என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
அத்திவரதர் குளத்தில் எழுந்தருளியது ஏன்?
- அதே இடத்தில் ஒரு மண்டபம் கட்டி, அதில் வைத்து பூஜித்ததாகவும் சொல்லப்படுகிறது.
- பிற்பாடு சில காலம் கழிந்து அந்த இடத்தில் பெருமாள் இருப்பது சிலரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அனந்தசரஸ் புஷ்கரணிக்குள் ஒரு மண்டபம் அமைத்து அதில் ஸ்ரீ அத்தி வரதரை எழுந்தருளியிருக்கும்படி செய்துள்ளார்கள்.
இவரை இங்கு எழுந்தருளியிருக்கச் செய்தது பற்றி பலவாறு கூறப்பட்டு வருகிறது.
வெள்ளைக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் கோவில் சிலைகள் அனைத்தையும் அவர்கள் நாட்டிற்குக் கடத்திச் சென்ற
வேளையில், இந்த ஸ்ரீ அத்திவரதரையும் நாடு கடத்திவிடுவார்களோ என்று அச்சத்தில் அப்போது இதனை
ஆராதித்து வந்தவர்கள் இவரை பூமிக்கடியில் பள்ளம் தோண்டி புதைத்திருந்தனர்.
பிற்பாடு சில காலம் கழிந்து அந்த இடத்தில் பெருமாள் இருப்பது சிலரால் கண்டுபிடிக்கப்பட்டு அவரை
அங்கேயே ஆராதித்து வந்தார்கள் என்றும் அவருக்கு அதே இடத்தில் ஒரு மண்டபம் கட்டி,
அதில் வைத்து பூஜித்ததாகவும் சொல்லப்படுகிறது.
அந்த மண்டபத்தைச் சுற்றிலும் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கியதால் அதையே ஒரு குளமாக மாற்றி
நிரந்தரமாக தண்ணீருக்குள்ளேயே அவரை வைத்துவிட்டதாகவும், 40 வருடத்திற்கு ஒருமுறை அவரை வெளியே எடுத்து
ஒரு மண்டல காலத்திற்கு அவரை பூஜித்ததாகவும், பின்னர் அதற்குள் அவரை வைத்துவிட்டதாகவும் ஒரு சிலரால் கூறப்பட்டு வருகிறது.