search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Cup football 2018"

    88 ஆண்டு கால உலக கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற சாதனையை பிரேசில் அணி நேற்று படைத்தது. #FIFA2018 #Brazil #FootballWorldCup2018
    88 ஆண்டு கால உலக கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற சாதனையை பிரேசில் நேற்று படைத்தது. மெக்சிகோவுக்கு எதிரான 2-வது சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணி 2 கோல் அடித்தது. இதன் மூலம் அந்த அணி உலக கோப்பையில் மொத்தம் 228 கோல்கள் அடித்து இருக்கிறது. இதற்கு முன்பு ஜெர்மனி அணி 226 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பிரேசில் அணி தகர்த்து புதிய சாதனையை உருவாக்கியது.

    பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் நேற்று ஒரு கோல் அடித்தார். பிரேசில் அணிக்காக 89-வது போட்டியில் ஆடிய அவர் அடித்த 57-வது சர்வதேச கோல் இதுவாகும். ஒட்டுமொத்த உலக கோப்பை போட்டி தொடரில் அவர் அடித்த 6-வது கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது. #FIFA2018 #Brazil #FootballWorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெறாத அர்ஜென்டினா அணி தொடரில் இருந்து வெளியேற்றப்படும் விளிம்பில் உள்ளதால் மெஸ்சியின் உலகக்கோப்பை கனவு கேள்விகுறியாக உள்ளது. #FIFA2018 #Messi
    உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்சியால் அர்ஜென்டினா அணிக்கு பெருமை சேர்க்க முடியவில்லை. ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடிக்காத அவர் நேற்றைய குரோஷியாவுக்கு எதிராகவும் கோல் அடிக்கவில்லை. 2 ஆட்டத்தில் விளையாடி வெற்றி பெறாத அர்ஜென்டினா போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் விளிம்பில் உள்ளது.

    30 வயதான மெஸ்சியின் உலககோப்பை கனவு கேள்விகுறியாகவும் இருக்கிறது. கடந்த உலககோப்பையில் அர்ஜென்டினாவை இறுதிப்போட்டி வரை கொண்டு வந்து அவர் மயிரிழையில் சாம்பியன் பட்டத்தை இழந்தார். இந்த முறை தொடக்கமே சரிவாக இருக்கிறது. மெஸ்சி சிறப்பாக ஆடினாலும் சக வீரர்களின் ஒத்துழைப்பு இல்லை. ஒருங்கிணைந்து விளையாட முடியாமல் அவர் தவிக்கிறார்.

    நேற்றைய ஆட்டத்தில் சக வீரர்கள் மெஸ்சியிடம் சரியான முறையில் பந்தை கொடுக்கவில்லை. மேலும் மெஸ்சி பந்தை கொண்டு செல்லும் போது அவருடன் நெருங்கி வரவில்லை. பார்சிலோனா கிளப்பில் மெஸ்சியால் சாதிக்க முடிந்ததுக்கு சக வீரர்களின் ஒத்துழைப்பு இருந்தது. ஆனால் அர்ஜென்டினா வீரர்கள் மெஸ்சியின் திறமைக்கு ஏற்ற வகையில் ஒத்துழைக்க முடியவில்லை.

    மெஸ்சியின் திறமையை பயிற்சியாளர் பாராட்டி இருக்கிறார். தோல்விக்காக அவரை குறை கூற முடியாது என்று விளக்கம் அளித்துள்ளார். #FIFA2018 #Messi #worldcup2018
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி இன்று நடக்கவிருக்கும் ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. #WorldCupRussia #FIFA2018
    தனது தொடக்க ஆட்டத்தில் (இ பிரிவு) சுவிட்சர்லாந்துடன் ‘டிரா’ கண்ட 5 முறை சாம்பியனான பிரேசில் அணி இன்றைய ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. முந்தைய ஆட்டத்தில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மாரை, சுவிட்சர்லாந்து வீரர்கள் குறி வைத்து தாக்கினர். பிடித்து இழுப்பது, காலை இடறி விடுவது என்று 10 முறை அவரை பவுல் செய்தனர். உலக கோப்பையில் கடந்த 20 ஆண்டுகளில் குறிப்பிட்ட வீரர் மீது இத்தனை முறை ‘பவுல்’ செய்யப்பட்டது அது தான் முதல் முறையாகும். எப்படியோ இன்றைய ஆட்டத்தில் நெய்மார், பிலிப் காட்டினோ, கேப்ரியல் ஜீசஸ் உள்ளிட்டோர் மீதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் பிரேசிலின் கேப்டனாக மார்சிலோ இருந்தார். சுழற்சி அடிப்படையில் இந்த ஆட்டத்தில் தியாகோ சில்வா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 1960-ம் ஆண்டுக்கு பிறகு பிரேசிலை வெல்ல முடியாமல் தவிக்கும் கோஸ்டாரிகா அதிர்ச்சி வைத்தியம் அளிக்க தீவிரம் காட்டும்.

    ‘இ’ பிரிவில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் செர்பிய அணி 2-வது வெற்றியை நோக்கி, சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது. தொடக்க ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த செர்பிய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டால் 2-வது சுற்றை எட்டி விடும். மாறாக அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க சுவிட்சர்லாந்து அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி காண வேண்டியது அவசியமாகும்.

    குறைந்த மக்கள் தொகையை கொண்ட ஐஸ்லாந்து நாடு, தனது முதல் ஆட்டத்தில் (டி பிரிவு) பலம் வாய்ந்த அர்ஜென்டினாவுடன் பதற்றமின்றி விளையாடி டிரா செய்தது. அந்த அணி உலக கோப்பை வரலாற்றில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் ஆப்பிரிக்க தேசமான நைஜீரியாவுடன் இன்று கோதாவில் இறங்க காத்திருக்கிறது. அதே நேரத்தில் தொடக்க ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் உதைவாங்கிய இளம் வீரர்களை கொண்ட நைஜீரியா அணி, கடந்த உலக கோப்பையை போன்று நாக்-அவுட் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை பெற வேண்டும் என்றால், இன்றைய ஆட்டத்தில் ஐஸ்லாந்தை புரட்டியெடுத்தாக வேண்டும். #WorldCupRussia #FIFA2018
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 21 ஆட்டங்கள் நிறைவில் போட்டியை நேரில் கண்டுகளித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. #FIFA2018
    மாஸ்கோ:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 21 ஆட்டங்கள் நிறைவில் (டென்மார்க்-ஆஸ்திரேலியா ஆட்டம் வரை) போட்டியை நேரில் கண்டுகளித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆட்டத்தையும் காண ஸ்டேடியத்திற்கு 97 சதவீத ரசிகர்கள் வருகை தருவதாகவும், உலகம் முழுவதும் இதுவரை 26 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், இறுதிப்போட்டி நடக்கும் ஜூலை 15-ந்தேதி வரை டிக்கெட் விற்பனை நடைபெறும் என்றும் ‘பிபா’ கூறியுள்ளது. #FIFA2018
    ரஷியாவில் கால்பந்து வீரரின் வாரிசை சுமந்தால் பரிசு என அந்நாட்டு உணவகம் ஒன்று அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #FifaWorldCup2018
    மாஸ்கோ:

    ரஷியாவில் உள்ள துரித உணவகம் ஒன்று அந்த நாட்டு பெண்களுக்கு வினோதமான பரிசு அறிவிப்பு ஒன்றை அதிரடியாக வெளியிட்டது. அதாவது, உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள அணிகளில் இடம் பிடித்துள்ள வீரர்கள் மூலம் கர்ப்பமடைந்து வாரிசை சுமக்கும் பெண்களுக்கு ரூ.30 லட்சம் ரொக்கப்பரிசும், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ‘பர்கர்’ உணவு இலவசமாக வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    வருங்கால ரஷிய கால்பந்து அணிக்கு சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்து இணையதளங்களில் பகிரங்கமாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு பெண்கள் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனம் தனது பரிசு அறிவிப்பை வாபஸ் பெற்றதுடன், மக்களிடம் மன்னிப்பும் கோரி இருக்கிறது. அத்துடன் தங்களது அறிவிப்பு விளம்பரங்களையும் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கியது. #FifaWorldCup2018
    உலக கோப்பையில் தொடக்க ஆட்டத்தில் தொடர்ந்து 9 முறை வெற்றி பெற்ற பிரேசில் அணி, சுவிட்சர்லாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் டிரா கண்டிருப்பதன் மூலம் அந்த சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. #WorldCup2018 #BRAvSUI
    5 முறை சாம்பியனான பிரேசில் அணி உலக கோப்பையில் தனது தொடக்க ஆட்டத்தில் 1982-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தொடர்ந்து 9 முறை வெற்றி பெற்று இருந்தது.

    தற்போது சுவிட்சர்லாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் டிரா கண்டிருப்பதன் மூலம் அந்த சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து அணி கடைசியாக தான் விளையாடிய இரு போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்றுள்ளது. 16 வெற்றி, 6 டிரா பெற்று உள்ளது.#WorldCup2018 #BRAvSUI
    ரஷியா உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கவிருக்கும் 4 ஆட்டங்கள் குறித்த விவரத்தை காண்போம். #FIFO2018 #WorldCupRussia2018 #WorldCup2018
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று 4 ஆட்டங்கள் நடக்கிறது.

    மதியம் 3.30 மணிக்கு கசன் அலினாவில் நடக்கும் லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள பிரான்ஸ்-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி பலம் வாய்ந்ததாக இருக்கிறது.

    ஹீயூகோ லோலிஸ் தலைமையில் பிரான்ஸ் அணியில் நட்சத்திர வீரர் கிரீஸ்மேன், ப‌ஷல்போக்பா, ரபெல் வரேன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. தன்னைவிட பலம் குறைந்த அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதில் பிரான்சுக்கு சிக்கல் இருக்காது என்றே தெரிகிறது.

    தர வரிசையில் 40-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியில் டாம் காஹில், மைக் ஜெடினக் ஆகிய நட்சத்திர வீரர்கள் உள்ளனர். அந்த அணி பிரான்சுக்கு எதிராக கடுமையாக போராட வேண்டியது இருக்கும்.

    மாலை 6.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா - ஐஸ்லாந்து மோதுகின்றன. 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி மெஸ்சியை அதிகம் நம்பி இருக்கிறது.

    மேலும் செர்ஜியோ அகிரோ, டிமாரியோ, பெனிட்டோ போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    பலம் குறைந்த ஐஸ்லாந்துக்கு எதிராக அர்ஜென்டினா எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல் முறையாக உலக கோப்பையில் விளையாடும் ஐஸ்லாந்து அணியில் கேப்டன் ஆரோன் குளர்சன் நட்சத்திர வீரராக உள்ளார். அந்த அணி அர்ஜென்டினாவுக்கு ஈடு கொடுத்து விளளயாடுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    இரவு 9.30மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள பெரு-டென்மார்க் அணிகளும், நள்ளிரவு 12.30 மணிககு நடக்கும் போட்டியில் ‘டி’ பிரிவில் உள்ள குரோஷிமா-நைஜீரியா மோதுகின்றன. #FIFO2018 #WorldCupRussia2018 #WorldCup2018
    உலக கோப்பை கால்பந்து போட்டியையொட்டி தனியார் அமைப்பு ஆன்லைன் மூலம் ஓட்டெடுப்பு நடத்தியதில் ஜெர்மனிக்கு அதிகமானோர் வாக்களித்துள்ளனர். #FIFA2018 #WorldCup #Germany
    உலக கோப்பை போட்டியையொட்டி தனியார் அமைப்பு ஆன்லைன் மூலம் ஓட்டெடுப்பு நடத்தியது. 63 ஆயிரம் பேர் வாக்களித்ததில் ஜெர்மனிக்கு கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    27.9 சதவீதம் பேர் ஜெர்மனி உலக கோப்பையை கைப்பற்றும் என்று தெரிவித்து உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக அர்ஜென்டினா (25.5 சதவீதம்), பிரேசில் (23.9), ஸ்பெயின் (8.8), பிரான்ஸ் (6.7) ஆகிய அணிகள் உள்ளன. 7.2 சதவீதம் பேர் யாருக்கும் வாக்களிக்கவில்லை.

    சிறந்த வீரருக்கான தங்க ஷூ விருது பிரேசிலை சேர்ந்த நெய்மருக்கு கிடைக்கும் என்று 26.8 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக மெஸ்சி (26.2), ரொனால்டோ (20.9) உள்ளனர்.

    ஆசிய கண்டத்தில் உள்ள அணிகளில் தென்கொரியா சிறந்தது என்று 38.2 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். ஜப்பான் (36.4), ஈரான் (18.4), சவுதி அரேபியா (6.7) ஆகியவை அதற்கு அடுத்த நிலையில் உள்ளன. #FIFA2018 #WorldCup #Germany
    உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் தொடங்க இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் ‘ஜி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நாடுகள் பற்றி ஒரு பார்வை.#FIFA2018
    பெல்ஜியம்

    கால்பந்து தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் 13-வது முறையாக உலக கோப்பையில் பங்கேற்கிறது. இதில் 1986-ம் ஆண்டு 4-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் சிறந்த நிலையாகும்.

    ஆரம்ப காலங்களில் பெல்ஜியம் தொடக்க சுற்றிலேயே வெளியேறிவிடும். 1986-ல்தான் முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது. அரை இறுதியில் அர்ஜென்டினாவிடம் 0-2 என்ற கணக்கில் தோற்றதால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

    மேலும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்சிடமும் தோற்றதால் 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. கடந்த உலக கோப்பையில் கால் இறுதிக்கு நுழைந்து இருந்தது. அர்ஜென்டினாவிடம் மீண்டும் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது. இந்த உலக கோப்பையில் விளையாடும் பெல்ஜியம் திறமை வாய்ந்தது. 32 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதியில் நுழைவதை இலக்காக கொண்டுள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் இருந்து முதல் அணியாக தகுதி பெற்ற பெல்ஜியம் நாட்டில் ஈடன்ஹசார்ட், கெவின் புருனி, ரோமேலு லூகாஷ்போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.

    உலக கோப்பையில் 41 ஆட்டத்தில் விளையாடி 14-ல் வெற்றி பெற்றது. 18 போட்டியில் தோற்றது. 9 ஆட்டம் ‘டிரா’ ஆனது.

    சிறந்த நிலை: 4-வது இடம் (1986).

    இங்கிலாந்து

    இங்கிலாந்து அணி 14 முறை உலக கோப்பை போட்டியில் விளையாடி இருக்கிறது. இதில் ஒரே ஒரு முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. தனது நாட்டில் 1966&ம் ஆண்டு நடந்த போட்டியில் 4&2 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி கோப்பையை வென்றது. அதற்கு அடுத்தப்படியாக 1990&ல் 4&வது இடத்தை பிடித்து இருந்தது. கடந்த உலக கோப்பையில் தொடக்க சுற்றிலேயே வெளியேறியது.

    ‘ஜி’ பிரிவில் உள்ள இங்கிலாந்து அணி 2&வது முறையாக சாம்பியன் பட்டம் பெறும் ஆர்வத்துடன் திகழ்கிறது. இந்த முறை 2&வது சுற்றுக்கு முன்னேறுவதில் அந்த அணிக்கு சிரமம் இருக்காது. பெல்ஜியம் மட்டுமே சவாலாக இருக்கும். அந்த அணியுடன் இங்கிலாந்து மோதும் ஆட்டம் ‘ஜி’ பிரிவில் முதல் இடத்தை நிர்ணயிக்கும். இளம் வீரர்களை கொண்ட அந்த அணி சாதிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

    இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திர வீரராக ஹேரி கானே இருக்கிறார். அவர் தனது கிளப் (டோட்டன் ஹாம்) அணிக்காக பிரீமியர் லீக் மற்றும் சாம்பியன்ஸ் ‘லீக்‘கில் 12 கோல்கள் அடித்து (23 ஆட்டம்) முத்திரை பதித்து இருந்தார். ஜேமி வார்டி, ரகீம் ஸ்டெர் லிங் போன்ற நட்சத்திர வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். இங்கிலாந்து 62 ஆட்டத்தில் 26&ல் வெற்றி பெற்றது. 16 போட்டியில் தோற்றது. 20 ஆட்டம் டிரா ஆனது.

    துனிசியா

    ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள துனிசியா 12 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்கிறது. ஒட்டு மொத்தத்தில் 5-வது தடவையாக உலக கோப்பையில் ஆடுகிறது. இதுவரை 2-வது சுற்றுக்கு முன்னேறியது இல்லை.

    இந்த உலக கோப்பையிலும் அந்த அணி ‘நாக் அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறுவது கடினமே. பனாமாவை வீழ்த்துவது இலக்காக இருக்கும். உலக கோப்பையில் இதுவரை 12 ஆட்டத்தில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    யூசுப்மஸ்கானி, வஹாபி கசாரி போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். 2-வது சுற்றில் நுழைய கடுமையாக போராடும்.

    பனாமா

    மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள பனாமா உலக கோப்பை போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது.
    40 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சிறிய நாடான அந்த அணி 32 கோடி மக்கள் உள்ள அமெரிக்காவை வெளியேற்றி தகுதி பெற்றது. 1998 உலக கோப்பையில் கொலம்பியாவுக்கும், 2002&ல் ஈக்வடார் அணிக்கும் பயிற்சியாளராக இருந்த ஹெர்மன் கோமஸ் தற்போது பனாமா பயிற்சியாளராக உள்ளார். லூயிஸ் தேஜ்டா, ரோமன் டொரஸ் ஆகியோர் அந்த அணியின் முன்னணி வீரர்களாக உள்ளனர். முதல் வெற்றிக்காக பனாமா காத்திருக்கிறது. #FIFA2018
    ×