search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அனுமன் சாப்பிட்ட இலை!
    X

    அனுமன் சாப்பிட்ட இலை!

    • இனிப்புடன் 16 வகைக் காய்கறிகளுடன் வடை, அப்பளம், பாயசம் என்று உணவு வழங்கப்படுகிறது.
    • சிலர் அந்த இலைகளைத் தலைமேல் வைத்து எடுத்துச் செல்கிறார்கள்.

    முசிறியை அடுத்த காட்டுப்புத்தூர் அருகில் உள்ள நாகையநல்லூர் என்னும் திருத்தலத்தில் கொண்டாடப்படும் ஸ்ரீராமநவமி உற்சவம் சற்று வித்தியாசமானது.

    விழாவை முன்னிட்டு தினமும் உபன்யாசம், நடிப்புடன் கூடிய கதா காலட்சேபம் ஆகியவை சிறப்புற நடைபெறும்.

    இந்த விழாவின் கடைசி நாள் அன்று சீதா ராம திருக்கல்யாணம் நடைபெறும்.

    அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு திருமண விருந்து அளிக்கப்படும்.

    இந்த விருந்தில் கலந்து கொண்டாலே நம் பாவங்கள் நசிந்து புண்ணியம் சேரும் என்கிறார்கள்.

    தார்சாலையில் சுமார் 200 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும் கொண்ட பந்தலின் கீழ் எவ்விதத் தரை விரிப்பும் இன்றி பக்தர்கள் வரிசையாக அமர்ந்து கொள்வார்கள்.

    அனைவருக்கும் தலைவாழை இலை போடப்படும்.

    இனிப்புடன் 16 வகைக் காய்கறிகளுடன் வடை, அப்பளம், பாயசம் என்று உணவு வழங்கப்படுகிறது.

    அத்துடன் விருந்து உண்ணும் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் தட்சணை வழங்குகிறார்கள்.

    விருந்து சாப்பிட்டதும் இலையை மூடக்கூடாது.

    அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் சிலர் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக அந்த இலைகளின் மீது அங்கப்பிரதட்சணம் செய்கிறார்கள்.

    சிலர் அந்த இலைகளைத் தலைமேல் வைத்து எடுத்துச் செல்கிறார்கள்.

    இத்திருமண வைபவத்தில் ஸ்ரீஆஞ்சநேயருடன் முனிவர்கள், தேவர்கள் ஆகியோர் மானசீகமாக விருந்தில் கலந்து கொண்டு அடியார்களாக சாப்பிட்டிருப்பார்கள் என்பது நம்பிக்கை.

    அதனால் அவர்கள் சாப்பிட்ட இலைகளில் குறிப்பாக அனுமனும் சாப்பிட்டிருப்பதால் அந்த இலைகளில் அங்கப்பிரதட்சணம் செய்கிறார்கள்.

    இதனால் ராமனின் திருவருள் எளிதில் கிட்டும் என்பது ஐதீகம்.

    Next Story
    ×