என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
அகத்தியரின் மருத்துவத்திற்கு வித்திட்ட இடம் இதுதான்
- அகத்திய முனிவர் பொதிகைக்கு வந்து கொண்டிருந்தபோது கடையம் அருகே உள்ள தோரணமலையை பார்த்து வியந்தார்.
- யானை வடிவத்தில் இருந்த அந்த மலை வாரணமலை என்றழைத்தார். அதுதான் மருவி தோரணமலை ஆகிவிட்டது.
அகத்தியர், தேரையர் வழிபட்ட இந்த சிறப்பான முருகன் அறுபடை வீடுகளுக்கு இணையாக பக்தர்களிடம் பிரசித்தி பெற்றிருக்க வேண்டுமே...
ஏன் பல நூறு ஆண்டு கழித்து இப்போது தெரியத் தொடங்கியுள்ளது? என்று நீங்கள் கேட்கலாம்.
அதற்கு விடை காண நாம் வரலாற்று நிகழ்வுகளை பார்க்க வேண்டும்.
உலகத்தை சமப்படுத்த தென்பகுதியில் உள்ள பொதிகை மலைக்கு செல் என்று சிவபெருமான், அகத்தியருக்கு உத்தரவிட்டு, அவர் வந்த கதை உங்களுக்கு தெரிந்ததுதான்.
அகத்திய முனிவர் பொதிகைக்கு வந்து கொண்டிருந்தபோது கடையம் அருகே உள்ள தோரணமலையை பார்த்து வியந்தார்.
யானை வடிவத்தில் இருந்த அந்த மலை வாரணமலை என்றழைத்தார். அதுதான் மருவி தோரணமலை ஆகிவிட்டது.
தோரணமலை அவருக்கு மிகவும் பிடித்துபோனது.
அதற்கு மிக முக்கிய காரணம் அந்த மலை அவருக்கு மனதை குளிரச் செய்து அமைதியை தந்தது.
எனவே அந்த மலையில் சிறிது காலம் தூங்கி செல்லலாம் என்று அகத்தியர் மலை உச்சிக்கு சென்றார்.
தோரணமலையில் பச்சை பசேலன விளைந்து கிடந்த சுமார் 4 ஆயிரம் மூலிகை செடி வகைகளை பார்த்ததும் அகத்தியர் மேலும் மகிழ்ச்சி அடைந்தார்.
அந்த மூலிகைகள் என்னென்ன நோய் தீர்க்கும் என்பதை கண்டுபிடித்தார்.
அந்த குறிப்புகளை எல்லாம் அவர் குறிப்புகளாக எழுதினார்.
அவைதான் இன்று அகத்தியர் மருத்துவ நூல்களாக உலகம் முழுவதும் பரவியுள்ளன.
ஆக அகத்தியரின் மருத்துவ ஆய்வுக்கு வித்திடப்பட்ட இடம் இந்த தோரணமலை என்பது குறிப்பிடத்தக்கது.