search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: தகுதி சுற்றில் இந்தியாவின் சாய் சமர்தி தோல்வி
    X

    சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: தகுதி சுற்றில் இந்தியாவின் சாய் சமர்தி தோல்வி

    • தமிழகத்தைச் சேர்ந்த சாய் சமர்தி, தனது முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நாவ் ஹிபினோவுடன் மோதினார்.
    • ஆஸ்திரேலியாவின் ஓலிவியா டிஜென்ட்ரா முலியா 6-3, 6-1 என்ற நேர் செட்டில் கசியோனோவாவை தோற்கடித்தார்.

    சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் ஸ்டேடியத்தில் வருகிற 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது.

    முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஆட்டங்கள் நடக்கிறது.

    இதன் தகுதி சுற்று போட்டி இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் இந்தியாவின் சாய்சமர்தி, லட்சுமி பிரபா, சவ்ஜன்யா பவி செட்டிரியா பாட்டியா ருதுஜா போசாலி உள்பட 24 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    2 சுற்றுகள் கொண்ட தகுதி சுற்று முடிவில் 6 வீராங்கனைகள் பிரதான சுற்றுக்கு முன்னேறுவார்கள். தகுதி சுற்று ஆட்டங்கள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

    இதில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சமர்தி, தனது முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நாவ் ஹிபினோவுடன் மோதினார். இதில் சாய் சமர்தி 1-6, 0-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஓலிவியா டிஜென்ட்ரா முலியா 6-3, 6-1 என்ற நேர் செட்டில் கசியோனோவாவை தோற்கடித்தார்.

    மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் சவ்ஜன்யா பவிசெட்டி, ஜப்பானின் கியோகா ஓஹமுகரவுடனும், லட்சுமி பிரபா ஜப்பானின் யுகி நைய்டோவுடனும் மோதினர்.

    Next Story
    ×