என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
மகா பைரவ ருத்ர ஆலயம்
- பைரவர் வீற்றிருக்கும் கருவறை பகுதி பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
- ஸ்ரீமகா பைரவர் சிலையை சுற்றி 8 பைரவர்கள் அமையப் பெற்றுள்ளனர்.
சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழியில் மறைமலைநகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
மகேந்திரா சிட்டி நகரின் உட்புறமாக சென்றால், அந்த வழித்தடம் நம்மை திருவடி சூலம் கிராமத்துக்கு அழைத்து செல்லும், அங்கு சுற்றிலும் மலை சூழ்ந்திருக்க, பச்சை பசேல் சூழ்நிலையில் மகா பைரவ ருத்ர ஆலயம் அமைந்துள்ளது. இந்த தலத்தின் நுழைவாயிலில் காலடி எடுத்து வைத்ததும் மனதில் அமைதி ஓடிவந்து ஓட்டிக் கொள்கிறது. பயம் என்ற சொல்லே பஞ்சாகப் பறந்து போய் விடுகிறது. பயம் போக்கும் பைரவர், நம் ஒவ்வொருவரது மனதிலும் வந்து உட்கார்ந்து கொள்கிறார்.
கருவறை
ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியும் நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. அதிலும் பைரவர் வீற்றிருக்கும் கருவறை பகுதி பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. ஒரு மனிதன் தலைகீழாக நின்றால் எப்படி இருக்குமோ, அதே வடிவமைப்பில் பைரவர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. கருவறை மிக அகலமாகவும், போக, போக மேலே ஒல்லியாகவும் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் பைரவருக்கு கீழ் 35 அடி ஆழத்தில் பாதாள பைரவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆகம தத்துவப்படி பார்த்தால், பைரவர் ஆலய கருவறையில் ஆசர்ஷணசக்தி நிலை கொண்டுள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஆதிமூலம் உள்ளே உள்ளது. அதற்கு ஏற்ப மூலவர் ஸ்ரீமகா பைரவர் சிலையை சுற்றி 8 பைரவர்கள் அமையப் பெற்றுள்ளனர்.
தேய்பிறை அஷ்டமி
சிவ ஆகம விதிகளின்படி இங்கு தீப வழிபாடு நடத்தப்படுகிறது. இத்தலத்தில் பரிவார தெய்வங்களாக ருத்ர விநாயகர், வைஷ்ணவிதேவி, பிருத்தியங்கரா தேவி, வள்ளி- தேவசேனை சமேத சுப்பிரமணியர் உள்ளனர்.
பிரகார காவல் தெய்வங்களாக நாகசக்தியும், வன துர்க்கையும் அமைந்துள்ளனர். சற்று தொலைவில் தன் வந்திரி பகவான் வீற்றுள்ளார்.
அவர் முன் தீர்த்த கிணறு உள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் எவ்வளவு கொடூர நோயாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகமாகும். ஸ்ரீமகா பைரவர் ஆலயத்தின் ஒரு பகுதியில் கோமாதா குடிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்தலத்தில் தினமும் காலை 6 மணி,மாலை 6 மணி, இரவு 8 மணி ஆகிய நேரங்களில் மூன்று கால பூஜை நடத்தப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறும். கிருத்திகை, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இத்தலத்தில் ஒரு முழம்பூ வாங்கிப் போட்டு வணங்கினால் கூட பைரவர் மகிழ்ச்சி அடைவார்.
பைரவ சித்தாந்தம் சுவாமிகள்
இயல்பான நிலையில் இறைவனை வழிபட வேண்டும் என்பது இந்த ஆலயத்தை கட்டியுள்ள ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகளின் கருத்தாகும்.
ஸ்ரீமகா பைரவர் 12 ராசிகளையும் தன் அங்கமாக கொண்டவர். எனவே ராசிப்படி ஏற்பட்ட கர்மங்கள் தொலைந்து போகும். திருவடி சூலம் ஸ்ரீமகாபைரவ ருத்ர ஆலயத்தில் ஒருதடவை காலடி எடுத்து வைத்தால் நீங்கள் அதை உணர்வீர்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்