search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அனுமன் பூஜித்த குரு ஸ்தலம்
    X

    அனுமன் பூஜித்த குரு ஸ்தலம்

    • இங்குள்ள தட்சிணாமூர்த்தியைப் போன்று சிறப்புடைய உருவத்தை வேறு எங்கும் காணமுடியாது.
    • சடையோடு கூடிய முகம். சற்றே சாய்ந்த அழகிய திருக்கோலம்.

    சென்னையை அடுத்துள்ள பாடி என்ற புறநகர், திருவலிதாயம் என்று பண்டைய நாட்களில் அழைக்கப்பட்டது.

    பரத்வாஜ் முனிவர், அனுமான் ஆகியோர் பூஜித்த தலம்.

    வியாழகுரு இங்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

    இங்கு இருக்கும் இறைவன் திரு வலிதாயநாதர், மற்றும் திருவல்லீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

    அம்பிகையின் பெயர் ஸ்ரீ தாயம்மை. ஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களைப் பெற்ற புண்ணிய தலம்.

    தக்கோலம்

    அரக்கோணத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது தக்கோலம் எனப்படும் திருவூறல்.

    இங்குள்ள தட்சிணாமூர்த்தியைப் போன்று சிறப்புடைய உருவத்தை வேறு எங்கும் காணமுடியாது.

    சடையோடு கூடிய முகம்.

    சற்றே சாய்ந்த அழகிய திருக்கோலம்.

    இருக்கையில் ஏற்றி வைத்த காலோடு மிகச்சிறப்பான கலை நயத்தோடு உள்ளார் தட்சிணா மூர்த்தி.

    Next Story
    ×