search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஏகாதசி அனுஷ்டிக்க வேண்டிய முறை
    X

    ஏகாதசி அனுஷ்டிக்க வேண்டிய முறை

    • பழங்களை நிவேதனம் செய்து பூஜிப்பது மத்யமம்.
    • பற்றில்லாத பலகாரங்களை ஒரு வேளை பூஜிப்பது அதமம்.

    ஏகாதசியன்று அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்ய வேண்டும்.

    நித்ய கர்மங்களை விதிப்படி அனுஷ்டிக்க வேண்டும்.

    ஏகாதசியன்று துளசி இலை பறிக்கலாகாது. ஆதலால் முதல் நாளே பூஜிப்பதற்கு அதை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    மகா விஷ்ணுவுக்கு வேத விதிப்படி பூஜை செய்ய வேண்டும்.

    அன்று சக்தியிருப்பின் நிர்ஜலமாக இருப்பது உத்தமம்.

    பழங்களை நிவேதனம் செய்து பூஜிப்பது மத்யமம். பற்றில்லாத பலகாரங்களை ஒரு வேளை பூஜிப்பது அதமம்.

    ஒரு வேளை அரிசியை வறுத்து அன்னமாக உட்கொண்டு இரவு உபவாசமிருப்பது அகமாதமம்.

    பழங்களை நிவேதனம் செய்து பூஜிப்பது மத்யமம். பற்றில்லாத பலகாரங்களை ஒரு வேளை பூஜிப்பது அதமம்.

    ஒரு வேளை அரிசியை வறுத்து அன்னமாக உட்கொண்டு இரவு உபவாசமிருப்பது அகமாதமம்.

    சக்தியில்லாவர் கடைசி வழியை பின்பற்றலாம். அன்று எவருக்கும் அன்னதானம் செய்யக்கூடாது. பகலில் தூங்கக்கூடாது.

    இரவில் பகவத் பஜனை அல்லது புண்ய கதாச்ரவணம் முதலியவைகளால் கண்விழிக்க வேண்டும்.

    கோபம், பரநிந்தை, க்ரூரமான வார்த்தை, கலஹம், தாம்பூலம், சந்தனம், மாலை, கண்ணாடி பார்த்தல், ஸ்த்ரீ ஸங்கம் முதலியவைகளை விட வேண்டும்.

    எப்போதும் அவர் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும்.

    துவாதசியன்று காலைக்கடனை முடித்து பகவத் பூஜை செய்ய வேண்டும்.

    ஓர் அதிதிக்கு அன்னமளித்து நாம் பூஜிக்க வேண்டும்.

    அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக் காய் இவைகளை அவசியம் பூஜிக்க வேண்டும்.

    இங்ஙனம் ஓர் பக்ஷத்திற் கோர்முறை ஏகாதசி உபவாசமிருந்தால் தேக ஆரோக்கியம் உண்டாகும்.

    பாபம் அகலும், சந்ததி, செல்வம் பெருகும், சுவர்க்கம் கிட்டும். மனம் நிர்மலமாகும். ஞானம் சுரக்கும். மோட்ச நந்தம் பெறுவர்.

    ஏகாதசி விரதம் அன்று செப்புக் கிண்ணியில் ஜலம் வைத்து அதில் துளசி தளம் போட்டு வைத்து நீர் மட்டும் பருகுவார்கள்.

    ஒரு சிலர் "நிர்ஜலோபவாசம்" அதாவது ஜலமின்றி உமி நீர்க் கூட பருகாமல் இருப்பதுண்டு.

    ஏகாதசி விரதம் எல்லோருக்கும், முக்கியமாக மத்வமதஸ்தர்கள் வெகு சிறப்பாக அனுஷ்டானம் செய்வார்.

    "ஏகாதசி மரணம், துவாதசி தகனம்" என்ற பழமொழிப்படி ஏகாதசி திதியில் ஒருவன் காலமாவதும், அடுத்த திதியாகிய துவாதசியில் உடல் தகனம் செய்வதும் வெகு புண் ணிய பலமாக கூறுகிறது.

    ஏகாதசி உபவாச மிருந்து, துவாதசி அதிகாலையில் நீராடி இறைவனைப் பூஜித்து ஒருவருக்கு வஸ்திரம், அன்னதானம், தாம்பூலம், தட்சிணை வழங்குவது மிகச்சிறந்த பலனை அளிக்கிறது.

    Next Story
    ×