search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yuvanshankar Raja"

    • இப்பாடல் மிகவும் எனெர்ஜடிகாக இருக்கும் எனவும், திரிஷா இப்பாடலில் இடம் பெற்றுள்ளார் எனவும் தகவல்.
    • மங்காத்தா படம் வெளியான தேதியில் கோட் படத்தின் 4வது பாடல் வெளியீடு.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    படத்தின் 3 பாடல்கள் இதற்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நாளை படத்தின் 4- வது பாடல் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தனர். இப்பாடல் ஒரு ஸ்பெஷல் சாங் எனவும். இப்பாடல் மிகவும் எனெர்ஜடிகாக இருக்கும் எனவும், திரிஷா இப்பாடலில் இடம் பெற்றுள்ளார் எனவும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    மேலும், மங்காத்தா படம் வெளியான தேதியில் கோட் படத்தின் 4வது பாடல் வெளியாகவுள்ளதாகவும், இதற்கு மேல் என்ன வேண்டும் எனவும் இயக்குனர் வெட்கெட் பிரபு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    இந்நிலையில், கோட் படத்தின் 4வது பாடலான "மட்ட" நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து, அச்சனா கல்பாதி தனது எக்ஸ் பக்கத்தில், " பல்வேறு காரணங்களுக்காக இது எனக்கும் மிகவும் பிடித்த பாடல்" என்றும் மட்ட பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், பாடலாசிரியர் விவேக்," இது இளையதளபதியின் ப்ளாஸ்ட்.. ஆட்டநாயகன் நடனத்திற்காக காத்திருங்கள்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    • யுவன் சங்கர் ராஜாவுக்கு வக்கீல் நோட்டீஸ்.
    • 20 லட்சத்திற்கும் மேல் வரை வாடகை பணத்தை கொடுக்கவில்லை.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 6-வது தெருவில் பஷீலத்துல்ஜமீலா என்பவரின் வீட்டை கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாடகைக்கு எடுத்து ஸ்டுடியோவாக பயன்படுத்தி வந்துள்ளார்.

    அந்த வீட்டின் மாத வாடகை 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மற்றும் வைப்புத் தொகை 12 லட்சம் ரூபாய் என அக்ரீமெண்ட் போடப்பட்டுள்ளது.

    கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மாத வாடகையை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளனர்.

    இந்த நிலையில் யுவன் சங்கர்ராஜா கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான ரூபாய் 18 லட்சம் வாடகை பணத்தை செலுத்தவில்லை என தெரிகிறது.

    இதனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதனை அடுத்து, மொத்த வாடகை தொகை யான 18 லட்சம் ரூபாயில் 12 லட்சம் ரூபாய் மட்டுமே காசோலையாக வீட்டின் உரிமையாளரிடம் யுவன் சங்கர்ராஜா வழங்கினார்.

    மீதமுள்ள 6 லட்சம் ரூபாய், மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரை வாடகை தொகையான 15 லட்சம் ரூபாய் என மொத் தம் 20 லட்சத்திற்கும் மேல் வரை வாடகை பணத்தை கொடுக்கவில்லை.

    இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் ஆன்லைன் வாயிலாக யுவன் சங்கர் ராஜா மீது சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×