என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்த்த அம்மன்
- ஏராளமான பக்தர்களுக்கு கனவிலேயே தீர்வு சொல்லி உள்ளாள்.
- அம்மனுக்கு எலுமிச்சம் பழமாலை மிகவும் பிடிக்கும்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங் காவலர்கள் குழு உறுப்பினராக இருக்கும் சி.ரா.மு.ராமமூர்த்தி பூசாரி தற்போது கோவில் மேம்பாட்டு பணிகளை அரசின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செய்து வருகிறார். தன் மூதாதையர்களின் பரம்பரை சிறப்பு உணர்ந்து அவர் அம்மனுக்கு கைங்கர்யம் செய்து வருகிறார். அவர் அளித்த பேட்டி:-
அறங்காவலர் குழு உறுப்பினர் பொறுப்பு எப்படி உணர்கிறீர்கள்?
சுமார் 500 ஆண்டுகளாக எங்களது பரம்பரை இத்தல பணியை செய்து வருகிறது. கோவில் நிர்வாகிகளாகவும், பூசாரிகளாகவும் எங்கள் பரம்பரை உள்ளது.
இதை நாங்கள் மிகவும் உன்னதமாக கருதுகிறோம். அம்மனை இன்னும் 10 நிமிடம் பார்க்க மாட்டோமா? என்று மக்கள் தவம் இருக்கும் இந்த காலத்தில், அம்மனுக்கு சேவையாற்றுவதை நாங்கள் எங்களுக்கு கிடைத்த கவுரவ மாகவும், பெருமையாகவும் கருதுகிறோம்.
இருக்கன்குடி தலத்தின் முக்கிய சிறப்பு என்ன?
எல்லா முக்கிய கோவில்களிலும் ஏதாவது ஒரு சித்தர் அடங்கி இருப்பார். இத்தலத்தில் சிவபோக ஞானசித்தர் அடங்கி உள்ளார். 1500 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அம்பாள் காட்சி கொடுத்தாள். அவர் நிஷ்டையாகி உள்ள இடத்தில் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அம்மன் இங்கு சிவசொரூபியாக இருக்கிறாள். இதனால் அவளுக்கு எதிரில் நந்தி வைக்கப்பட்டுள்ளது. அவளது வாகனமாக ரிஷபம் உள்ளது. மற்ற அம்மன் தலங்களில் குங்குமம் கொடுப்பார்கள். ஆனால் இத்தலத்தில் விபூதிதான் பிரதானமாக அளிக்கப்படுகிறது.
கோடிக்கணக்கான பக்தர்களை இந்த அம்மன் ஈர்த்தது எப்படி?
இருக்கன்குடி மாரியம்மன் கண்கண்ட பேசும் தெய்வம் ஆவாள். அவளிடம் மனக்குறையை கொட்டினால் ஆறுதல் தருவாள் என்பது பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள அனுபவமாகும். இதன்மூலம் வேண்டிய வரம் கொடுத்தாள்.
ஏராளமான பக்தர்களுக்கு அவள் கனவிலேயே தீர்வு சொல்லி உள்ளாள். இதன்மூலம் பக்தர்கள் ஈர்க்கப்பட்டனர்.
மாரியம்மனை வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும்?
அம்மை நோய் உடனே தீரும். கண்நோய்கள் குணமாகும். வயிற்றுவலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும். குறிப்பாக குழந்தை வரம் கேட்டு தொட்டில் கட்டினால் உடனே பலன் கிடைக்கிறது.
இருக்கன்குடி மாரியம்மன் சமீபத்தில் நிகழ்த்திய அற்புதம் உள்ளதா?
நம்பி தொழுதவர்கள் யாரையும் இந்த அம்மன் கைவிட்டதே இல்லை. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பக்தர், அம்மன் தன்வாழ்வில் நிகழ்த்திய அதிசயத்தை சொல்லியபடிதான் உள்ளனர்.
கடந்த 13 ஆண்டுகளாக வாய் பேசாமல் இருந்த என் தம்பி, தற்போது மெல்ல பேச தொடங்கி இருக்கிறார்.
சுமார் 10 ஆண்டு களுக்கு முன்பு நான் பூஜை வைத்தபோது, ஒரு பெண்ணை மரண படுக்கையில் தூக்கி வந்தனர். டாக்டர்கள் கைவிட்டு விட்ட நிலையில் அந்த பெண் 21 நாள் கோவிலில் விரதம் இருந்து தினமும் அம்மன் தீர்த்தத்தை குடித்து வந்தார்.
அம்மன் அருளால் உயிர் பிழைத்த அவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆளே அடையாளம் தெரியாதபடி செல்வ செழிப்புடன் வந்தார். இதுவும் அம்மனின் திருவிளையாடல்தான்.
ராஜேந்திரன் பூசாரி ஒரு தடவை மின்சாரத்தால் தாக்கப்பட்டார். மின்சாரம் பாய்ந்ததும் மாரி தாயே என்று அவர் அலற, மறு நிமிடம் அங்கு மாரியம்மன் தோன்றி அவரை காப்பாற்றி இருக்கிறாள். இப்படி அம்மனின் திருவிளையாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
இருக்கன்குடி மாரியம்மனுக்கு எவையெல்லாம் இஷ்டமானவை?
அம்மனுக்கு எலுமிச்சம் பழமாலை மிகவும் பிடிக்கும். அவளை நினைத்து மாவிளக்கு போட்டால் வயிற்று வலி தீரும்.
அவளுக்கு தேங்காய், பழம் முக்கியம், அவளுடைய எல்லா வழிபாடுகளிலும் தவறாமல் தேங்காய் இடம் பெறும்.
திருமணத்தடை அகல எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும்?
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்