என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![குருவிற்கு காட்சி கொடுத்த பெருமாள்-குருவித்துறை ஸ்தலம் குருவிற்கு காட்சி கொடுத்த பெருமாள்-குருவித்துறை ஸ்தலம்](https://media.maalaimalar.com/h-upload/2024/04/30/2127205-09.webp)
X
குருவிற்கு காட்சி கொடுத்த பெருமாள்-குருவித்துறை ஸ்தலம்
By
மாலை மலர்30 April 2024 5:17 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லப பெருமாள் என அழைக்கப்படுகிறார்.
- சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இறைவனை வழிபாடு செய்கின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கருகில் இருக்கும் ஊர் குருவித்துறை.
இங்கு சித்திரரத வல்லபப் பெருமாள் ஆலயம் உள்ளது.
குருவின் பிரச்சினையைத் தீர்த்து சிறப்பாக அவருக்குக்காட்சி தந்தருளிய பெருமாள் இவர்.
குருவின் தவத்தால் மகிழ்ந்த நாராயணன் சித்திர வேலைப்பாடுடன் அமைந்த தேரில் வியாழ பகவானுக்கு காட்சி தந்து, கசனை மீட்டு தந்தார்.
இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லப பெருமாள் என அழைக்கப்படுகிறார்.
சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர்.
இந்த ஆலயத்தின் வெளியே குரு பகவானுக்குத் தனிக் கோவில் உள்ளது.
வைஷ்ணவக் கோவிலில் இப்படி குருபகவான் குடி இருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச் சிறப்பு.
Next Story
×
X