என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
T20 உலகக் கோப்பை திருவிழா 2024
டி20 உலகக் கோப்பை: முதல் போட்டியில் வெற்றி பெற்றது அமெரிக்க அணி
- இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.
- நவ்நீத் தலிவால் 61 ரன்களுக்கும் , நிக்கோலஸ் கிர்டன் 51 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
டல்லாஸ்:
9-வது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடத்தப்படுகிறது.
இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மகாணத்தில் இருக்கும் டல்லாசில் இன்று தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை இந்த கிரிக்கெட் திருவிழா நடக்கிறது. அமெரிக்காவில் முதன் முறையாகவும், வெஸ்ட் இண்டீசில் 2-வது தடவையாகவும் 20 ஓவர் உலக கோப்பை நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது ரவுண்டான சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள போட்டியை நடத்தும் அமெரிக்கா-கனடா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்க கேப்டன் மோனக் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதலில் விளையாடிய கனடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது. தொடக்க வீரரான நவநீத் தல்வால் 44 பந்தில் 61 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்) நிக்கோலஸ் கிர்டன் 31 பந்தில் 51 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்ரேயாஸ் மோவா 16 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), எடுத்தனர். அலிகான், ஹர்மித் சிங், கோரி ஆண்டர்சன் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.
195 ரன் என்ற கடினமான இலக்குடன் அமெரிக்கா களம் இறங்கியது. தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஸ்டீவன் டெய்லர் ரன் எதுவும் எடுக்காமல் கலீம்சானா பந்துவீச்சில் வெளியேறினார்.
7-வது ஓவரில் மற்றொரு தொடக்க வீரரும், கேப்டனுமான மோனக் படேல் 16 ரன்னில் தில்லான் ஹெய்லிகர் பந்தில் ஆட்டம் இழந்தார்.
அமெரிக்க அணி 6.3 ஓவர்களில் 42 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்து திணறியது. 3-வது விக்கெட்டான ஆண்ட்ரிஸ் கூஸ்-ஆரோன் ஜோன்ஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி அமெரிக்க அணியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றது.
வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த போது தான் இந்த ஜோடி பிரிந்தது. ஆந்த்ரே கூஸ் 65 ரன்னில் நிகில் தத்தா பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 46 பந்தில் 7 புவுண்டரி, 3 சிக்சர்களுடன் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 173 ஆக இருந்தது. 3-வது விக்கெட் ஜோடி 131 ரன் எடுத்தது. அடுத்து கோரி ஆண்டர்சன் களம் வந்தார்.
அமெரிக்கா 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 197 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 14 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 195 ரன் இலக்கை எடுத்து முத்திரை பதித்தது. ஆரோன் ஜோன்ஸ் 40 பந்தில் 94 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரி, 10 சிக்சர்கள் அடங்கும்.
அமெரிக்க அணி அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 6-ந் தேதி மோதுகிறது. இதே டல்லாஸ் மைதானத்தில் தான் அந்த போட்டியும் நடக்கிறது. கனடா அணி 2-வது போட்டியில் அயர்லாந்தை வருகிற 7-ந் தேதி சந்திக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்