என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
இறைவழிபாட்டில் மலர்களின் முக்கியத்துவம்
- நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஒரிதழ் ஆகியன நன்மை தரும்.
- மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மரிக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியவை உகந்தன.
காலை நேரத்தில் தாமரை, பூவரசம்பூ, துளசி, நவமல்லிகை, நத்தியாவட்டை, மந்தாரை, முல்லை, செண்பகம், புன்னாகரம் (தாழை & இம்மலர் சிவவழிபாட்டில் பயன்படுத்தலாகாதது) ஆகிய பத்துவித மலர்களால் வழிபட வேண்டும்.
நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஒரிதழ் ஆகியன நன்மை தரும்.
மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மரிக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியவை உகந்தன.
அஷ்ட புஷ்பங்கள்:
அறுகு, செண்பகம், புன்னாகரம், நத்தியாவட்டை, பாதிரி, பிருகதி, அரளி, தும்மை ஆகிய அஷ்ட புஷ்பங்கள் என்று அழைக்கப்படுகிறது.
பூக்களை எத்தனை நாட்கள் வைத்து இருக்கலாம்?
தாமரை ஐந்து நாட்களுக்குள்ளும், அரளி மூன்று நாட்களுக்குள்ளும், வில்வம் ஆறுமாதத்திற்குள்ளும், துளசி மூன்று மாதத்திற்குள்ளும், தாழம்பூ ஐந்து நாட்களுக்குள்ளும், நெய்தல் மூன்று நாட்களுக்குள்ளும், செண்பகம் ஒரே நாளுக்குள்ளும், விஷ்ணுகிரந்தி மூன்று நாட்களுக்குள்ளும், விளாமிச்சை எப்போதும் பயன்படுத்தலாம்.
கையில் கொண்டு வந்தது, தானாக விழுந்தது, காய்ந்தது, முகர்ந்துப்பார்க்கப்பட்டது, அசுத்தமான இடம், பொருள்களில் வைக்கப்பட்டது ஆகியன பூஜைக்கு ஆகாதனவாம்.
மலர்களைக் கிள்ளிச் சாத்தக்கூடாது (முழு மலராகவே சாத்த வேண்டும்). இலைகளைக் கிள்ளி சாத்தலாம்.
வில்வம், துளசி முதலியவற்றைத் தளமாகச் சாத்த வேண்டும்.
பூஜைக்குரிய இலைகள்:
துளசி, முகிழ், சண்பகம், தாமரை, வில்வம், கல்ஹாரம், மரிக்கொழுந்து, மருதாணி, தர்ப்பம், அறுகு, அசிவல்லி, நாயுறுவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி முதலியவற்றின் இலைகள் பூஜைக்குரியவையாக கருதப்படுகிறது.
பஞ்ச வில்வங்கள்:
முல்லை, கிளுவை, நெச்சி, வில்வம், விளா ஆகியவை பஞ்ச வில்வமாக வரையறுக்கப்பட்டுள்ளது.