search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆஞ்சநேயர் சிறப்பு தகவல்கள்-20
    X

    ஆஞ்சநேயர் சிறப்பு தகவல்கள்-20

    • உடல் மற்றும் மன வலிமையை பெருக்க நினைப்பவர்கள் ஆஞ்சநேயரை வழிபடலாம்.
    • ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஒரு ஐதிகம் உள்ளது.

    1) ஆஞ்சநேயர் என்றால் பளிங்கு போல் களங்கமற்ற மனம் உடையவன் என்று பொருள்.

    பொன் நிறமுடையவன் என்ற பொருளும் அவருக்கு உண்டு. அஞ்சனை மைந்தன், குண்டலங்களால் ஒளி விடும்

    முகத்தை உடையவன், கரங்கூப்பி வணங்கி கொண்டு இருப்பவன் என்ற பொருள்களும் உண்டு.

    2) ஆஞ்சநேயரை வழிபட்டால் மக்கள் பேறு, புகழ், கல்வி, செல்வம் போன்றவற்றை பெறலாம்.

    3) ஆஞ்சநேயரை மனதில் நினைப்பவர்கள் இந்த பிறவியில் சர்வ காரிய சித்தி பெற்று ஆரோக்கியத்துடன் வாழ்வர்.

    மறு பிறவியில் ராமன் அருளால் முக்தியும் அடைவார்கள்.

    4) உடல் மற்றும் மன வலிமையை பெருக்க நினைப்பவர்கள் ஆஞ்சநேயரை வழிபடலாம்.

    5) ஆஞ்சநேயரின் வாலுக்கு 48 நாட்கள் சந்தனம், குங்குமம் வைத்து வழிபட்டு வந்தால் நன்மைகள் பல அடையலாம்.

    ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஒரு ஐதிகம் உள்ளது.

    6) படிப்பில் மந்தமான குழந்தைகளை "ஸ்ரீ ராமஜெயம்" 108 முறை அல்லது 1008 முறை எழுத வைத்து அதை

    மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு அணிவித்தால் அந்த குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

    7) "ராம் ராம்" என்ற ராம நாமத்தை தியாகராஜ சுவாமிகள் 96 கோடி தடவை ஜெபித்து ஸ்ரீராமர் தரிசனம் பெற்றார்.

    8) தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டும் ஆஞ்ச நேயர் ஜெயந்தியை மார்கழி மாதம் மூல நட்சத்திரமும்,

    அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் கொண்டாடுகிறார்கள். மார்கழியில் மூல நட்சத்திரமும், அமாவாசையும்

    சேர்ந்து வராவிட்டால் அமாவாசையில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை கொண்டாடலாம்.

    ஆனால் வட மாநிலங்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி வைகாசி மாதத்தில் வளர்பிறையில் வரும் தசமி திதியன்று கொண்டாடப்படுகிறது.

    9) ஆஞ்சநேயருக்கு "நைஷ்டிகப் பிரம்மசாரி" என்ற ஒரு பெயரும் உண்டு. அவர் பிரம்மச்சாரி என்றாலும் பெண்களும் அவரை வழிபடலாம்.

    10) ஆஞ்சநேயருக்கு "சிறிய திருவடி" என்ற சிறப்பு பெயர் உண்டு. (பெரிய திருவடி-கருடன்)

    11) சித்திரையில் ஸ்ரீராம நவமி தினத்திலும், மாதந்தோறும் வரும் கேட்டை நட்சத்திரத்திலும் ஆஞ்சநேயரை வழிபடலாம்.

    12) ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆஞ்சநேயரை வழிபடலாம்.

    13) ராகவேந்திர சாமிகள் பிருந்தாவன பிரவேசம் செய்வதற்கு முன்பு "பஞ்சமுகி" யில் ஆஞ்சநேயரை தியானித்தார் என்று வரலாறு கூறுகிறது.

    14) வியாசராஜர் 732 இடங்களில் ஆஞ்சநேயர் சிலையை பிரதிஷ்டை செய்து உள்ளார்.

    15) புரந்தர தாசர் ஆஞ்சநேயர் பாடல்களை பாடி உள்ளார். துளசி ராமாயணத்தில் ஆஞ்சய நேயரைப் பற்றி பாராயணம் உள்ளது.

    16) சுந்தர காண்டத்தில் ஆஞ்ச நேயரின் புகழ் பற்றி குறிப்பிப்பட்டு உள்ளது.

    17) ஆஞ்சநேயர் கடலை கடந்தது, இலங்கையில் சீதையை மீட்டது, போர்க்களத்தில் சுருண்டு விழுந்த லட்சுமணன்

    உள்ளிட்டவர்களுக்கு மூலிகை உள்ள மலையை தூக்கி வந்து மூலிகையால் அவர்களை குணப்படுத்தியது என்று

    அவர் செய்த செயல்கள் அனைத்தும் வெற்றியானது. அதேபோல ஆஞ்சநேயரை வழிபட்டவர்களுக்கு

    அனைத்து காரியங்களிலும் ஆஞ்சநேயர் வெற்றியை கொடுப்பார்.

    18) ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம்.

    19) ஆஞ்சநேயரின் படத்தையும், ராமர் பட்டாபிஷேக படத்தையும் வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.

    20) வீட்டு வாசலில் சிலர் வாஸ்து கணபதி படத்தை வைத்து இருப்பார்கள். ஆனால் வீட்டு வாசலில் ஆஞ்சநேயர் படத்தை வைக்கக்கூடாது.

    Next Story
    ×