search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருக்கயிலை சிறப்பு
    X

    திருக்கயிலை சிறப்பு

    • மறைந்த மங்கை மறுபடியும் ஒருநாள் சிவபெருமான் முன் தோன்றினாள்.
    • சாம்பலால் அகில உலகை காத்து இரட்சித்தாள் தாய்! பாம்புருக்கொண்டு பாங்காக வேற்காட்டில் அமர்ந்தாள்.

    வேயுறு தோனி பங்கன்! விடமுண்ட கண்டன்! மாதொரு பாகனாய் வீற்றிருக்கும் இடம் திருக்கயிலை. ஓங்காரத்தின் உட்பொருள்! பரம்பொருள்!! அம்மையும் அப்பனுமாய் அமர்ந்திருக்கும் இடம் கயிலைமலை. அருளே உருவானவன். பொன்னவிர் மேனியான். கங்கையும் திங்களும் அணிந்தவன்.

    அவர்கள் இருவருக்கும் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையையும் கொன்று வந்தான்.

    தேவகி எட்டாவது முறையாக கர்ப்பமானாள். அதே சமயத்தில் கோகுலத்தில் நந்தகோபனின் மனையாளும் கர்ப்பமானாள். அவளது கர்ப்பத்தில் உதித்தவள் மாயை என்னும் மகாசக்தி.

    இறைவனின் எண்ணப்படி இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரசவம். வசுதேவர் குழந்தைகளை இடம் மாற்றினார். மாயக்கண்ணன் ஆயர்பாடியில்! மாயாசக்தி கம்சனின் சிறைக்கூடத்தில்.

    வாளெடுத்து வந்தான் கம்சன். பச்சிளம் குழந்தையைக் கொல்லும் மாவீரன். பிறந்தது பெண்ணென்றாலும் கொல்வேன் என்று அந்த மாணிக்கத்தை தூக்கி வீசினான்.

    அடுத்த கணம்...

    அந்தரத்தில் நின்று சிரித்தாள் அந்த மகாசக்தி! அடேய் கொலைப்பாதகா! நான் கருமாறி வந்தவளடா! ஊர் மாறி பேர் மாறி உருமாறி கருமாறி வந்த என்னைக் கொல்லப் போகிறாயா? அது உன்னால் முடியுமா? மும்மூர்த்திகளாலும் முடியாத செயலை, அற்பனே, நீ செய்ய முனைந்தாயா? உன்னை ஒரே நொடியில் பொடிப்பொடியாக்கிவிடுவேன். ஆனால் மண்ணுலக மக்களுக்கு அருள் செய்ய புறப்பட்டவள் நான்! உன்னைக்கொன்று மறுபடியும் ரௌத்காரியாக மாற விரும்பவில்லை.உன்னை கொல்ல வேறொருவன் பிறந்துவிட்டான் என்று கூறி அந்தரத்தில் நின்றவள் மறைந்தாள்.

    மறைந்த மங்கை மறுபடியும் ஒருநாள் சிவபெருமான் முன் தோன்றினாள். கிருஷ்ணமாரியாகத் தோன்றியவளின் உக்கிர சொரூபத்தைக் கண்டு தேவர்களே திகைத்தனர். அசுரரின் கொட்டத்தை அடக்கிட சாம்பலை அள்ளித் தந்தார் சிவபெருமான்.

    சாம்பலால் அகில உலகை காத்து இரட்சித்தாள் தாய்! பாம்புருக்கொண்டு பாங்காக வேற்காட்டில் அமர்ந்தாள். கலியின் வெங்கொடுமை மீண்டும் தலைதூக்கியது. மக்களை காக்க மாதா மீண்டும் தோன்றினாள் மீண்டும் கருமாரியாகக் கோவில் கொண்டாள்.

    Next Story
    ×