என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "wife jail"
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் புனலூர் பகுதியை சேர்ந்தவர் சாம் ஆபிரகாம் (வயது 34). இவரது மனைவி ஷோபியா (32). இந்த தம்பதிக்கு 9 வயதில் மகன் உள்ளான்.
சாம் ஆபிரகாம் தனது குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போன் நகரில் வசித்து வந்தார். மேலும் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியிலும் அவர் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு தனது வீட்டில் சாம் ஆபிரகாம் இறந்துகிடந்தார். அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக மனைவி ஷோபியா தெரிவித்தார். மேலும் சாம் ஆபிரகாம் உடல் ஆஸ்திரேலியாவில் இருந்து புனலூருக்கு அனுப்பப்பட்டு அங்கு அடக்கமும் செய்யப்பட்டது.
இதற்கிடையில் சாம் ஆபிரகாம் சாவில் மர்மம் இருப்பதாக ஆஸ்திரேலியா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து அவர்கள் அவரது மனைவி ஷோபியாவிடம் விசாணை நடத்தினார்கள். அப்போது அவர் சரியான தகவல்களை தெரிவிக்காததால் போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். இதில் கணவர் சாம் ஆபிரகாமை அவரது மனைவி ஷோபியாவே விஷம் வைத்து கொன்ற திடுக்கிடும் தகவல் தெரிவய வந்தது.
சாம் ஆபிரகாம் வேலை பார்த்த கம்பெனியில் கேரளாவை சேர்ந்த அருண் என்ற வாலிபரும் பணிபுரிந்தார். அவர் அடிக்கடி சாம் ஆபிரகாமின் வீட்டிற்கு வந்து சென்றதால் அவருக்கும் ஷோபியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது.
இந்த கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரிய வந்ததால் அவரை ஷோபியாவும் அருணும் சேர்ந்து உணவில் விஷம் கலந்து கொலை செய்து உள்ளனர். இதைதொடர்ந்து ஷோபியாவும், அருணும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மெல்போன் நகரில் உள்ள விக்டோரியா கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு ஷோபியாவுக்கு 22 ஆண்டு ஜெயில் தண்டனையும், கள்ளக்காதலன் அருணுக்கு 27 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியது. தனது மகனின் எதிர்காலம் கருதி தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று ஷோபியா கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது மகனை ஷோபியாவின் சகோதரனிடம் ஒப்படைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. #tamilnews