search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆனைக்கா அண்ணலை வழிபட்டு பூதங்களை அழித்த பராசரன்
    X

    ஆனைக்கா அண்ணலை வழிபட்டு பூதங்களை அழித்த பராசரன்

    • அறிஞர்களின் ஆலோசனைப்படி ஆனைக்காவைச் அடைந்து ஆக முறைப்படி ஆனைக்கா அண்ணலை வழிபட்டான்.
    • அவன் வழிபாட்டைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்குத் திருவருள் வழங்கினார்.

    இந்திரசபையில் ஒருநாள் விசுவாமித்திரனுக்கும், வசிட் டனுக்கும் இடையே நடந்த விவாதத்தில் விசுவாமித்திரன் தோற்றுப்போனான்.

    விசுவாமித்திரன் கோபமடைந்து வசிட்டனைக் கொல்லுவதற்காக வேள்வித் தீ ஒன்றை வளர்த்து, அதில் இருந்து ஒரு பூதத்தை தோற்றுவித்து வசிட்டனைக் கொன்று வருமாறு அனுப்பினான்.

    ஆனால் பூதமோ பர்ணசாலையில் வசிட்டனின் சாயலில் இருந்த அவனது மகனான சத்தி முனிவனைக் கொன்று விட்டது.

    அப்பூதம் வெளியில் சென்று திரும்பிய வசிட்டன் தன் மகன் இறந்திருப்பதைக் கண்டு அலறினான்.

    வசிட்டனைத் தேற்றுவதற்காக நான்முகன் தோன்றினான். இறந்தவரின் மனைவி கருவுற்றிருக்கும் செய்தியைக் கூறி அச்சிசுவால் உன் குலம் உலகெல்லாம் ஒளிவீசப் போகிறது என்று கூறினான்.

    வசிட்டன் தனது மருமகள் வயிற்றில் இருக்கும் சிசுவின் செவிகளில் விழும் வகையில் இடைவிடாது வேத மந்திரங்களை உச்சரித்து வந்தான்.

    தாயின் கருவில் இருந்தே தத்துவஞானம் முழுவதையும் பெற்ற அவ்வுயிர் பராசரன் என்னும் பெயர் கொண்ட ஆண் விற்றையாகத் தோன்றியது.

    வசிட்டன், பராசரன் வாலிபனானதும் நடந்த சோகக் கதையைக்கூறினான். அநியாயமாகத் தன் தந்தை கொல்லப்பட்டதை எண்ணி அவன் மனம் துடித்தது.

    தாயின் விதவைக் கோலம் நீங்க, அகில புவனத்தில் உள்ள அத்துனை அரக்க பூதங்களையும் அழிக்க நினைத்தான்.

    அறிஞர்களின் ஆலோசனைப்படி ஆனைக்காவைச் அடைந்து ஆக முறைப்படி ஆனைக்கா அண்ணலை வழிபட்டான்.

    அவன் வழிபாட்டைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்குத் திருவருள் வழங்கினார்.

    சிவபெருமானின் அருள்பெற்ற பராசரன் ஆன்மா சாந்திய டையாது பேய் உருவில் அலைந்து கொண்டிருந்த தனது தந்தைக்கு மானுடயாக்கை பெறச்செய்தான்.

    ஆனைக்கா திருகோவிலின் வடகிழக்கு மூலையில் வேள்விச் சாலை அமைத்து மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தி அத்தீயினில் அரக்க பூதங்கள் அனைத்தும் விட்டில் பூச்சிகளைப்போல் விழுந்து இறக்குமாறு செய்தான்.

    Next Story
    ×