search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yemen conflict"

    உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்துவரும் ஏமனில், போர்நிறுத்தம் தொடங்கிய சில நிமிடங்களில் ஒப்பந்தம் மீறப்பட்டு ஆங்காங்கே மோதல்கள் ஆரம்பித்துள்ளன. #YemenConflict #YemenClashes
    சனா:

    ஏமனில் உக்கிரமாக நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டைக்கு  தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்படி உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ஹொடைடா மாகாணம் மற்றும் துறைமுக நகரமான ஹொடைடாவில் போர் நிறுத்தம் செய்வது என்று ஹவுதி கிளர்ச்சியாளர்களும், அரசாங்கத் தரப்பும் ஒப்புக்கொண்டன.

    ஹொடைடா துறைமுகம் நிவாரணப் பொருள்கள் செல்வதற்கான நுழைவாயிலாக இருக்கிற முக்கியத்துவம் வாய்ந்த நகரம். ஆனால், சண்டை நிறுத்தம் தொடங்கிய உடனேயே இந்த நகரில் ஆங்காங்கே மோதல்கள் நிகழ்ந்துள்ளன. கிழக்கு ஹொடைடாவில் அரசாங்கப் படைகள் மீது கிளர்ச்சியாளர்கள் ஷெல் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



    கடந்த வியாழக்கிழமை ஸ்வீடனில் ஐ.நா. ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொடக்கமாக இது இருக்கும் என்று சிலர் நம்பினர்.

    உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக முதலில் கூறப்பட்டாலும், ஆங்காங்கே நடந்து வந்த தாக்குதல்களாலும், கடுமையான மோதல்களாலும் சண்டை நிறுத்தம் செயல்பாட்டுக்கு வருவது தாமதமடைந்தது குறிப்பிடத்தக்கது. #YemenConflict #YemenClashes

    உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வரும் ஏமனில், குழந்தைகள் சென்ற பேருந்து மீது விமானம் மூலம் குண்டுகளை வீசி தாக்கியதில் பலர் பலியாகி உள்ளனர். #YemenAttack #YemenConflict
    சனா:

    எமனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்பதற்கு அரசுக்கு உதவியாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 

    இந்நிலையில் இன்று காலை வடக்கு  ஏமனில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பல குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

    சவுதி கூட்டுப்படை பேருந்து மீது வான் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் குழந்தைகள் உள்பட 39 பேர் இறந்ததாகவும், 51 பேர் காயமடைந்திருப்பதாகவும் கிளர்ச்சிக்குழு ஆதரவு தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் கூட்டுப்படை தரப்பில் வான் தாக்குதல் நடத்தியதாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 

    உள்நாட்டு போர் நடைபெறும்பொது பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச மனிதாபிமான சட்டம் சொல்வதாகவும், அதனை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருப்பதாகவும் ரெட் கிராஸ் அமைப்பு கூறியுள்ளது. #YemenAttack #YemenConflict
    ×