search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Cup England 2019"

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரைக்கும் விராட கோலிக்கு டோனி தேவை என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் ஒட்டுமொத்த கேப்டன் பதவியில் இருந்து விலகி ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக திகழ்ந்து வருகிறார்.

    37 வயதாகும் டோனி, கேப்டன் பதவியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து வந்தார். அபாரனமான கிரிக்கெட் திறமை, சிறப்பாக பீல்டிங் அமைப்பு, துல்லியமான ஸ்டம்பிங் ஆகியவற்றில் டோனியிடம் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சமீப காலமாக அவரது பேட்டிங்கில் தொய்வு ஏற்பட்டது.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.



    டி20-யில் இருந்து நீக்கப்பட்ட டோனி உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் திறமை பெற்றுள்ள டோனி உலகக்கோப்பை வரை விராட் கோலிக்கு வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி உலகக்கோப்பை வரை கட்டாயம் விளையாட வேண்டும். விராட் கோலிக்கு டோனி தேவை. இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. டோனி பீல்டிங்கை சரியாக நிற்கும்படி அட்ஜஸ்ட் செய்வது உங்களுக்கே தெரியும். பந்து வீச்சாளர்களிடம் எப்படி பந்து வீச வேண்டும் இந்தியில் ஆலோசனை வழங்குவார். இது விராட் கோலிக்கு மிகப்பெரிய அளவில் பிளஸ்-யாக அமையும்’’ என்றார்.
    உலகக்கோப்பைக்கான சிறந்த ஆடம் லெவன் அணி குறித்து இந்திய அணிக்கு தெளிவு இல்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். #TeamIndia
    உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்த தொடருக்கான சிறந்த அணியை கண்டறிவதில் அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

    இந்திய அணியில் ரோகித் சர்மா, தவான், விராட் கோலி ஆகியோருக்கு முதல் மூன்று இடங்கள் உறுதியாகிவிட்டது. அதேபோல் பந்து வீச்சில் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோரது இடம் உறுதியாகியுள்ளது. விக்கெட் கீப்பரில் டோனி இருந்தாலும், சமீப காலமாக அவரது பேட்டிங்கில் தொய்வு ஏற்பட்டதால் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

    4-வது மற்றும் 6-வது இடத்திற்கு பேட்டிங்கில் இந்தியா இன்னும் தீர்வு காணாமல் இருக்கிறது. தற்போது அம்பதி ராயுடை 4-வது இடத்திற்கு இந்தியா தயார் செய்து வருகிறது. உலகக்கோப்பை வரை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.



    சுழற்பந்து வீச்சில் சாஹல், குல்தீப் யாதவ் கடந்த ஓராண்டிற்கு மேலாக விளையாடி வருகிறார்கள். ஆனால் தற்போது சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் அடிக்கடி நீக்கப்படுகிறார்கள். நேற்றைய போட்டியில் ஜடேஜா, கேதர் ஜாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஹர்திக் பாண்டியா வெளியில் இருக்கிறார். கலீல் அஹமது 3-வது வேகப்பந்து வீச்சாளரான இடம்பிடித்துள்ளார்.

    இதனால் ஆடும் லெவன் அணி எது என்பதை இந்தியா இன்னும் கண்டறியவில்லை. இந்நிலையில் உலகக்கோப்பைக்கான சிறந்த ஆடும் லெவன் அணி எது என்பதில் இந்தியா இன்னும் தெளிவாக இல்லை என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
    ×