search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜபேர், கார்சியா அரையிறுதிக்கு தகுதி
    X

    கார்சியா, ஜபேர்


    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜபேர், கார்சியா அரையிறுதிக்கு தகுதி

    • கார்சியா அரையிறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபேரை (துனிசியா) சந்திக்கிறார்.
    • கேஸ்பர்ரூட் முதல் முறையாக அமெரிக்க ஓபனில் அரையறுதிக்கு நுழைந்துள்ளார்.

    நியூயார்க்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் 12-ம் நிலை வீராங்கனையான கோகோ கவூப் (அமெரிக்கா)-கரோலின் கார்சியா ( பிரான்ஸ் ) மோதினார்கள்.

    இதில் 17-வது வரிசையில் உள்ள கார்சியா 6-3 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார். 28 வயதான அவர் முதல் முறையாக கிராண்ட் சிலாம் அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளார்.

    கார்சியா அரையிறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபேரை (துனிசியா) சந்திக்கிறார். ஜபேர் காலிறுதி ஆட்டத்தில் 6-4 , 7-6 ( 7-4 ) என்ற நேர் செட் கணக்கில் அஜ்லா டாம்லிஜோனோ விச்சை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார்.

    28 வயதான அவர் அமெரிக்க ஓபன் போட்டியில் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் 5-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே)-மேட்டோ பெரிடினி (இத்தாலி) மோதினார்கள்.

    இதில் ரூட் 6-1, 6-4, 7-6(7-4) என்ற நேர் செட் கணக்கில் 13-வது வரிசையில் உள்ள பெரிடினியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    23 வயதான கேஸ்பர்ரூட் முதல் முறையாக அமெரிக்க ஓபனில் அரையறுதிக்கு நுழைந்துள்ளார்.

    Next Story
    ×