search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    9. ஆழ்வார் திருநகரி (திருக்குருகூர்)
    X

    9. ஆழ்வார் திருநகரி (திருக்குருகூர்)

    • நம்மாழ்வார் குழந்தையாக தவழ்ந்த புளியமரத்தில் இன்றும் குழந்தையின் உருவம் உள்ளது.
    • இது வியாழ கிரகதோஷ நிவர்த்தி ஸ்தலம்.

    திருமாலிடம் பிரம்மா தவம் இருக்க இடம் கூறுமாறு வேண்டினார்.

    அதற்கு திருமால் நான் உன்னை படைப்பதற்கு முன்பே தாமிரபரணி நதிக்கரையில்

    யாம் எழுந்தருளி உள்ளோம் என்று கூறினார்.

    திருமால் கூறிய இடமான ஆழ்வார்திருநகரி பெருமாள் ஆதியிலே தோன்றிய நாதன் என்பதால்

    ஆதிநாதன் என திருநாமம் ஏற்பட்டது.

    திருமாலே பிரம்மனுக்கு குருவாக காட்டிய இடமாகியதால் குருகூர் என அழைக்கப்படுகிறது.

    ஆற்றில் வந்த சங்கு இப்பெருமானை வழிபட்டு மோட்சம் பெற்றதால்,

    சங்கின் மறுபெயரான குருகு என்பதில் இருந்து குருகூர் என்று அழைக்கப்படுகிறது.

    சங்கு மோட்சம் பெற்ற தலம் இன்றும் திருச்சங்கண்ணிதுறை என்று அழைக்கப்படுகிறது.

    வராஹ அவதாரம் காண முனிவர்கள் இத்தலத்தில் தவமிருந்து அவர்களுக்கு பிராட்டியுடன்

    வராஹ நாராயணன் காட்சி அளித்ததால் வராக ஷேத்திரம் எனவும், நாய்க்கும் மோட்சம் அளித்த

    தீர்த்தகரை என்பதால் தீர்த்த ஷேத்திரம் எனவும், பஞ்ச மஹா ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

    நம்மாழ்வார் குழந்தையாக தவழ்ந்த புளியமரத்தில் இன்றும் குழந்தையின் உருவம் உள்ளது.

    இது வியாழ கிரகதோஷ நிவர்த்தி ஸ்தலம்.

    Next Story
    ×