால அவகாசம் தரும்படி வலியுறுத்தினர். மேலும் 13 மாடி கொண்ட குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்றும் முன்பு இருந்த 3 மாடி கொண்ட குடியிருப்புகளை கட்டி தர வேண்டும் என்று கூறினர். இதை வலியுறுத்தி இன்று காலை 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாசர்பாடியில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
சாலையோரம் கைகளை கோர்த்தப்படி அணிவகுத்து நின்றனர்.
இதையடுத்து அங்கு எம்.கே.பி. உதவி கமிஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர்கள் ஜோதிலட்சும், புகழேந்தி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வியாசர்பாடி பக்தவச்சலம் 9-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவருடைய மனைவி வித்யாவதி (38). தனியார் பள்ளி ஆசிரியை.
நேற்று இரவு கணவன், மனைவி இருவரும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் கண்விழித்த ஆசிரியை வித்யாவதி வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் கட்டிலின் கீழே இருந்த டிராயரை பார்த்தார். அதுவும் திறந்து கிடந்தது. உடனே கணவரை எழுப்பி னார்.
டிராயரின் உள்ளே வைத்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி, பள்ளிக்கூடத்தில் செலுத்த வேண்டிய ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம், 2 செல்போன்கள் ஆகியவை திருடப்பட்டு இருந்தன. கணவன், மனைவி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது யாரோ கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
இதுகுறித்து மகாகவி பாரதிதாசன்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இவர்கள் வழக்குப் பதிவு செய்து நகை, பணம், செல்போன்களை கொள்ளையடித்தவர்களை தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
2 வாரங்களுக்கு முன்பு இதே தெருவில் உள்ள ராஜா முகமது என்பவர் வீட்டிலும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. வண்டிகளில் இருந்து பெட்ரோல் திருடப்படுகின்றன. போலீஸ் ரோந்து வருவது இல்லை. இதனால்தான் இதுபோன்று தொடர் கொள்ளை நடைபெறுகின்றன என்றனர்.
போலீசாரிடம் கேட்ட போது, “நாங்கள் முடிந்த அளவு ரோந்து சுற்றுகிறோம். குறைந்த எண்ணிக்கையில்தான் போலீசார் இருக்கிறோம். போலீஸ் எண்ணிக்கையை அதிகமாக்கினால்தான் எல்லா பகுதிகளுக்கும் செல்ல முடியும்” என்று கூறினார்கள்.
பெரம்பூர்:
சென்னை வியாசர்பாடி கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் பரத் என்கிற தக்காளி பரத் (வயது 38). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் மீது வியாசர்பாடி, எம்.கே.பி. நகர், செம்பியம், திரு.வி.க. நகர் போன்ற போலீஸ் நிலையங்களில் கொலை, கொலைமுயற்சி, திருட்டு வழக்குகள் உள்ளன. ரவுடி மாமூலும் கேட்டு பலருக்கு தொல்லை கொடுத்து வந்தார்.
அந்த பகுதியில் லாரியில் தண்ணீர் விற்பனை செய்யும் விகாஸ் (20) என்பவரிடம் மாமூல் கேட்டு ரவுடி தக்காளி பரத் தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் விகாசை தனது வீட்டுக்கு தக்காளி பரத் அழைத்து மதுபாட்டில் வாங்கித் தருமாறு கூறினார். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று விகாஸ் மறுத்தார். இதனால் அவரை தக்காளி பரத் சரமாரியாக தாக்கினார்.
இது தொடர்பாக விகாஸ் செம்பியம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து தக்காளி பரத்தை கைது செய்தார். ஜெயிலில் அடைக்கப்பட்ட தக்காளி பரத் கடந்த 15-ந் தேதி வெளியே வந்தார். அவரை கொலை செய்ய விகாசும், அவரது நண்பர்கள் 7 பேரும் திட்டமிட்டனர்.
இதை அறிந்த தக்காளி பரத் தனது வீட்டுக்கு செல்லாமல் மறைவான இடத்தில் தங்கி இருந்தார். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு தக்காளி பரத் வீட்டுக்கு திரும்பினார். நேற்று முன்தினம் இரவு அவர் கக்கன்ஜி காலனியில் உள்ள ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது விகாசும், அவரது நண்பர்கள் பார்த்திபன், லோகேஸ்வரன், கணேசன், வசந்தகுமார், நிர்மல்குமார், தேவராஜ், தீபக்குமார் ஆகியோரும் தக்காளி பரத்தை கத்தியால் குத்தினார்கள். 12 இடங்களில் கத்திக் குத்துப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே 8 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
அக்கம் பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தக்காளி பரத்தை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தக்காளி பரத் இன்று அதிகாலை இறந்தார்.
இது தொடர்பாக செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தார். இந்த நிலையில் கொலையாளிகள் பெரியபாளையத்தில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் பெரியபாளையம் சென்று 8 பேரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்