search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தேவர்களுக்கு உதவிய விஷ்ணு சாபமிட்ட சுக்ராச்சாரியார் - கஞ்சனூர் வரலாறு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தேவர்களுக்கு உதவிய விஷ்ணு சாபமிட்ட சுக்ராச்சாரியார் - கஞ்சனூர் வரலாறு

    • கஞ்சனூரில் மட்டும் சிவபெருமானே லிங்க வடிவில் சுக்கிரனாக காட்சி தருகிறார்.
    • தேவர்களுக்கு திருமால் மோகினி உருவம் கொண்டு அசுரர்களை ஏமாற்றி அமுதத்தைத் தந்தருளினார்.

    நவக்கிரக தலங்களில் 8 தலங்களில் அந்தந்த கிரக தேவதைகள் தனித்தனியாக எழுந்தருளி உள்ளார்கள்.

    ஆனால் கஞ்சனூரில் மட்டும் சிவபெருமானே லிங்க வடிவில் சுக்கிரனாக காட்சி தருகிறார்.

    அதன் விளக்கம் அறிவோமா?

    திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் அருந்த எண்ணிய தேவர்கள் மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற் கடலைக் கடையத் தொடங்கினர்.

    அப்போது இறுக்கம் தாங்காமல் வாசுகியானது தன்னை அறியாமல் விஷத்தை உமிழ்ந்தது.

    பாம்பின் கொடிய விஷத்தின் உஷ்ணத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவர்கள் பாம்பின் தலைப் பகுதியை அசுரர்களை இழுக்க சொல்லி, வால் பாகத்தை தாங்கள் பிடித்துக் கொண்டு கடையத் துவங்கினர்.

    நீண்ட முயற்சிக்கு பின் அமுதம் வெளியே வந்தது .

    இதனை கண்டு மனம் மகிழ்ந்த தேவர்களுக்கு திருமால் மோகினி உருவம் கொண்டு அசுரர்களை ஏமாற்றி அமுதத்தைத் தேவர்களுக்கு தந்தருளினார்.

    இதனால் கோபமுற்ற அசுர குரு சுக்ராச்சார்யர் தேவர்களை நோக்கி "வேதங்களையும், தர்ம சாஸ்திரங்களையும் உணர்ந்த நீங்கள் உழைப்பில் பங்கு கொண்ட அசுரர்களுக்கு அதன் பலனில் பங்களிக்காமல் துரோகம் செய்துவிட்டீர்கள்!

    அமுதம் உண்டதால் இறவாத்தன்மை பெற்ற நீங்கள் மனைவி, மக்கள், நாடு, நகரம் அனைத்தும் இழந்து தேவலோகத்தை விட்டு பூலோகம் சென்று அல்லல்படுவீர்களாக" என சாபமிட்டார்.

    Next Story
    ×