என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » wimbledon 2018
நீங்கள் தேடியது "Wimbledon 2018"
கெவின் ஆண்டர்சனை நேர்செட் கணக்கில் வீழ்த்தி விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச். #Wimbledon2018 #Djokovic
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் 8-ம் நிலை வீரரான கெவின் ஆண்டர்சன் - 12-ம் நிலை வீரரான ஜோகோவிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தின.
பெடரர், இஸ்னெரை கடும் போராட்டத்திற்குப் பின் வீழ்த்திய ஆண்டர்சன் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முதல் இரண்டு செட்டுகளையும் 2-6, 2-6 என இழந்தார். 3-வது செட்டில் சற்று வேகம் காட்டினார் ஆண்டர்சன். இதனால் ஆட்டம் ‘டைபிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ஜோகோவிச் 7(7)-6(3) என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார். #Wimbledon2018 #Djokovic

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச் #Wimbledon2018
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால் 12-ம் நிலை வீரரான ஜோகோவிச்சை எதிர்கொண்டார். இரண்டு பேரும் 10-க்கும் மேற்பட்ட கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர்கள் என்பதால் ஆட்டம் கடும் சவால் நிறைந்ததாக இருந்தது.
முதல் செட்டை 6-4 என ஜோகோவிச் வென்றார். 2-வது செட்டில் ஆக்ரோசமான ஆட்டத்தை நடால் வெளிப்படுத்தினார். இதனால் 6-3 என 2-வது செட்டை கைப்பற்றினார். 3-வது செட்டில் இருவரும் மல்லுகட்டினார்கள். இதனால் ஆட்டம் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் 7(11) - 6(9) என ஜோகோவிச் கைப்பற்றினார். 4-வது செட்டை நடால் 6-3 என எளிதில் கைப்பற்றினார்.
இதனால் இருவரும் 2-2 என சமநிலையில் இருந்தனர். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் வெற்றி பெற்றாக வேண்டும் என இருவரும் களம் இறங்கினார்கள். இறுதியில் ஜோகோவிச் கையே ஓங்கியது அவர் 10-8 என ஐந்தாவது செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார்.
6-4, 3-6, 7(11)-6(9), 3-6, 10-8 என நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜோகோவிக் தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொள்கிறார்.

விம்பிள்டன் அரையிறுதியில் ஜோகோவிச்சை எதிர்கொள்ள இருக்கும் நடால், மிகப்பெரிய சவாலான போட்டி என்று தெரிவித்துள்ளார். #Wimbldeson2018
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டங்களில் ஆண்டர்சன் - இஸ்னெர், நடால் - ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
நடால் 2011-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இவருக்கு அதிக தொந்தரவு கொடுக்கும் வீரராக கருதப்பட்ட ரோஜர் பெடரர் காலிறுதியில் ஆண்டர்சனிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
இதனால் நடால் சாம்பியன் பட்டம் வெல்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நடால் அப்படி பார்க்கவில்லை ‘‘நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்வது எப்போதும் மிகப்பெரிய சவாலானது’’ என்று தெரிவித்துள்ளார்.
நடால் 2008 மற்றும் 2010-ல் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தையும், ஜோகோவிச் 2011, 2014 மற்றும் 2015-ல் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளனர்.

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முன்னேறியுள்ளார். #Serena #Wimbledon2018
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் 11-ம் நிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
2-வதாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 13-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜெஸ் - 25-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் மோதினார்கள்.
இதில் எந்தவித சிரமமின்றி செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் ஏஞ்சலிக் கெர்பர் - செரீனா வில்லியம்ஸ் சனிக்கிழமை (ஜூலை 14-ந்தேதி) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

லண்டன் சென்றுள்ள திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தனது மனைவியுடன் விம்பிள்டன் காலிறுதி ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்தார். #MKStalin #Wimbledon2018
திமுக செயல் தலைவரும் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவருமான முக ஸ்டாலின் கடந்த 9-ந்தேதி இரவு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் சென்றார். அங்குள்ள பன்னாட்டு முனையத்தில் இருந்து துபாய் வழியாக லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் சென்றார்.
தற்போது லண்டனில் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. இந்த ஆட்டங்களை முக ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் நேரில் சென்று பார்த்து ரசித்துள்ளார். அப்போது விஜய் அமிர்தராஜ் அவரை வரவேற்றார்.
இதற்குரிய படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘‘விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. டென்னிசில் புகழ்பெற்ற சென்னையை சேர்ந்த விஜய் அமிர்தராஜ்-ஐ சந்தித்தேன்’’ என பதிவிட்டுள்ளார்.
லண்டன் சென்றுள்ள முக ஸ்டாலின் ஒருவாரம் அங்கு தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.

I had the opportunity to watch Wimbledon Lawn Tennis Championships and to meet with Chennai-born tennis legend Vijay Amritraj in London. pic.twitter.com/uI1dm76HAO
— M.K.Stalin (@mkstalin) July 12, 2018
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். #Wimbledon2018
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலில் நடைபெற்ற அரையிறுதி ஒன்றில் 11-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியைச் சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பர் 12-ம் நிலை வீராங்கனையான லாத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோவை எதிர்கொண்டார்.
இரண்டு வீராங்கனைகளும் அடுத்தடுத்த தரநிலை பெற்றிருந்ததால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 6-3 என எளிதில் நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
ஏஞ்செலிக் கெர்பர் இறுதிப் போட்டியில் செரீனா வில்ல்லியம்ஸ் அல்லது ஜூலியா ஜார்ஜெஸ் ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்வார்.

ஜப்பான் வீரர் நிஷிகோரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் செர்பியா வீரர் ஜோகோவிச். #Wimbledon2018 #Djokovic #nishikori
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
முதல் காலிறுதியில் 12-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 24-ம் நிலை வீரரான ஜப்பானின் கெய் நிஷிகோரியை எதிர்கொண்டார். முதல் செட்டை ஜோகோவிச் 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை நிஷிகோரி 6-3 எனக் கைப்பற்றினார்.
அதன்பின் இரண்டு செட்டுகளையும் 6-2, 6-2 என எளிதில் கைப்பற்றி ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான காலிறுதியில் கெர்பர், ஓஸ்டாபென்கோ வெற்றி பெற்றனர். #Wimbledon2018
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரவின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஒரு காலிறுதி ஆட்டத்தில் 11-ம் நிலை வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் 14-ம் நிலை வீராங்கனையான டாரியா கசட்சினாவை எதிர்கொண்டார். இதில் ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 7-5 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 12-ம் நிலை வீராங்கனையான ஜெலினா ஓஸ்டாபென்கோ தரநிலைப் பெறாத டொமினிக்கா சிபுல்கோவாவை எதிர்கொண்டார்.
ஓஸ்டாபென்கோ
இதில் ஓஸ்டாபென்கோ 7-5, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதியில் ஏஞ்சலிக் கெர்பர் - ஓஸ்டாபென்கோ பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

எனது மகள் டென்னிஸ் விளையாட மாட்டாள் என்று பெண் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #serena
டென்னிஸ் விளையாட்டில் பெண் சிங்கமாக வளம் வந்தவர் செரீனா வில்லியம்ஸ். இவர் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனைகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். இன்னும் ஒரு பதக்கம் வென்றால் உலகளவில் அதிக பட்டங்கள் வென்ற ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட் சாதனையை சமன் செய்வார்.
கடந்த வருடம் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபனில் பதக்கம் வென்ற பின்னர், கர்ப்பிணியாக இருந்ததால் டென்னிஸில் இருந்து ஒதுங்கினார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அலெக்சிஸ் ஒலிம்பியா எனப் பெயரிட்டுள்ளார்.
தற்போது மீண்டும் செரீனா டென்னிஸ் களத்திற்கு திரும்பியுள்ளார். விம்பிள்டன் டென்னிஸ் தொடர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். விம்பிள்டன் தொடருக்கான தரநிலையில் முதல் 10 இடத்தில் இருந்த வீராங்கனைகள் தோல்வியடைந்து வெளியேறிவிட்டார்கள். இதனால் செரீனாவிற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
டென்னிஸில் அரங்கில் அசைக்க முடியாத மங்கையாக விளங்கி வரும் செரீனாவிடம் உங்கள் மகள் டென்னிஸ் போட்டியில் உங்களை பின்தொடர்ந்தால் நீங்கள் அதை விரும்புவீர்களா? என்று கேட்டனர். அதற்கு செரீனா, ‘‘இல்லை, எனது மகள் டென்னிஸ் விளையாடமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால், ஐஸ் கேட்டிங் வேடிக்கையாக இருக்கும்’’ என்றார்.

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஜாம்பவான் நடால் 7 வருடத்திற்குப்பின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். #Wimbledon2018 #Nadal
டென்னிஸில் 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனைப் படைத்திருப்பவர் ஸ்பெயின் நாட்டின் ரபெல் நடால். செம்மண் தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபனை மட்டும் 11 முறை வென்ற உலக சாதனைப் படைத்துள்ளார். ஆஸ்திரேலியா ஓபனை 2009-ம் ஆண்டிலும், விம்பிள்டனை 2008 மற்றும் 2010-லும், அமெரிக்கா ஓபரை 2010, 2013, 2017-லும் கைப்பற்றியுள்ளார்.
32 வயதாகும் ரபெல் நடால் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் காலிறுதிக்கு கடைசியாக 2011-ம் ஆண்டுதான் தகுதி பெற்றிருந்தார். அதன்பிறகு நான்கு சுற்றுகளுக்கு மேல் முன்னேறியது கிடையாது. தற்போது காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார். அவருக்கு ரோஜர் பெடரர் கடும் சவாலாக இருப்பார்.
நடால் விம்பிள்டன் தொடரில் 2006-ல் இருந்து 2011-ம் ஆண்டு வரை சிறப்பாக விளையாடி இரண்டு முறை சாம்பியன் பட்டமும், மூன்று முறை 2-வது இடமும் பிடித்துள்ளார். 2009-ல் காயம் காரணமாக விளையாடவில்லை. அதன்பின் விம்பிள்டனில் நடாலுக்கு சறுக்கல்தான் ஏற்பட்டது.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் 3-வது சுற்றில் தோல்வியை தழுவினார்.
லண்டன்:
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல்நிலை வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) எளிதில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா), மிலோஸ் ராவ்னிக் (கனடா) ஆகியோரும் தங்களது 3-வது சுற்றில் வெற்றி கண்டனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் சமீபத்தில் பிரெஞ்ச் ஓபனை வென்றவரும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான சிமோனா ஹாலெப்(ருமேனியா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். அவரை தரவரிசையில் 48-வது இடத்தில் உள்ள சு-வெய் ஹிசை (சீனதைபே) 3-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் 2 மணி 20 நிமிடங்கள் போராடி வீழ்த்தினார். 32 வயதான சு-வெய், விம்பிள்டனில் முதல் முறையாக 4-வது சுற்றை எட்டினார். போட்டித் தரநிலையில் முதல் 10 இடங்களை பெற்ற வீராங்கனைகளில் தற்போது 9 பேர் தோற்று வெளியேறி விட்டது குறிப்பிடத்தக்கது.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 5 முறை சாம்பியனான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். #Wimbledon #VenusWilliams
லண்டன்:
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 6-3, 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் கோல்ஸ்கிரீபரை (ஜெர்மனி) விரட்டி 4-வது சுற்றை எட்டினார்.
அதே சமயம் 7 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தன்னை எதிர்த்த மிலாடெனோவிச்சை (பிரான்ஸ்) 7-5, 7-6 (7-2) என்ற நேர் செட்டில் வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது சுற்றில் நடப்பு சாம்பியன் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 7-5, 2-6, 1-6 என்ற செட் கணக்கில் அலிசன் வான் உய்ட்வான்கிடம் (பெல்ஜியம்) மண்ணை கவ்வினார். #wimbledon2018 #VenusWilliams

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-3, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் லினார்ட் ஸ்டிரப்பை (ஜெர்மனி) வீழ்த்தி அடுத்த சுற்றை எட்டினார்.
ஆண்கள் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசெலின் ஜோடி 4-6, 6-7 (4-7), 1-2 என்ற செட் கணக்கில் பிரிடெரிக் நீல்சென் (டென்மார்க்)- ஜோ சிலிஸ்பரி (இங்கிலாந்து) இணைக்கு எதிராக பின்தங்கி இருந்த போது, போபண்ணா காயமடைந்தார். இதனால் அவர் பாதியில் விலக, நீல்சென்-சிலிஸ்பரி ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 5 முறை சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2-6, 7-6 (7-5), 6-8 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்சிடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.
அதே சமயம் 7 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தன்னை எதிர்த்த மிலாடெனோவிச்சை (பிரான்ஸ்) 7-5, 7-6 (7-2) என்ற நேர் செட்டில் வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது சுற்றில் நடப்பு சாம்பியன் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 7-5, 2-6, 1-6 என்ற செட் கணக்கில் அலிசன் வான் உய்ட்வான்கிடம் (பெல்ஜியம்) மண்ணை கவ்வினார். #wimbledon2018 #VenusWilliams
×

X