search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wireless Earbuds"

    ஆப்பிள் நிறுவனம் பீட்ஸ் பிட் ப்ரோ இயர்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் பீட்ஸ் பிட் ப்ரோ வயர்லெஸ் இயர்போனினை அறிமுகம் செய்தது. இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சேலேஷன், டிரான்ஸ்பேரன்சி ஆடியோ மோட்கள், அடாப்டிவ் இ.கியூ., ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் டைனமிக் ஹெட் டிராக்கிங் போன்ற அம்சங்கள் உள்ளன.

    இதில் செக்யூர் பிட் விங்-டிப்கள் உள்ளன. இவை இயர்போன் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ள வழி செய்கின்றன. பீட்ஸ் பிட் ப்ரோ ஆண்ட்ராய்டு சாதனங்களுடனும் இயங்கும். இத்துடன் ஒன்-டச் பேரிங், கஸ்டமைஸ் செய்யக்கூடிய கண்ட்ரோல், பேட்டரி லெவல், பர்ம்வேர் அப்டேட் வழங்கப்படுகிறது.

     ஆப்பிள் பீட்ஸ் பிட் ப்ரோ

    பீட்ஸ் பிட் ப்ரோ மாடல் பீட்ஸ் பிளாக், பீட்ஸ் வைட், ஸ்டோன் பர்பில் மற்றும் சேஜ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 199.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 14,975 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    போட்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஏர்டோப்ஸ் 411 வயர்லெஸ் இயர்பட்களை அறிமுகம் செய்துள்ளது.



    போட் லைஃப்ஸ்டைல் நிறுவனம் ப்ளூடூத் ஸ்பீக்கர்களை தொடர்ந்து புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் ஏர்டோப்ஸ் 411 என அழைக்கப்படுகிறது. முன்னதாக ஏர்டோப்ஸ் சீரிசில் ஏர்டோப்ஸ் 511 என்ற மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் அறிமுகமாகி இருக்கும் புதிய இயர்பட்ஸ் மெல்லிய வடிவமைப்பில், அதிக சவுகரியம் வழங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

    ஏர்டோப்ஸ் 411 மாடலுடன் சார்ஜிங் கேஸ் மற்றும் 500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் HSP, HFP, A2DP மற்றும் AVRCP போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ப்ளூடூத் 5.0 வசதி வழங்கப்படுகிறது. இது 33 மீட்டர் வரை சீராக வேலை செய்யும். 



    இத்துடன் இந்த இயர்போன்கள் 6 எம்.எம். மற்றும் 50 எம்.ஏ.ஹெச். டைனமிக் டிரைவர்களுடன் கிடைக்கிறது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரி 3.5 மணி நேரங்களுக்கு பிளேடைம் மற்றும் 80 மணி நேர ஸ்டான்ட்பை வழங்கும் என போட் தெரிவித்து இருக்கிறது.

    போட் ஏர்டோப்ஸ் 411 மாடலில் IPX4 ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இயர்பட்ஸ்-ஐ அழுத்திப்பிடித்து வாய்ஸ் அசிஸ்டண்ட் அம்சத்தை இயக்கலாம். பின் இதை கொண்டே அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கவும் முடியும்.

    ஏர்டோப்ஸ் 411-ஐ முழுமையாக சார்ஜ் செய்ய 1.5 மணி நேரம் ஆகும். இதனுடன் வரும் சார்ஜிங் கேஸ் முழுமையாக சார்ஜ் ஆக 1.5 மணி நேரம் ஆகும். இந்தியாவில் போட் ஏர்டோப்ஸ் 411 விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் இயர்பட்ஸ்களுக்கு போட்டியாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வயர்லெஸ் இயர்பட்ஸ்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Microsoft



    சர்வதேச சந்தையில் வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் டிரெண்ட் ஆகி வருகிறது. சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ்க்கு போட்டியாக சொந்த வயர்லெஸ் இயர்பட்ஸ்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 

    சில நிறுவனங்கள் ஏற்கனவே வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் சொந்தமாக இயர்பட்ஸ்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாஃப்ட் வயர்லெஸ் இயர்பட்ஸ் சர்ஃபேஸ் பட்ஸ் என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.



    புதிய இயர்பட்ஸ்களை மைக்ரோசாஃப்ட் மொரிசன் என்ற பெயரில் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய சாதனங்களில் மைக்ரோசாஃப்ட் வானியல் சார்ந்த பெயர்களை சூட்டுவதை மைக்ரோசாஃப்ட் வாடிக்கையாக கொண்டிருந்தது. மைக்ரோசாஃப்ட் ஏற்கனவே ஆடியோ சாதனங்கள் சந்தையில் சர்ஃபேஸ் ஹெட்போன்களை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

    இதைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் இயர்பட்ஸ்களை உருவாக்கி வருகிறது. இந்த இயர்பட்ஸ்களின் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இதில் கார்டணா வசதி நிச்சயம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த வசதியை கொண்டு மொபைலில் தகவல்களை மிக எளிமையாக வாசிக்க முடியும்.

    சிரி, அலெக்சா போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவைகள் இயர்போன்களில் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் மைக்ரோசாஃப்ட் சாதனத்தில் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை எந்தளவு வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    புகைப்படம் நன்றி: thurrott
    நுபியா பிராண்டு ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச் போன் மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. #nubia



    நுபியா பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி உலகின் முதல் அணியக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் இந்த சாதனம் காட்சிப்படுத்தப்பட்டது. 

    புதிய சாதனத்தில் மடிக்கும் திறன் கொண்ட OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனத்தின் 5ஜி வெர்ஷனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக நுபியா அறிவித்துள்ளது. இதற்கென நுபியா சீனா யுனிகாம் நிறுவனத்துடன் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது.



    நுபியா ஆல்ஃபா சிறப்பம்சங்கள்:

    - 4.01 இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 2100 பிராசஸர்
    - 1 ஜி.பி. ரேம்
    - 8 ஜி.பி. மெமரி
    - 5 எம்.பி. பிரைமரி கேமரா, 82-டிகிரி வைடு-ஆங்கிள் லென்ஸ், f/2.2
    - பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன்
    - உடற்பயிற்சி, ஆரோக்கியத்தை காக்கும் அசிஸ்டண்ட் வசதி
    - உறக்கம், ஓட்ட பயிற்சிகளை டிராக் செய்யும் திறன்
    - மியூசிக் பிளேபேக்
    - இதய துடிப்பு சென்சார்
    - 4ஜி மற்றும் இசிம் 
    - வைபை, ப்ளூடூத்
    - 500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    அணியக்கூடிய ஸ்மார்ட்போனுடன் நுபியா பிராண்டு வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்தையும் நுபியா ஏற்கனவே சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்திருந்தது. 



    நுபியா பாட்ஸ் சிறப்பம்சங்கள்:

    - ப்ளூடூத் 5 மற்றும் குவால்காம் ஆப்ட் எக்ஸ்
    - LDS லேசர் ஆண்டெனா
    - 45-டிகிரி எர்கோனோமிக் வடிவமைப்பு
    - 6.2 கிராம் எடை
    - MEMS மைக்ரோபோன்
    - 55 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 410 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சார்ஜிங் கேஸ்

    நுபியா ஆல்ஃபா 4ஜி பிளாக் வெர்ஷன் விலை சீனாவில் 3499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.36,225) என்றும் 18 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட பேண்ட் கொண்ட 4ஜி கோல்டு வெர்ஷன் விலை 4499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.46,620) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நுபியா பாச்ஸ் விலை 799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.8,280) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் விற்பனையில் நுபியா ஆல்ஃபா வாங்குவோருக்கு நுபியா பாட்ஸ் இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    அமேசான் நிறுவனம் அலெக்சா வசதியுடன் கூடிய வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Amazon



    அமேசான் நிறுவனம் சொந்தமாக வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஆப்பிளின் ஏர்பாட்ஸ் இயர்போன்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. இது அமேசான் லேப் 126 ஹார்டுவேர் பிரிவின் மிகமுக்கிய திட்டமாக இருக்கலாம் என தெரிகிறது. 

    அமேசான் தனது வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையான அலெக்சாவை பல்வேறு எக்கோ சாதனங்களில் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்சமயம் வயர்லெஸ் இயர்போன்களிலும் அலெக்சா சேவையை புகுத்த அமேசான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அலெக்சா வசதி கொண்ட வயர்லெஸ் இயர்போன் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகமாகலாம்.



    தோற்றத்தில் அமேசானின் இயர்போன்கள் பார்க்க ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்றே காட்சியளிக்கும் என்றும் இதில் சிறப்பான ஆடியோ தரத்தை புகுத்த அதன் பொறியாளர்கள் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேசான் இயர்பட்ஸ் கொண்டு பயனர்கள் இசையை கேட்பது, பொருட்களை வாங்குவது, வானிலை விவரங்களை அறிந்து கொள்வது என பலவற்றை மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

    இத்துடன் இசையை கேட்கும் போது அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது போன்றவற்றை இயர்பட்களை தட்டியே செயல்படுத்த முடியும் என கூறப்படுகிறது. இயர்போன்களில் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை இயக்க அலெக்சா என கூறினாலே போதுமானது என்றும் இது ஸ்மார்ட்போனுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிகிறது.

    அமேசான் இயர்போன்களுடன் ஸ்டோரேஜ் கேஸ் ஒன்று வழங்கப்படும் என்றும் இதுவே இயர்போன்களை சார்ஜ் செய்யும் சார்ஜர் போன்று இயங்கும் என கூறப்படுகிறது. பயனர்கள் இதனை வழக்கமான யு.எஸ்.பி. கேபிள் கொண்டே சார்ஜ் செய்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.
    ஸ்கல்கேண்டி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. #Skullcandy



    ஸ்கல்கேண்டி நிறுவனம் இந்தியாவில் புஷ் என்ற பெயரில் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ்களில் ஸ்கல்கேண்டி செக்யூர் ஃபிட்ஃபின் ஜெல்கள் மற்றும் ஆக்டிவ் அசிஸ்டண்ட் வசதியை வழங்கியிருக்கிறது. இது இயர்பட்ஸ்களுக்கு ஆறு மணி நேரத்திற்கு தேவையான பேட்டரி பேக்கப் வழங்கும். இத்துடன் கூடுதலாக ஆறு மணி நேரங்களுக்கு பேட்டரி பேக்கப் கேஸ் வழங்கப்படுகிறது.

    இதன் புதுவித வடிவமைப்பு இயர்பட்ஸ்களை மிக எளிமையாக இயக்க வழி செய்வதோடு சிக்னல்கள் சீராக கிடைக்கவும் துணை புரிகிறது. ஒவ்வொரு இயர்பட்களிலும் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதனை மூன்று முறை தொடர்ச்சியாக க்ளிக் செய்யும் போது அசிஸ்டண்ட் வசிதயுடன் குறுந்தகவல் அனுப்பலாம்.



    இத்துடன் ரிமைண்டர் மற்றும் பல்வேறு வசதிகளை இயக்க முடியும். மேலும் இயர்பட்களை க்ளிக் செய்து அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கவும் முடியும். தொடர்ச்சியாக இருமுறை இடதுபுற இயர்பட் க்ளிக் செய்தால் இன்கமிங் அழைப்புகளை ரிஜெக்ட் அல்லது ஹோல்டில் வைக்கலாம். 

    புதிய வயர்லெஸ் இயர்பட்கள் காதுகளில் இருந்து எளிதில் கீழே விழாதபடி மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக ஆறு மணி நேரங்களுக்கு பயன்படுத்த முடியும். இத்துடன் சார்ஜிங் கேஸ் கொண்டு 12 மணி நேரத்திற்கு பிளேபேக் கிடைக்கும்.

    ஸ்கல்கேண்டி புஷ் வயர்லெஸ் இயர்பட் கிரே டே மற்றும் சைகோடிராபிக்கல் டியல் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை நாடு முழுக்க ஆஃப்லைன் விற்பனை மையங்களில் வாங்கிட முடியும்.
    சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி பட்ஸ் என்ற பெயரில் வயர்லெஸ் இயர்பட்களை அறிமுகம் செய்துள்ளது. #GalaxyBuds



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுடன் புதிய வயர்லெஸ் பட்ஸ்-ம் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய கேலக்ஸி பட்ஸ் இயர்போன்கள் அடுத்த தலைமுறை வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலாக இருக்கிறது. இது 2016 ஆம் ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்த கியர் ஐகான் எக்ஸ் மாடலின் மேம்பட்ட மாடலாக அறிமுகமாகி இருக்கிறது. இது முந்தைய மாடலை விட 30 சதவிகிதம் சிறியதாக உருவாக்கப்பட்டுள்ளது.



    சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ஆப்பிளின் ஏர்பாட்ஸ் போன்று சார்ஜிங் கேசுடன் வருகிறது. இது சாம்சங்கின் பவர்ஷேர் அம்சத்துடன் வருகிறது. இதனால் இயர்பட்களை புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனை கொண்டே சார்ஜ் செய்ய முடியும். கேலக்ஸி பட்ஸ் இயர்போன்கள் ஏ.கே.ஜி. மூலம் டியூன் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இதில் பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்படுகிறது.

    ஏ.கே.ஜி. தவிர புதிய கேலக்ஸி பட்ஸ் இயர்போனில் மேம்பட்ட ஆம்பியண்ட் சவுண்ட் வழங்கப்பட்டிருக்கிறது. இது பயனரின் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஒலியை தேவைப்படும் சூழலில் மட்டும் கேட்க வழி செய்யும். இத்துடன் அடாப்டிவ் டூயல் மைக்ரோபோன் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் எவ்வித சூழல்களில் பேசும் போதும், மறுமுனையில் இருப்போருக்கு மிக தெளிவாக கேட்கும். 

    சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இதில் 58 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 6 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். இதன் சார்ஜிங் கேசில் 252 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த கேஸ் 15 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 1.7 மணி நேரம் பயன்படுத்தலாம். 



    சார்ஜிங் கேஸ் யு.எஸ்.பி. டைப்-சி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதற்கும் அதிக வெர்ஷன்களை கொண்டு இயங்கும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் கேலக்ஸி கேலக்ஸி பட்ஸ் பயன்படுத்தலாம். 

    புதிய கேலக்ஸி பட்ஸ் விலை 129 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.9,200) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் மட்டும் மார்ச் 8 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி பட்ஸ் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
    சியோமி நிறுவனம் வயர்லெஸ் இயர்பட்களை உருவாக்கி வருகிறது. இது பார்க்க ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. #Xiaomi #Wireless



    சியோமி நிறுவனம் புதிதாக வயர்லெஸ் இயர்பட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. சியோமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏர்டாட்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்த வயர்லெஸ் இயர்போன்கள் பார்க்க ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் போன்றே காட்சியளிக்கிறது, எனினும் இதன் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தற்சமயம் சியோமி மற்றொரு புதிய வயர்லெஸ் இயர்பாட்களை அறிமுகம் செய்யவிருக்கிறது. சியோமியின் புதிய வயர்லெஸ் இயர்பட்கள் பற்றிய ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இதுவும் பார்க்க ஏர்பாட்ஸ் போன்றே காட்சியளிக்கிறது.

    இணையத்தில் வெளியாகி இருக்கும் சியோமி ஏர்டாட்ஸ் ரென்டர்களின் படி வயர்லெஸ் பட்களைத் தொடர்ந்து சிறிய ஸ்டெம் ஒன்று காணப்படுகிறது. இது ஆப்பிளின் ஏர்பாட்ஸ் சாதனத்தை விட தடிமனாக காட்சியளிக்கிறது. அந்த வகையில் இதில் பேட்டரி மற்றும் மைக்ரோபோன் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிகிறது.


    புகைப்படம் நன்றி: mysmartprice

    புதிய இயர்பட்கள் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக இதுபோன்ற சாதனங்கள் பெரும்பாலும் இவ்வாறே உருவாக்கப்படுகிறது. 

    இயர்பட்களின் மவுத் பகுதியில் சிலிகான் கொண்டு மறைக்கப்பட்டிருப்பதும் ரென்டர்களில் தெரியவந்துள்ளது. அந்த வகையில் புதிய இயர்பட்கள் பயன்படுத்த சௌகரியமாக இருக்கும். இவற்றுடன் வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது.

    சார்ஜிங் கேஸ் பார்க்க ஏர்டாட்ஸ் போன்று இல்லையென்றாலும், இதன் வடிவமைப்பு அம்சங்கள் ஆப்பிளின் ஏர்பாட்ஸ்-க்கு வழங்கப்படும் கேஸ் போன்று காட்சியளிக்கிறது. முந்தைய ஏர்டாட்ஸ் போன்றே புதிய வயர்லெஸ் இயர்பட்களிலும் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வயர்லெஸ் இயர்பட்களில் ப்ளூடூத் 5.0 மற்றும் தொடுதிரை வசதி வழங்கப்படுகிறது. இவற்றை கொண்டு பிளே / பாஸ் ஆடியோ, எனேபிள் / டிசேபிள் அசிஸ்டண்ட் மற்றும் அழைப்புகளை ஏற்கும் / நிராகரிக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முந்தைய ஏர்டாட்ஸ் இந்திய மதிப்பில் ரூ.2,100 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், புதிய இயர்பட்களின் விலை சற்று அதிகமாக இருக்கும் என்றே தெரிகிறது.
    ×