search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Cup Warm Up"

    நடப்பு சாம்பியன் அணியான ஜெர்மனிக்கு சவுதி அரோபியாவிற்கு எதிரான கடைசி பயிற்சி ஆட்டத்தில் கிடைத்த வெற்றி நம்பிக்கை ஊட்டியுள்ளது. #Fifa2018
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் அடுத்த வாரம் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 32 அணிகளும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.

    நடப்பு சாம்பியனான ஜெர்மனிக்கு இந்த வருடம் சரியாக அமையவில்லை. கடைசி பயிற்சி ஆட்டத்தில் நேற்று சவுதி அரேபியாவை எதிர்கொண்டது. இதற்கு முன் ஐந்து போட்டிகளில் ஜெர்மனியால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று, புதுநம்பிக்கையுடன் ரஷியா செல்ல வேண்டும் என்று அந்த அணி விரும்பியது.



    ஜெர்மனி அணி விரும்பியதுபோல் சவுதி அரேபியாவை 2-1 என வீழ்த்தியது. இந்த வெற்றி அந்த அணிக்கு நம்பிக்கையளித்துள்ளது. 8-வது நிமிடத்தில் டிமோ வார்னர் முதல் கோலை பதிவு செய்தார். 43-வது நிமிடத்தில் ஓன்கோல் மூலம் ஜெர்மனிக்கு ஓசி கோல் கிடைத்தது. இதனால் முதல் பாதி நேரத்தில் 2-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரத்தில் (84-வது நிமிடத்தில்) சவுதி அரேபியாவின் தைசிர் அல்-ஜாசிம் கோல் அடித்தார்.

    மற்ற ஆட்டங்களில் ஈரான், குரோசியா, சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி பெற்றனர். போலந்து - சிலி இடையிலான ஆட்டம் 2-2 என சமநிலையில் முடிந்தது.
    உலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் செர்பியா அணி 0-1 என்ற கோல் கணக்கில் சிலியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.
    கிராஸ்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 14-ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அணிகள் வெவ்வேறு அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இதில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள மொராக்கோ அணி, சுலோவக்கியாவை சந்தித்தது. இதில் மொராக்கோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் சுலோவக்கியாவை வீழ்த்தியது. சுலோவக்கியா அணி வீரர் ஜான் கிரிக்ஸ் 59-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். மொராக்கோ அணி தரப்பில் அயூப் எல் காபி 63-வது நிமிடத்திலும், யூனஸ் பெல்ஹன்டா 74-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

    ஆஸ்திரியாவில் உள்ள கிராஸ் நகரில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள செர்பியா, தகுதி பெறாத சிலி அணியுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் செர்பியா அணி 0-1 என்ற கோல் கணக்கில் சிலியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. சிலி வீரர் குல்லெர்மோ மாரிபன் 89-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். செர்பியா அணியினர் கோல் அடிக்க கிடைத்த நல்ல வாய்ப்புகளை வீணடித்தனர். 
    ×