search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அபிஷேகப் பலன்கள்
    X

    அபிஷேகப் பலன்கள்

    • நெய் அபிஷேகம் செய்தவுடன் ஆறிய வெந்நீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.
    • ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வகை வகையான மலர்கள் சிரசில் வைக்க வேண்டும்.

    நல்லெண்ணை-சுகம் அளிக்கும், பஞ்சகவ்யம்- தூய்மையை அளிக்கும், பால்-ஆயுளை வளர்க்கும்,

    தேன்-மகிழ்ச்சி, இன்குரல் கொடுக்கும், சர்க்கரை- திருப்தியைக் கொடுக்கும்,

    எலுமிச்சை ரசம்-ஞானம் அளிக்கும், இளநீர்- ஆனந்தத்தையும் சிவபோகத்தையும் கொடுக்கும்,

    பஞ்சாமிருதம்- ஜயம் கொடுக்கும், தயிர்-செல்வம் அளிக்கும், கருப்பஞ்சாறு- பலம்,

    ஆரோக்கியம் கொடுக்கும், மஞ்சள் தூள்- ராஜவசியத்தைக் கொடுக்கும்,

    திராட்சை ரசம்-பணம் கொடுக்கும், மாதுளை-அரச பதவி கொடுக்கும்,

    நெய்- மோட்சத்தைக் கொடுக்கும், அன்னம்- வயிற்று நோயை நீக்கும், அரிசி மாவு- கடனைப் போக்கும்,

    நெல்லிக்கனி-பித்தம் நீக்கும், பழ ரசங்கள்- வறட்சியைப் போக்கும்,

    கங்காஜலம்-சாந்தியைக் கொடுக்கும், பன்னீர் கலந்த சந்தனம்- பக்தியையும், ஞானத்தையும் கொடுக்கும்,

    ஆவாகன கலச தீர்த்தம்- மந்திர சித்தியைக் கொடுக்கும், விபூதி- செல்வத்தைக் கொடுக்கும்,

    சொர்ணாபிஷேகம்- மோட்ச சாம்ராஜ்யத்தைக் கொடுக்கும்.

    நெய் அபிஷேகம் செய்தவுடன் ஆறிய வெந்நீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வாசனை கலந்த சுத்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, அடுத்தது தொடங்க வேண்டும்.

    ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வகை வகையான மலர்கள் சிரசில் வைக்க வேண்டும்.

    ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் போது சல்லடைக் கண்கள் உள்ள தாராபாத்திரத்தில் அபிஷேகம் செய்யதால் நன்மைகள் பல உண்டு. சத்ருத்ரம், ஏகாதச ருத்ரம், ருத்ரம், புருஷசூக்தம், ம்ருத்யுஞ்ஜம், காயத்ரி, சிவநாமாக்கள் ஆகியவை சொல்லி அபிஷேகம் செய்வது நல்லது.

    சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும்.

    சுகம், சந்தான விருத்தி ஏற்படும். நெய் அபிஷேகம் செய்ய சர்வரோகங்களும் நீங்கி வம்சவிருத்தி ஏற்படும். சர்க்கரை கலந்த பாலாபிஷேகம் செய்ய மந்திர லோபங்களால் பாதிப்பு ஏற்படாது.

    வாசனைத் திரவியங்களோடு கூடிய தயிர் அபிஷேகம் சத்ருக்களை அழிக்கும். தேன், வியாதிகளை நீக்கும்.

    கருப்பஞ்சாறு துக்கங்களை நீக்கி சந்தோஷத்தைக் கொடுக்கும்.

    Next Story
    ×