search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Wrestling Championships"

    • 53 கிலோ எடைப் பிரிவில் ஸ்வீடன் வீராங்கனையை தோற்கடித்தார்.
    • உலக மல்யுத்த போட்டியில் இரண்டாவது முறையாக பதக்கம் வென்றார்.

    செர்பியா தலைநகர் பெல்கிரேடில் 17-வது உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் அரியானாவை சேர்ந்த வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்றார்.

    பெண்களுக்கான 53 கிலோ உடல் எடைப்பிரிவின் தகுதி சுற்றில் மங்கோலியாவின் குலான் பட்குயாவிடம் 0-7 என்ற புள்ளி கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டார். பின்னர், ரெப்சேஜ் முறைப்படி அடுத்த சுற்று முன்னேறிய அவர், கஜகஸ்தான் வீராங்கனை எசிமோவாவை தோற்கடித்தார். பின்னர் அஜர்பைஜான் வீராங்கனை லேலா குர்பானோவா காயம் காரணமாக விலகியதால் வெண்கலப் பதக்கச் சுற்றுக்குள் வினேஷ் போகத் நுழைந்தார். 


    அந்த போட்டியில் ஸ்வீடன் வீராங்கனை எம்மா மால்ம்கிரெனை 8-0 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து வினேஷ் போகத், வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக மல்யுத்த போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் நடந்து வருகிறது.
    • இதில் 53 கிலோ எடைப்பிரிவின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தோல்வி அடைந்தார்.

    பெல்கிரேடு:

    17-வது உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் கடந்த 10-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடக்கிறது.

    53 கிலோ எடைப்பிரிவில் அரியானாவைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

    இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 53 கிலோ உடல் எடைப்பிரிவின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மங்கோலியாவின் குலான் பட்குயாவை சந்தித்தார். தொடக்கம் முதலே சற்றே தடுமாறிய வினேஷ் போகத் 0-7 என்ற புள்ளிக்கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

    காமன்வெல்த் போட்டியில் தொடர்ந்து 3 முறை தங்கப்பதக்கம் வென்றவர் வினேஷ் போகத் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா, கியூபா வீரர் வால்டேசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். #WorldWrestlingChampionship #BajrangPunia #Semifinal
    புடாபெஸ்ட்:

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று தொடங்கியது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில் இறங்கிய இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா முதலாவது சுற்றில் ரோமன் அஷாரினையும் (ஹங்கேரி), 2-வது சுற்றில் லீ சியங்கையும் (தென்கொரியா), கால்இறுதியில் துல்கா துமர் ஒசிரையும் (மங்கோலியா) விரட்டினார்.

    அதைத் தொடர்ந்து அரைஇறுதியில் அலெக்சாண்ட்ரோ என்ரிக் வால்டேசை (கியூபா) 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து பிரமிக்க வைத்தார். இதன் மூலம் ஆசிய மற்றும் காமன்வெல்த் சாம்பியனான பஜ்ரங் பூனியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. 
    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் தரவரிசை பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பஜ்ரங் புனியா பெற்றுள்ளார். #BajrangPunia
    உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப்ஸ் தொடர் அடுத்த மாதம் 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஹங்கேரியில் உள்ள புத்தாபெஸ்ட்டில் நடக்கிறது. இதுவரை இதுபோன்ற தொடர்களில் மோதும் வீரர்களுக்கு ரேண்டம் அடிப்படையில் தரநிலை வழங்கப்படும்.

    ஆனால் தற்போது வீரர்களின் வெற்றித் தோல்வி ஆகியவற்றை கணக்கில் கொண்டு புள்ளிகள் அடிப்படையில் தரநிலை வழங்கப்படுகிறது. இதில் இந்தியாவின் மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா (65 கிலோ எடைப்பிரிவு) 45 புள்ளிகள் பெற்று தரவரிசையில் 3-வது இடம் பிடித்துள்ளார்.

    இதன்மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் தரிநிலைப் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். துருக்கி வீரர் செலாகட்டின் 50 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் ரஷியா வீரர் பெக்புலாட்டோவ் 2-வது இடமும் பிடித்துள்ளனர்.

    பஜ்ரங் புனியா சமீப காலமாக சிறப்பான விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×