என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
T20 உலகக் கோப்பை திருவிழா 2024
இன்றே கிளம்பும் இந்திய வீரர்கள்.. வெற்றிக் கோப்பையுடன் நாளை டெல்லி வருகை!
- கடந்த 2 நாட்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையம் இன்று மாலை மீண்டும் திறக்கப்பட உள்ளது.
- வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க நாடே ஆவலாக உள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 29-ந் தேதி நடந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.
இந்த நிலையில் அட் லாண்டிக் பெருங்கடலில் உருவான 'பெரில்' புயல் தீவிரமடைந்தது. 'பிரிவு-5' வகையை சேர்ந்த புயல் என்பதால், மணிக்கு 260 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் தீவிர புயல் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், பிரிட்ஜ்டவுன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.
பலத்த மழை பெய்து வருவதால், சாலையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. வீரர்கள் பிரிட்ஜ்டவுனில் உள்ள ஹில்டன் ஓட்டலில் முடங்கி உள்ளனர். இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என 70 பேர் அங்கு சிக்கி தவித்தனர் இந்திய வீரர்கள் ஹில்டன் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். பெரில் புயல் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு பார்படாஸ் கரையை கடந்தது.
இதனால் கடந்த 2 நாட்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையம் இன்று மாலை மீண்டும் திறக்கப்பட உள்ளது. எனவே இன்று மாலை 6 மணிக்கு பார்படாஸிலிருந்து விமானம் மூலம் இந்திய அணி கிளம்ப உள்ளது.
இன்று [ஜூன் 2] ஒரு இரவு பயணத்தின்பின் நாளை [ஜூன் 3] காலை 7.45 மணியளவில் இந்திய அணி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வந்து இறங்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க நாடே ஆவலாக உள்ளது. எனவே டெல்லி விமான நிலையத்தில் நாளை கொண்டாட்டத்துக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.