என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![ஆடி வெள்ளிக்கு அம்பாளுக்கு என்ன படைப்பது ? ஆடி வெள்ளிக்கு அம்பாளுக்கு என்ன படைப்பது ?](https://media.maalaimalar.com/h-upload/2023/10/03/1960117-001.webp)
ஆடி வெள்ளிக்கு அம்பாளுக்கு என்ன படைப்பது ?
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அங்கு இந்த அப்பத்தை “கனகப்பொடி’ என்கின்றனர்.
- தவிடு நார்சத்துடையது. இதில் வைட்டமின் “பி’ உள்ளது.
ஆடி வெள்ளியன்று தவிட்டு அப்பம் செய்து அம்பாளுக்கு நைவேத்யம் செய்வது வழக்கம்.
தவிடை, வெல்லத்துடன் சேர்த்து குழைத்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.
இதை சப்பாத்தியை விட சற்று கனமான அளவில் தட்டி தீக்கனலில் சுட்டெடுக்க ("நான்' எனப்படும் எண்ணெய் இல்லாத காய்ந்த ரொட்டி சுடுவது போல) வேண்டும்.
தீக்கனல் இல்லாவிட்டால், "நான்ஸ்டிக்' தோசைக்கல்லில் சுட்டெடுக்கலாம்.
ஆடிவெள்ளியன்று காலையில் காபி, டீ கூட சாப்பிடாமல் அம்பாள் பூஜையை முடித்துவிட்டு,
இந்த பிரசாதத்தை முதலில் சாப்பிட வேண்டும்.
கேரளாவில் இப்போதும் இந்த வழக்கம் உள்ளது.
அங்கு இந்த அப்பத்தை "கனகப்பொடி' என்கின்றனர்.
தவிடு நார்சத்துடையது. இதில் வைட்டமின் "பி' உள்ளது.
வெல்லத்தில் இரும்புச் சத்து உண்டு.
ஆடி மாதத்தில் இந்த சத்து உடலுக்கு மிகவும் அவசியம் என்பதால், இந்த உணவை நைவேத்யம் செய்து,
அம்பாளின் அருள் கடாட்சமும் பெற்று சாப்பிடலாம்.