என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
குரு தோஷம் விலகும் தலம்
- 'பூலோகத்தில் ஓர் ஏழையாகப் பிறக்கக் கடவது!' என்று சாபம் கொடுத்தான்.
- ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோவில், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
ஒரு முறை 'சிறந்தது இல்லறமா? துறவறமா?' என்ற தர்க்கம் எழுந்தபோது, 'துறவறமே சிறந்தது!' என்று தீர்ப்பளித்தார் பிரகஸ்பதி.
மாற்றுக் கருத்து கொண்ட இந்திரன் கோபம் கொண்டான்.
'பூலோகத்தில் ஓர் ஏழையாகப் பிறக்கக் கடவது!' என்று சாபம் கொடுத்தான்.
அதன்படி பூமியில் ஏழையாகப் பிறந்து உணவுக்கு வழியில்லாமல் துன்புற்றார் பிரகஸ்பதி.
இந்த நிலையில் ஒரு நாள் அவர் உணவருந்தும்போது நாய் ஒன்று தொல்லை தந்தது.
அவர் அதை விரட்டினார். கோபம் கொண்ட நாய், 'நீ நாயாக பிறப்பாய்!' என்று அவரை சபித்தது.
இதனால் மிகவும் வருந்திய பிரகஸ்பதி இறுதியில், பரத்வாஜ முனிவரின் அறிவுரைப்படி இங்கு வந்து பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் பெற்றாராம்.
எனவே, இங்கு வழிபட்டால் குரு தோஷங்கள் அகலும் என்பது ஐதீகம்.
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
தொண்டரடிப்பொடி வாயில் கோபுரம், ஸ்ரீகருடன் சந்நிதி வாயில் கோபுரம் உட்பட இன்னும் 4 கோபுரங்களும் உண்டு.
புண்ணியகோடி விமானமும், புனரமைக்கப்பட்டு 27.1.1991-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.