search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆடி வெள்ளி நவசக்தி அர்ச்சனை
    X

    ஆடி வெள்ளி நவசக்தி அர்ச்சனை

    • அன்று வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும்.
    • அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும்.

    அன்றைய தினம் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்து விளக்கேற்றி, நிவேதனமாக பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து, லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும்.

    அன்று வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும்.

    அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும். ஆடி வெள்ளியில்தான் வரலட்சுமி விரதம் வரும்.

    சில வருடங்களில் இது ஆவணியிலும் அமைந்துவிடும். இவ்வாண்டு ஆவணி முதல் வெள்ளியில் வரலட்சுமி விரதம் வருகிறது.

    பொதுவாக ஆடி வெள்ளிகளில் மாலை ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறும். 108, 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வார்கள்.

    தருமபுர ஆதின தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடி வெள்ளியில் நவசக்தி அர்ச்சனை செய்வார்கள்.

    ஒன்பது சிவாச்சாரியார்கள் ஒன்பது வகை மலர்களால் ஒன்பது சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை எனப்படும்.

    புதுச்சேரி அருகே வங்கக் கடலோரம் அமைந்துள்ள வீராம்பட்டினத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் முதல் வெள்ளியிலிருந்து கடைசி வெள்ளி வரை எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் விசேஷ பூஜைகளும், விதம் விதமான பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறும்.

    ஐந்தாம் வெள்ளியன்று தேர்த் திருவிழா நடைபெறும். இதை அரசாங்க விழாவாகக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள்.

    புதுச்சேரி கவர்னர் தேர்வடத்தை இழுத்து விழாவைத் தொடங்கி வைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.

    ஆடி மாதம் முழுதும் இவ்வூரில் விழாக்கோலம்தான்.

    சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி வெள்ளியில் ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்துகின்றனர்.

    இவ்வம்மன் காதுகளில் உள்ள தாடங்கங்களில் ஸ்ரீ சக்கரம் உள்ளது. ஆடி வெள்ளியன்று, இவ்வம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார்.

    எனவே பள்ளிப் பிள்ளைகள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுதல் அதிக சிறப்பாகும்.

    வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் குழுக்களாக 108, 1008 குத்துவிளக்குப் பூஜைகளை செய்யலாம்.

    அம்மன் பூஜை செய்யும் இல்லத்தில் செல்வம் சேரும்.

    திருவானைக்காவலில் ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமிதேவியாகவும், உச்சிக்கால வேளையில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள்.

    ஆடி வளர்பிறை துவாதசியில் துளசி பூஜை செய்வதால் பல நற்பலன்களைப் பெறலாம்.

    துளசி மாடம்முன் கோலமிட்டு, மாடத்திற்குப் பொட்டிட்டு, துளசிக்கு மாலையிட்டுப் பூஜிக்க வேண்டும். குளித்தபின்தான் துளசிக்கு நீரூற்ற வேண்டும்.

    பிள்ளையார்பட்டி விநாயகருக்கு தினமும் 108 மோதகம் படையல்

    வேறு எந்த தலத்திற்கும் இல்லாத பல சிறப்புகளைக் கொண்டவராக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வீற்றிருக்கிறார்.

    மற்ற விநாயகரின் உருவத்திலிருந்து பிள்ளையார்பட்டி விநாயகர் முற்றிலும் மாறுபட்டவர்.

    குடைவரைக் கோவிலாக உள்ள இக்கோவிலில் புடைப்புச் சிற்பமாக விநாயகர் வடிவம் அமைந்துள்ளது.

    இரு கைகளுடன், பாச அங்குசம் போன்ற படைக்கலன்களின்றி காணப்படுகிறார்.

    கால்களை மடக்கிய நிலையில் அமர்ந்த கோலத்தில், கையில் சிவலிங்கத்தை தாங்கிக் கொண்டு வீற்றிருக்கிறார்.

    உலக நன்மைக்காக சிவதியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். கிரீடம் இல்லாமல் சடை முடி தாங்கி எளிமையானவராக உள்ளார்.

    இவருக்கு முற்காலத்தில் தேசி விநாயகர் என்றே பெயரே வழங்கி வந்திருக்கிறது. தினமும் இவருக்கு 108 மோதகங்கள் படைக்கின்றனர்.

    விநாயகர் சதுர்த்தியன்று முக்குருணி அளவில் (சுமார் 24 கிலோ அரிசியால் செய்த கொழுக்கட்டை) ஒரே மோதகத்தைப் படைக்கின்றனர்.

    Next Story
    ×