search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பிரெஞ்சு ஆட்சியில் செய்யப்பட்ட மணி
    X

    பிரெஞ்சு ஆட்சியில் செய்யப்பட்ட மணி

    • இவையல்லாமல், அன்னை ஞானாம்பிகை சன்னதியின் முன்மண்டபத்தில் ஒரு காண்டாமணியும் உள்ளது.
    • முதல் மூன்று மணிகளின் அமைப்பும், நான்காவது மணியின் அமைப்பும் வேறுபட்டுள்ளன.

    கொடிமரத்தின் மேற்கேயுள்ள பால விநாயகர், பால சண்முகர் சன்னதிகளின் உச்சியில், இரண்டு பெரிய காண்டாமணிகளும், காசி விசுவநாதர் சன்னதியின் மேல் ஒரு பெரிய காண்டாமணியும் உள்ளன.

    இவையல்லாமல், அன்னை ஞானாம்பிகை சன்னதியின் முன்மண்டபத்தில் ஒரு காண்டாமணியும் உள்ளது.

    முதல் மூன்று மணிகளின் அமைப்பும், நான்காவது மணியின் அமைப்பும் வேறுபட்டுள்ளன.

    அன்னை சன்னதியில் உள்ளது பிரஞ்சுக்காரர்கள் ஆட்சியின்போது செய்த மணி- தொப்பி கவிழ்த்தது போன்ற தோற்றத்துடன் உள்ளது.

    கோவிலின் மேற்கு சுற்றின் மேல்பாகத்தில் உள்ள கன்னி மூல விநாயகர், மகா விஷ்ணு, கெஜலட்சுமி ஆகிய சிலைகளும், அன்னை ஞானாம்பிகை சன்னதியின் வலப்பக்கம் தனித்திருக்கக்கூடிய விநாயகர் சிலையும் பழமை வாய்ந்தது எனக் கருத முடிகின்றது.

    சிவன் சன்னதியின் உட்புறம் முன்மண்டப வலது பக்கமாக, ஒரு பழைய கால விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    வள்ளி, தெய்வானை உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமி சன்னதியில் உள்ள வள்ளி, தெய்வானை சிலைகளில் பால் அபிஷேகத் தின்போது "நிறமாற்றம்" உண்டாவதை காணலாம்.

    Next Story
    ×