search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth olympic games"

    அர்ஜென்டினாவில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். PMModi #YouthOlympicGames2018
    புதுடெல்லி:

    அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் அக்டோபர் மாதம் 6-ம் தேதி இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி துவங்கியது. அக்டோபர் 18-ம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா சார்பில் 47 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், இந்த போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்கள் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர் வீராங்கனைகளை பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது அவர்களுடன் கலந்துரையாடி, வாழ்த்து தெரிவித்தார்.



    பிரதமர் மோடி மற்றும் இளைஞர் ஒலிம்பிக் வீரர்கள் இடையேயான இந்த சந்திப்பின்போது,  மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் உடன் இருந்தார். PMModi #YouthOlympicGames2018
    இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீரர் ஜெர்மி லால்ரினுங்கா தங்கம் வென்றார். இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.#YouthOlympics2018 #JeremyLalrinnunga
    பியூனஸ் அயர்ஸ்:

    மூன்றாவது இளையோர் ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. 206 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இந்தியா சார்பில் 47 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    நேற்று இரவு 62 கிலோ எடைப்பிரிவு ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் இளம் விரர் ஜெர்மி லால்ரினுங்கா (வயது 15) மொத்தம் 274 கிலோ பளு தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். இளையோர் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.



    இப்போட்டியில் துருக்கி வீரர் டாப்தாஸ் கானர் (263 கிலோ) வெள்ளிப் பதக்கமும், கொலம்பியாவின் வில்லார் எஸ்டிவன் ஜோஸ் (260 கிலோ) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஜெர்மி லால்ரினுங்கா, இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இளையோர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஜூனியர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார். இரண்டு தேசிய சாதனைகளையும் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. #YouthOlympics2018 #JeremyLalrinnunga
    அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை தங்ஜம் தபாபி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார். #TababiDeviThangjam
    பியூனஸ் அயர்ஸ்:

    3-வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. 206 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இந்தியா சார்பில் 47 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான ஜூடோ போட்டியின் 44 கிலோ உடல் எடைப்பிரிவில் இறுதிபோட்டியில் இந்திய வீராங்கனை தங்ஜம் தபாபி தேவி 0-11 என்ற புள்ளி கணக்கில் வெனிசுலா வீராங்கனை மரியா கிமின்சிடம் தோல்வி கண்டார். இதனால் தங்ஜம் தபாபி தேவி வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதானது.

    வெள்ளிப்பதக்கம் வென்ற தங்ஜம் தபாபி தேவி மணிப்பூரை சேர்ந்தவர். ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பந்தயத்தில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். முன்னதாக நடந்த துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் இந்திய வீரர் துஷர் மானே 247.5 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ரஷிய வீரர் கிரிகோரி ஷமாகோவ் 249.2 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், செர்பியா வீரர் அலெக்சா மிட்ரோவிச் 227.7 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.  #TababiDeviThangjam
    ×