search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பைரவர் திட்டத்தினால் களைப்பான அனுமான்
    X

    பைரவர் திட்டத்தினால் களைப்பான அனுமான்

    • அங்கிருக்கும் சுயம்பு லிங்கங்களில் ஒரு பெரிய சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டார்.
    • பிறகு ஆகாய மார்க்கத்தில் ராமேஸ்வரத்தை நோக்கிப் பயணமானார்.

    காசி பட்டணத்திற்கு சென்ற அனுமான் அன்றிரவு அங்கு உறங்கி மறுநாள் ஆதவன் உதிக்கும் முன்னரே எழுந்தார்.

    புனித கங்கையில் நீராடி, பக்தி சிரத்தையுடன் ஸ்ரீ காசி விஸ்வநாதரை தரிசித்தார்.

    அங்கிருக்கும் சுயம்பு லிங்கங்களில் ஒரு பெரிய சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டார்.

    பிறகு ஆகாய மார்க்கத்தில் ராமேஸ்வரத்தை நோக்கிப் பயணமானார்.

    கால பைரவருக்கு கொடுத்த வாக்குப்படி ஆதவன் உதயமாகி தன் பூரண சக்தியுடன் பிரகாசிக்கத் தொடங்கினார்.

    வாயு பகவானும் ஒப்புக் கொண்டபடி தென் திசையில் இருந்து வடதிசை நோக்கிப் பிரளயகாலப் புயல் போல் வீசத் தொடங்கினார்.

    ங்கா தேவியும் ஆஞ்சநேயர் கண்களுக்கு எங்கும் புலப்படாமல் மறைந்து போனார்.

    சுட்டுப் பொசுக்குகின்ற சூரிய வெப்பத்தின் கொடுமை, வேகத்தைக் குறைக்கும் பலமான எதிர்க்காற்று, தன் தோளின் மேல் இருக்கும் சிவலிங்கத்தின் பாரம் இவைகளினால் ஆஞ்சநேயர் விரைவில் களைத்துப் போனார்.

    தாங்க முடியாத தாகத்தோடு குடிதண்ணீரைத்தேடி அலைந்தார்.

    ஆகா, இன்று என்னவாயிற்று. நேற்று இதே வழியாக செல்லும் போது ஆறுகள், குளங்கள், கிணறுகள் எல்லாம் நீர் நிரம்பியிருந்தனவே.

    ஒருநாள் இரவுக்குள் எல்லாம் எப்படி வற்றிப்போயின?

    என்றுமில்லாத அளவில் இன்று ஏன் ஆதவன் இப்படி சுட்டுப் பொசுக்குகிறான்?

    எதிர் காற்றும் பலமாக இருக்கிறதே? முன்பு சஞ்சீவி மலையைப் பெயர்த்தெடுத்து வரும்பேது கூட இத்தனை களைப்பு எனக்கு ஏற்படவில்லையே என்றெல்லாம் பலவாறாக சிந்தித்தப்படியே திருக்காரிக்கரை கிராமத்தை வந்தடைந்தார் மாருதி.

    Next Story
    ×