என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

கணபதி என்றிட கலங்கும் வல்வினை
- ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு விதமான வழிபாட்டை கையாளுகிறோம்.
- ஆனால் அவை அனைத்துக்கும் பொதுவாகவும் முதன்மையானதாகவும் இருப்பது விநாயகர் வழிபாடுதான்.
இந்து சமயத்தில் எத்தனையோ கடவுள்கள் வழிபடப் படுகின்றன.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு விதமான வழிபாட்டை கையாளுகிறோம்.
ஆனால் அவை அனைத்துக்கும் பொதுவாகவும் முதன்மையானதாகவும் இருப்பது விநாயகர் வழிபாடுதான்.
அதனால்தான் விநாயகரை நாம் முழு முதற்கடவுள் என்று அழைக்கிறோம்.
வேறு எந்த தெய்வத்துக்கும் இந்த சிறப்பு இல்லை.
எனவே எப்போது இறைவழிபாட்டை தொடங்கினாலும் விநாயகருக்கு முதல் மரியாதையை நாம் அளிக்க வேண்டும்.
"கணபதி பூஜை கைமேல் பலன்" என்று சொல்வார்கள்.
நாம் எந்த செயலை தொடங்கினாலும் முதலில் விநாயகரை நினைத்துக் கொண்டு அந்த செயலை தொடங்கினால் நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும் என்பது இதன் அர்த்தமாகும்.
கணபதி என்றிட கலங்கும் வல்வினை என்று சொல்வது இதனால்தான்.
கணபதி என்றால் பக்தர்களின் அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞானம் கொடுத்து பரிபூரண முக்தி நிலையை தரும் தலைவன் என்று அர்த்தமாகும்.






