search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "world hindu heritage"

    சிகாகோ நகரில் நடைபெறவுள்ள 2-வது உலக இந்து சமய மாநாட்டில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். #Chicago #WorldHinduCongress #VenkaiahNaidu
    புதுடெல்லி:

    சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1892-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி இந்து சமயம் பற்றி ஆற்றிய உரை உலக பிரசித்தி பெற்றது. அந்த நிகழ்வின் 125-வது ஆண்டையொட்டி உலக இந்து சமய மாநாடு சிகாகோ நகரில் வருகிற 7-ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது.
     
    அகில உலக இந்து அமைப்புகள், உலக அளவிலான ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் உள்பட 3 அமைப்புகள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்து சமயத்தை பின்பற்றி உலகம் முழுவதும் பணியாற்றும் பல்துறை வல்லுனர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத், இலங்கை வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேஷ்வரன் உள்பட பல தலைவர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். தமிழகத்தில் இருந்து பாஜக பொது செயலாளர் வானதி சீனிவாசன், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சிகாகோ நகரில் நடைபெறவுள்ள 2-வது உலக இந்து சமய மாநாட்டில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

    செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் உலக இந்து சமய மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Chicago #WorldHinduCongress #VenkaiahNaidu
    ×