search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "what not to keep in the fridge"

    • உணவுப்பொருட்களை குறிப்பிட்ட காலம் கெடாமல் பாதுகாக்கிறது பிரிட்ஜ்.
    • சமைத்தவுடனே யாரும் உணவை ஃபிரிட்ஜில் வைப்பதில்லை.

    இன்றைய வீடுகளின் இன்றியமையாத பொருள், ஃபிரிட்ஜ், குளிர்பதனப்பெட்டி. உணவுப்பொருட்களை குறிப்பிட்ட காலம் வரை கெடாமல் பாதுகாக்கிறது ஃபிரிட்ஜ். ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா? உணவுப்பொருட்களை, குறிப்பாக சமைத்த உணவை பிரிட்ஜில் எவ்வளவு நாள் வைத்திருக்கலாம்? இதற்கு உணவியல் நிபுணர்கள் கூறும் பதில்...

    கெட்டுப்போகக்கூடிய உணவுகளான இறைச்சி, மீன், முட்டை, பால் பொருட்கள் போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைத்த சில நாட்கள் முதல் ஒரு வாரத்துக்குள் பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில் ரொட்டி, சிலவகை பழங்கள். காய்கறிகள் போன்ற அழுகாத பொருட்களை பல நாட்களுக்கு சேமிக்கலாம்.

    ஃபிரிட்ஜில் வைத்த சமைத்த உணவுகளில், 3 முதல் 4 நாட்களுக்குப் பிறகு பாக்டீரியா வளர ஆரம்பிக்கலாம். இது உணவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். பாக்டீரியா பொதுவாக உணவின் சுவை, வாசனை. தோற்றத்தை மாற்றாது. எனவே, ஒரு உணவு உண்பதற்கு பாதுகாப்பானதா இல்லையா என்று கண்ணால் பார்த்து உங்களால் சொல்ல முடியாது.

    சமைத்த உடனே யாரும் உணவை ஃபிரிட்ஜில் வைப்பதில்லை. உணவு உண்ணும் வரை முதலில் வெளியே தான் இருக்கிறது. அதன் பிறகு ஆறிய உணவைத்தான் ஃபிரிட்ஜில் வைக்கின்றனர். இது நுண்ணுயிரிகளை விரைவாகப் பெருக்கி, உணவை மாசுபடுத்தும் நிலைமையை உருவாக்குகிறது. எஞ்சிய உணவுகள் சுவை குறைவதற்கு காரணம் இதுதான்.

     உணவுப்பொருட்களில் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்க என்ன செய்வது?

    மீதமான உணவை காற்று புகாத பாத்திரத்தில் சேமிக்க வேண்டும் அல்லது மூடிவைக்க வேண்டும். எஞ்சிய உணவை ஃபிரிட்ஜில் மேல் அலமாரிகளில் சேமிக்கலாம். அங்கு அதிகபட்ச காற்று, குளிர்ச்சி கிடைக்கும். முதலில் உள்ளே வைத்த உணவுகளை விரைவாக உட்கொள்ளுங்கள். அதற்காக, பழைய எஞ்சியவற்றை முன்பக்கமாகவும். புதியவற்றை பின்புறமாகவும் வையுங்கள். இதுபோன்று பொதுவான ஆலோசனைகளை பின்பற்றும் அதேநேரம், பார்வை, வாசனை, தொடுதல் அடிப்படையில், ஃபிரிட்ஜில் வைத்த உணவு பாதுகாப்பானதா என உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு சந்தேகம் எழுந்தால், அமுதமாகவே இருந்தாலும் அதை தொடாதீர்கள்.

    ×